சோனியின் புதிய பிரீமியம் வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்
- சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புது வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் ஏராளமான அம்சங்களுடன் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சோனி இந்தியா நிறுவனம் SRS-XV900 ப்ளூடூத் பார்டி ஸ்பீக்கரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது X சீரிசில் அதிக சக்திவாய்ந்த மற்றும் சத்தமான ஸ்பீக்கர் ஆகும். சோனி நிறுவனத்தின் "Live Life Loud" எனும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உலகளாவிய இசை பிரியர்களுக்கு தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய சோனி SRS-XV900 ஸ்பீக்கர் ஆம்னிடைரக்ஷனல் பார்டி சவுணஅட் வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள X-பேலன்ஸ்டு ஸ்பீக்கர் யூனிட்டின் வட்ட வடிவமில்லா ஸ்பீக்கர் பகுதி அதிக சவுண்ட் பிரெஷர் மற்றும் குறைந்த டிஸ்டார்ஷன் வழங்குகிறது. மேலும் இதில் உள்ள ஜெட் பாஸ் பூஸ்டர் ஆழமான மற்றும் சக்திவாய்ந்த பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் சவுண்ட் பூஸ்டர் அம்சம் டிவி சவுண்ட்-ஐ மேம்படுத்துகிறது.
SRS-25 மணி நேர SRS-XV900 பேட்டரி நீண்ட நேர பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றி இருக்கிறது. மேலும் இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். மேலும் பேட்டரி கேர் மோட் மூலம் ஓவர்சார்ஜிங் தவிர்க்கப்படும். இதன் மூலம் ஸ்பீக்கர் அதிக தரமுள்ளதாக நீடித்து உழைக்கும். மெகா பேஸ் அம்சம் ஸ்பீக்கரின் பேஸ்-ஐ பூஸ்ட் செய்து சக்திவாய்ந்த சவுண்ட் வழங்குகிறது.
புதிய சோனி ஸ்பீக்கரில் மைக் மற்றும் கிட்டார் இன்புட் போன்ற வசதிகள் உள்ளன. இதை கொண்டு ஸ்பீக்கரை ஆம்ப் போன்றும் பயன்படுத்தலாம். ஸ்பீக்கரின் டாப் டச் பேனலில் அனைத்து அம்சங்களையும் இயக்கும் வசதியை வழங்குகிறது. இதில் செட்டிங்ஸ் மற்றும் லைட் என எல்லாவற்றையும் இயக்க முடியும்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சோனி SRS-XV900 ஸ்பீக்கரின் விலை ரூ. 79 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அனைத்து சோனி செண்டர்கள், முன்னணி மின்சாதன விற்பனையகங்கள், முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.