மொபைல்ஸ்

கோப்புப்படம் 

ஐபோன் தோற்றத்தில் புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஒப்போ?

Published On 2024-06-24 08:14 GMT   |   Update On 2024-06-24 08:14 GMT
  • மத்தியில் பன்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
  • ஸ்மார்ட்போனின் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் உள்ளது.

ஒப்போ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இத்துடன் வெளியான புகைப்படங்களில் இந்த ஸ்மார்ட்போன் ஐபோனில் உள்ளதை போன்ற கேமரா மாட்யுல் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

அதன்படி புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் ஐபோன் 12 மாடலில் உள்ளதை போன்ற கேமரா மாட்யுல்- இரண்டு சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இதை சுற்றி சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் உள்ளது. கேமரா சென்சார்களின் அருகில் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. தற்போதைய புகைப்படத்தின் படி இந்த ஸ்மார்ட்போன் நீல நிறத்தில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

 


புதிய ஒப்போ ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வழங்கப்படுகிறது. கீழ்புறத்தில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், மைக், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மா்ட்போன் ஃபிளாட் டிஸ்ப்ளே மற்றும் மத்தியில் பன்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் Full HD+ LCD ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில், இந்தியாவிலும் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

Tags:    

Similar News