கணினி

வாட்ஸ்அப்-இல் Polls அம்சம் அறிமுகம் - எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?

Published On 2022-11-18 04:57 GMT   |   Update On 2022-11-18 04:57 GMT
  • உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் இருக்கிறது.
  • பயனர்களுக்கு தொடர்ந்து புதுப்பது அம்சங்களை வழங்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது.

வாட்ஸ்அப் செயலியில் "Polls" உருவாக்கும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் மட்டும் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. வரும் நாட்களில் வாட்ஸ்அப் வெப் தளத்திலும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

முதற்கட்டமாக வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் சாட் மற்றும் தனிநபர் உரையாடல்களில் Polls அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் வாட்ஸ்அப் Polls-இல் கேட்கும் கேள்வியில் அதிகபட்சம் 12 பதில்களை ஆப்ஷனாக வழங்க முடியும். மேலும் ஒரே பதிலை இரு ஆப்ஷனாக வழங்க முற்பட்டால், வாட்ஸ்அப் அதனை எச்சரிக்கை செய்யும்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் வாட்ஸ்அப் Polls பயன்படுத்துவது எப்படி?

முதலில் உங்களின் ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனத்தில் வாட்ஸ்அப் செயலி அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின் தனிநபர் அல்லது க்ரூப் சாட் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஐஒஎஸ்-இல் வழக்கமாக குறுந்தகவல்களை டைப் செய்யும் இடத்தின் அருகில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டில் சாட் பாக்ஸ்-இன் அங்கமாக இருக்கும் "பேப்பர்-கிளிப்" ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு தளங்களிலும் மெனு ஆப்ஷன் திறக்கும். அந்த மெனுவின் இறுதியில் Polls ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும். இனி Poll ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் மற்றொரு மெனு திறக்கும். அதில் Poll கேள்வி மற்றும் பதில்களை சேர்க்கக் கோரும். இவ்வாறு செய்து முடித்ததும் அதனை அனுப்பலாம்.

நீங்கள் Poll அனுப்பியவர்கள், அதற்கான பதிலை கிளிக் செய்ய முடியும். Poll-இன் இறுதியில் அதற்கு கிடைத்த பதில்களை பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு Poll-க்கும் எத்தனை வாக்குகள் கிடைத்தன. எந்த பதிலை அதிகம் பேர் தேர்வு செய்தனர் என்ற விவரங்களை பார்க்க முடியும்.

Tags:    

Similar News