மொபைல்ஸ்

உலகத்தில் முதல் முறையாக 4 வருட வாரண்டியுடன் வரும் முதல் ஸ்மார்ட்போன்

Published On 2024-06-25 05:35 GMT   |   Update On 2024-06-25 05:35 GMT
  • மோட்டோரோலா ரேசர் 50 மற்றும் ரேசர் 50 அல்ட்ரா ஆகிய மாடல்களுடன் புதிய மோட்டோ S50 நியோ மாடலும் அறிமுகமாக உள்ளது.
  • மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட போஸ்டரில் மோட்டோ S50 நியோ வாரண்டி பற்றி அறிவித்து இருந்தது.

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) ஸ்மார்ட்போனை 4 வருட உத்தரவாதத்துடன் (வாரண்டி) விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

உலகத்தில் முதல் முறையாக 4 வருட வாரண்டியை தரும் முதல் ஸ்மார்ட்போனாக மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) வெளிவர இருக்கிறது. இந்த போனின் மற்ற சிறப்பம்சம் மற்றும் விலை பற்றிய விபரங்களை விரிவாக பார்க்கலாம்.

மோட்டோரோலா ரேசர் 50 மற்றும் ரேசர் 50 அல்ட்ரா ஆகிய மாடல்களுடன் புதிய மோட்டோ S50 நியோ மாடலும் அறிமுகமாக உள்ளது. இந்த போனுக்கு சீனாவில் 4 ஆண்டு வாரண்டி வழங்குவதாக மோட்டோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வகையில் நீண்ட கால உத்தரவாதத்துடன் வெளியாகும் உலகின் முதல் போனாக மோட்டோ S50 நியோ வெளியாக இருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட போஸ்டரில் மோட்டோ S50 நியோ வாரண்டி பற்றி அறிவித்து இருந்தது. போஸ்டரில் மோட்டோ S50 நியோ ஸ்மார்ட்போன் சாதனம் 4 வருட வாரண்டியை பெறும் என்று நிறுவனம் விளம்பரம் செய்தது. ஆச்சரியப்படும் விதமாக இதுவரை எந்தவொரு நிறுவனமும் வழங்காத ஒரு வாரண்டியை மோட்டோரோலா தற்போது வழங்கி உள்ளது.

Tags:    

Similar News