கணினி

விற்பனையில் புது மைல்கல் எட்டிய PS5 - சோனி அசத்தல்

Published On 2022-11-02 06:04 GMT   |   Update On 2022-11-02 06:04 GMT
  • சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.
  • பிளே ஸ்டேஷன் 5 ஒட்டுமொத்த விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக சோனி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

சோனி நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 (PS5) விற்பனை தொடர்ந்து அமோகாமாக நடைபெற்று வருவதாக அறிவித்து இருக்கிறது. இதுவரை சோனியின் PS5 மாடல் 25 மில்லியனுக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக சோனி தெரிவித்துள்ளது.

கடந்த காலாண்டில் மட்டும் 3.3 மில்லியன் PS5 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 2022 நிதியாண்டில் மட்டும் 18 மில்லியன் PS5 யூனிட்கள் விற்பனையாகும் என சோனி நிறுவனம் கணித்துள்ளது. இந்த நிதியாண்டின் அரையாண்டு வரையில் சோனி நிறுவனம் 5.7 மில்லியன் PS5 யூனிட்களையே விற்பனை செய்து இருக்கிறது. அந்த வகையில் மீதமுள்ள காலக்கட்டத்தில் விற்பனை இலக்கை சோனி எட்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கடந்த ஆண்டில் இருந்தே சோனி நிறுவனம் PS5 விற்பனையில் அதிக வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. அந்த வகையில் வருவாய் மட்டும் 12 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் PS5 விலை உயர்வு காரணமாகவே வருவாய் அதிகரித்து இருக்கிறது. வருவாய் அதிகரித்த போதிலும் லாபம் 49 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

கேம் தயாரிப்பு நிறுவனமான பன்ஜியை சோனி கைப்பற்றியதே லாபம் சரிய காரணமாக கூறப்படுகிறது. பன்ஜி நிறுவனம் தான் ஹாலோ டிரையலஜியை உருவாக்கியது. கடந்த ஆண்டு மட்டும் சோனி நிறுவனம் 11.5 மில்லியன் PS5 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விற்பனை முந்தைய ஆண்டை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

Tags:    

Similar News