டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ் - இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய போபண்ணா ஜோடி

Published On 2023-08-10 23:13 GMT   |   Update On 2023-08-10 23:13 GMT
  • கனடா ஓபன் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று போட்டி நடந்தது.
  • இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

மாண்ட்ரியல்:

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி முடிவடைய உள்ளது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜேமி முர்ரே- நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியைச் சந்தித்தது.

இதில் போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

Tags:    

Similar News