மொபைல்ஸ்

V60 மற்றும் V60s ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ரியல்மி

Published On 2024-06-22 15:42 GMT   |   Update On 2024-06-22 15:42 GMT
  • 6GB ரேம், 128GB ரேம் ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி V60 போன் இந்திய மதிப்பில் 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • 8GB ரேம், 256GB ரேம் ஸ்டோரேஜ் கொண்ட போன் 16 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிறுவனம் V60 மற்றும் V60s ஸ்மார்ட்போன்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவில் அல்ல, சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

8GB ரேம் கொண்டதாகவும், 32 மெகா பிக்சல் ரியர் கேமரா கொண்டதாகவும், 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. 10வாட் சார்ஜ் வகதி கொண்டுள்ளது. அண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்டது.

6GB ரேம், 128GB ரேம் ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி V60 போன் இந்திய மதிப்பில் 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8GB ரேம், 256GB ரேம் ஸ்டோரேஜ் கொண்ட போன் ஹெட்செட் உடன் 16 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி V60s-ன் தொடக்க விலை 16 ஆயிரத்து 100 ரூபாய் ஆகும். 8GB ரேம், 256GB ரேம் ஸ்டோரேஜ் கொண்ட போன் 20 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு வகையிலான போன்களும் ஸ்டார் கோல்டு மற்றும் Turquoise கிரீன் கலர்களில் கிடைக்கிறது. ரியல்மியின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் ஹெட்செட் வாங்கிக் கொள்ளலாம்.

இரண்டு வகையான போன்கள் டுயல் சிம் வசதி கொண்டது. 6.67 இன்ச் ஹெச்டி+ எல்சிடி ஸ்கிரீன் கொண்டது.

சீனாவில் அறிமுகமான V60 சீரியஸ் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News