பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் இகா ஸ்வியாடெக், கோகோ காப்
- ஒரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் உடன் மோதினார்.
- மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரோசோவா உடன் மோதினார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.
இதில் ஒரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த கோகோ காப் ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.இதன் மூலம் கோகோ காப் 4-6, 6-2, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரோசோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இகா ஸ்வியாடெக் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்கெட்டா வாண்ட்ரோசோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் - கோகோ காப் மோத உள்ளனர்.