கணினி
null

சியோமி பேட் 6 பன்டில் இந்தியாவில் அறிமுகம் - எதற்கு தெரியுமா?

Published On 2023-06-17 02:06 GMT   |   Update On 2023-06-17 02:08 GMT
  • சியோமி நிறுவனத்தின் புதிய பேட் 6 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • புதிய டேப்லெட் வாங்குவோருக்காக சியோமி நிறுவனம் பன்டில்ஸ் வசதியை அறிவித்து இருக்கிறது.

சியோமி நிறுவனம் புதிய பேட் 6 டேப்லெட் மாடலை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. மிட் ரேன்ஜ் பிரிவில் இது சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப்லெட் மாடல் ஆகும். எனி்னும், இதில் ஃபிளாக்ஷிப் தர ஹார்டுவேர் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், சியோமி நிறுவனம் புதிய பேட் 6 டேப்லெட்-ஐ வாங்குவோருக்காக புதிதாக பன்டில்ஸ் (Bundles) அறிவித்து இருக்கிறது. இதில் புதிய டேப்லெட் உடன் பயனர்களுக்கு ஸ்மார்ட் பென், கீபோர்டு மற்றும் பேக் கவர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

சியோமி பேட் 6 பன்டில்ஸ்-இல் முதல் பன்டில் உடன் சியோமி ஸ்மார்ட் பென் (2nd Gen) மற்றும் சியோமி பேட் 6 கீபோர்டு வழங்கப்படுகிறது. இந்த கீபோர்டில் 1.3mm கீ டிராவிலில் 64 கீ உள்ளன. இவற்றை குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் எவ்வித சிரமம் இன்றி பயன்படுத்த முடியும். 6 ஜிபி ரேம் வெர்ஷனின் துவக்க விலை ரூ. 34 ஆயிரத்து 997 ஆகும். 8 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 36 ஆயிரத்து 997 ஆகும்.

அடுத்த பன்டிலில் ஸ்மார்ட் பென் மற்றும் சியோமி பேட் 6 பேக் கவர் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 31 ஆயிரத்து 497 என துவங்குகிறது. இதன் டாப் என்ட் விலை ரூ. 33 ஆயிரத்து 497 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பொழுதுபோக்கிற்காக அறிவிக்கப்பட்டு இருக்கும் மற்றொரு பன்டிலில் பேக் கவர் மட்டும் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 25 ஆயிரத்து 498 மற்றும் ரூ. 27 ஆயிரத்து 498 ஆகும்.

சியோமி பேட் 6 மாடலில் 11 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, அதிகபட்சம் 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், LPDDR5 ரேம், UFS 3.1 மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14, 14MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News