டென்னிஸ்

மல்லோர்கா ஓபன் டென்னிஸ்: ஃபோக்கினி, ஹிஜிகட்டா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2024-06-24 13:39 GMT   |   Update On 2024-06-24 13:39 GMT
  • போக்னினி 7(7)-6(4), 7(7)-6(5) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
  • ஹிஜிகட்டா 6-2, 2-6, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

ஸ்பெயின் நாட்டில் மல்கோர்கா சாம்பியன்ஷிப் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ரவுண்ட் ஆஃப் 32-ல் இத்தாலி வீரர ஃபேபியோ ஃபோக்னினி நெர்தலாந்து வீரர் கிஜ்ஸ் பிரவ்வெர்-ஐ எதிர்கொண்டார்.

இதில் போக்னினி 7(7)-6(4), 7(7)-6(5) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டு செட்டும் டை-பிரேக்கர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டா இத்தாலியின் லூகா நர்டியை எதிர்கொண்டார். முதல் செட்டை ஹிஜிகட்டா 6-2 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டில் பதிலடி கொடுத்த நர்டி அந்த செட்டை 6-2 என கைப்பற்றினார்.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் இருவரும் ஆக்ரோசமாக விளையாடினர். என்றாலும ஹிஜிகட்டாவின் கையே ஓங்கியது. அவர் 7-5 என கடும் போராட்டத்திற்குப்பின் 3-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றி 2-1 என வெற்றி பெற்றார்.

Tags:    

Similar News