null
ஸ்கூட்டர் விலையை திடீரென குறைத்த ஓலா எலெக்ட்ரிக் - புதிய விலை எவ்வளவு தெரியுமா?
- வாகனங்களின் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.
- எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் எட்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய EMP திட்டம் காரணமாக மற்ற எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் தங்களது வாகனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.
விலை குறைப்பு காரணமாக ஓலா நிறுவனத்தின் S1 X 2 கிலோவாட் ஹவர் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 69 ஆயிரத்து 999 என குறைந்து இருக்கிறது. S1 X 3 கிலோவாட் ஹவர் வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 84 ஆயிரத்து 999 என குறைந்துள்ளது.
இந்த சீரிசில் டாப் எண்ட் S1 X 4 கிலோவாட் ஹவர் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 99 ஆயிரத்து 999 என குறைந்தது. ஓலா S1 X சீரிஸ் மாடல்களின் வினியோகம் அடுத்த வாரம் முதல் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஓலா S1 X சீரிஸ் விலை குறைந்துள்ள நிலையில், S1 X பிளஸ், S1 ஏர் மற்றும் S1 ப்ரோ மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஓலா S1 X பிளஸ் மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்றும் S1 ஏர் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம், S1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் எட்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.