மொபைல்ஸ்
null

இந்தியாவில் அறிமுகமான புது ஒப்போ ஏ3 ப்ரோ

Published On 2024-06-21 15:09 GMT   |   Update On 2024-06-21 15:42 GMT
  • 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செகண்டரி கேமரா என டூயல் ரியர் கேமரா உண்டு.
  • செல்பி மற்றும் வீடியோ கால் அமைப்புக்கும் என 8 எம்பி கேமரா உள்ளது.

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ3 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் டிமென்சிட்டி சிப்செட், 5100 எம்ஏஎச் பேட்டரி, 50 எம்பி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்த போனின் வடிவமைப்பு அருமையாக உள்ளது.

ஒப்போ ஏ3 ப்ரோ போனின் சிறப்பு அம்சங்கள்:

6.67 இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன், 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டு, 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், புளூ கிளாஸ் டபுள் டெம்பர்டு கிளாசுடன் பெரிய டிஸ்பிளே உள்ளது.

மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரு வேரியண்ட்கள். கூடுதலாக மெமரி நீட்டிப்பும் உண்டு.

ஆண்ட்ராய்டு 14 சார்ந்த கலர் ஓ.எஸ். பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதி.

50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செகண்டரி கேமரா என டூயல் ரியர் கேமராவுடன் செல்பிகளுக்கும், வீடியோ கால் அமைப்புக்கும் என்றே 8 எம்பி கேமரா உள்ளது. எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உண்டு.

ஐபி 54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்.

3.5 எம்எம் ஆடியோ ஜாக்.

5100 எம்ஏஎச் பேட்டரி வசதி. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

மூன்லைட் பர்பிள் மற்றும் ஸ்டேரி பிளாக் நிறங்களில் கிடைக்கும் இந்த போனை பிளிப்கார்ட், அமேசான் தளங்களில் வாங்கலாம். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ3 புரோ போன் ரூ.17,999 விலையிலும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.19,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News