சியோமியின் அடுத்த டேப்லெட் மாடல் இது தான் - வெளியீடு எப்போ தெரியுமா?
- இந்தியாவில் பேட் 6 மாடலின் ஸ்டான்டர்டு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய சியோமி டேப்லெட் விவரங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
சியோமி நிறுவன டேப்லெட் மாடல்கள் தொடர்ந்து விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சமீபத்தில் சியோமி அறிமுகம் செய்த பேட் 6 மாடல் கடந்த வாரம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது. சியோமி பேட் 6 மாடலில் அசத்தலான ஹார்டுவேர் உள்ளது. இதன் விலை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சீனா போன்று இல்லாமல், இந்தியாவில் பேட் 6 மாடலின் ஸ்டான்டர்டு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டாப் எண்ட் சியோமி பேட் 6 ப்ரோ மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இந்த நிலை விரைவில் மாறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும், புதிய டேப்லெட் சியோமி பேட் 6 மேக்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
மேலும் இந்த டேப்லெட் விவரங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சியோமி நிறுவனத்தின் சர்வதேச சந்தை வெளியீடுகளில் புதிய டேப்லெட் ஆக சியோமி பேட் 6 மேக்ஸ் இணைய இருக்கிறது. ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் இந்த டேப்லெட் 230778KB5BC எனும் மாடல் நம்பருடன் பட்டியலிடப்பட்டு உள்ளது.
ப்ளூடூத் லிஸ்டிங்கில் சியோமி பேட் 6 மேக்ஸ் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என்று மட்டும் எதிர்பார்க்க முடியும். சர்வதேச சந்தையில் சியோமி பேட் 6 மேக்ஸ் சியோமி பேட் 5 ப்ரோ 12.4 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகிறது. மேலும் இது சியோமி பேட் 6 ப்ரோ மாடலின் ரிபிரான்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை சியோமி பேட் 6 மேக்ஸ் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 8600 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.