இந்தியாவில் அறிமுகமான சாம்சங்கின் வளைந்த கேமிங் மானிட்டர் - விலை எவ்வளவு தெரியுமா?
- சாம்சங் ஒடிசி OLED G9 மானிட்டரில் மேம்பட்ட நியோ குவான்டம் பிராசஸர் ப்ரோ உள்ளது.
- இந்த மானிட்டரில் கோர்-சின்க் மற்றும் கோர் லைட்னிங் பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
சாம்சங் இந்தியா நிறுவனம் ஒடிசி OLED G9 கேமிங் மானிட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேமிங் மானிட்டர் நியோ குவான்டம் பிராசஸர் ப்ரோ கொண்டிருக்கிறது. 49-இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் சாம்சங் ஒடிசி OLED G9 கேமிங் மானிட்டரில் 1080R கர்வேச்சர், டூயல் குவாட் ஹை டெஃபனிஷன் (DQHD) 5120x1440 பிக்சல் ரெசல்யூஷன் உள்ளது.
இரண்டு QHD ஸ்கிரீன்களை அருகில் வைத்துக் கொண்டு பயன்படுத்துவதை போன்ற அனுபவத்தை இந்த மானிட்டர் கொடுக்கும். கேமர்கள் இந்த மானிட்டரில் 0.03ms கிரே-டு-கிரே ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் 240Hz ரிப்ரெஷ் ரேட் பெறமுடியும். இந்த மெல்லிய மானிட்டர் அழகிய டிசைன் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கிறது.
இத்துடன் கோர்சின்க் மற்றும் கோர் லைட்னிங் பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இவை கேமிங்கின் போது அதிக தரமுள்ள கிராஃபிக்ஸ்-ஐ வெளிப்படுத்துவதோடு தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் பில்ட்-இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருப்பதால், காட்சிகளுக்கு ஏற்ற ஆடியோவையும் மானிட்டரிலேயே கேட்க முடியும்.
சாம்சங் ஒடிசி OLED G9 மானிட்டரில் மேம்பட்ட நியோ குவான்டம் பிராசஸர் ப்ரோ உள்ளது. இந்த சிப்செட் டீப் லெர்னிங் அல்காரிதம் கொண்டு புகைப்படங்களை சிறப்பாக மேம்படுத்தி, அசத்தலான காட்சிகளை காண்பிக்க செய்கிறது. இந்த மானிட்டர் ஸ்மார்ட் டிவி அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்ன்ட் மற்றும் தலைசிறந்த சினிமா தரத்தை வழங்குகிறது.
இதில் உள்ள AMD FreeSync பிரீமியம் ப்ரோ கேம்பிளேவை மேம்படுத்தி சீரான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் டிஸ்ப்ளே-HDR ட்ரூ பிளாக் 400 தொழில்நுட்பம் பிரகாசமான நிறங்களை, அதிக தெளிவாக பிரதிபலிக்கிறது. இத்துடன் ஆட்டோ சோர்ஸ் ஸ்விட்ச் பிளஸ் அம்சம் கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் பயன்பாடுகளுக்கு ஏற்ப தானாக செட்டிங்களை மாற்றிக் கொள்கிறது.
இந்திய சந்தையில் சாம்சங் ஒடிசி OLED G95SC மானிட்டர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்தத்து 99 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கேமிங் மானிட்டர் விற்பனை சாம்சங் ஷாப், அமேசான் மற்றும் முன்னணி மின்சாதன விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.