டென்னிஸ்

மல்லோர்கா ஓபன் டென்னிஸ்: பாம்ப்ரி ஜோடி காலிறுதியில் தோல்வி

Published On 2024-06-26 13:48 GMT   |   Update On 2024-06-26 13:48 GMT
  • முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி கடும் போராட்டத்திற்குப் பிறகு 6(21)- 7(23) என இழந்தது.
  • 2-வது செட்டை 4-6 என இழந்து தோல்வியை தழுவியது.

ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அல்பனோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடி காலிறுதியில் அமெரிக்காவின் வித்ரோ- லம்மோன்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

முதல் செட்டில் இரண்டு ஜோடிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் 6-6 என சமநிலை பெற்ற நிலையில் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரில் மாறிமாறி கேம்ஸை கைப்பற்றினர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு அமெரிக்க ஜோடி 23-21 என தனதாக்கியது. இதனால் முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 6(21)- 7(23) என இழந்தது.

2-வது செட்டை 4-6 என இழக்க நேர்செட்டில் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. மற்றொரு காலிறுதியில் ஜே.கேஷ்- ஆர்.காலோவே ஜோடி 6-1, 6-2 என மார்ட்டினேஸ்- முனார் ஜோடியை வீழ்த்தியது.

Tags:    

Similar News