கணினி

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ Report செய்யும் வசதி - விரைவில் வெளியீடு?

Published On 2022-12-28 05:07 GMT   |   Update On 2022-12-28 05:07 GMT
  • வாட்ஸ்அப் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் புது அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
  • முதற்கட்டமாக புது அம்சம் வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் ஸ்டேட்டஸ்-ஐ ரிபோர்ட் செய்யும் வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த வசதி கணினி அல்லது லேப்டாப் சாதனங்களில் டெஸ்க்டாப் செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கப்படுகிறது. தற்போது போலியான குறுந்தகவல்களை ரிபோர்ட் செய்யும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கிறது.

எனினும், தற்போதைய அப்டேட் செயலியை மேலும் பாதுகாப்பான ஒன்றாக மாறி இருக்கிறது. புது அப்டேட் மூலம் பயனர்கள் எதிர்கொள்ளும் போலி அல்லது சர்ச்சைக்குரிய ஸ்டேட்டஸ் அப்டேட்களை ரிபோர்ட் செய்யலாம். ஸ்டேட்டஸ் பகுதியில் உள்ள புது மெனுவில் ரிபோர்ட் செய்வதற்கான ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. ரிபோர்ட் செய்யப்படும் ஸ்டேட்டஸ் பற்றிய விவரங்கள் வாட்ஸ்அப்-க்கு அனுப்பப்படும்.

அழைப்புகள், குறுந்தகவல், மீடியா, லொகேஷன் ஷேரிங், ஸ்டேட்டஸ் அப்டேட் போன்றே ரிபோர்ட் செய்யப்படும் குறுந்தகவல்களும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இவ்வாறு என்க்ரிப்ட் செய்யப்படும் குறுந்தகவல்களை யாராலும் பார்க்க முடியாது. தற்போது இந்த அம்சம் டெஸ்க்டாப் பீட்டா வெர்ஷனஷில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த அம்சம் எதிர்கால அப்டேட்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

சமீபத்திய தகவல்களின் படி வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷனில் புது ஸ்கிரீன் லாக் வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுவதாக கூறப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் கடவுச்சொல் வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு செயலியை திறக்க பயனர்கள் பாஸ்வேர்டு பதிவிட வேண்டும்.

Photo Courtesy: wabetainfo.com

Tags:    

Similar News