டென்னிஸ்

பாரிஸ் ஒலிம்பிக்: போபண்ணாவின் ஜோடி பாலாஜியா அல்லது யூகி பாம்ரியா?

Published On 2024-05-20 12:40 GMT   |   Update On 2024-05-20 12:40 GMT
  • உலகத் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருக்கும் வீரர் தனது ஜோடியை தேர்வு செய்ய முடியும்.
  • போபண்ணா முதல் 10 இடத்திற்குள் இருப்பதால் தனது ஜோடியை அவரால் தேர்ந்தெடுக்க முடியும்.

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா. ரோகன் போபண்ணா ஆண்கள் இரட்டையர் பிரிவில் உலகத் தலைவரிசையில் 4-வது இடத்தில் உள்ளார்.

44-வது வயதான இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். உலகக்கோப்பை மற்றும் டென்னிஸ் விதிப்படி தரவரிசை 10-க்குள் இருக்கும் வீரர் தன்னுடன் விளையாடும் வீரரை தேர்வு செய்யலாம்.

அதன்படி இந்திய டென்னிஸ் வீரர்களான என். ஸ்ரீராம் பாலாஜி அல்லது யூகி பாம்ரி ஆகியோரில் ஒருவரை போபண்ணா தனது ஜோடியாக தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.

இரண்டு பேர்களில் ஒருவரை தேர்வு செய்து அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் தெரிவிப்பார். அவர்கள் ஆலோசனை செய்து போபண்ணா பரிந்துரை செய்யும் நபரை தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.

தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களில் இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

பாலாஜி காக்லியாரி சேலஞ்சர் போட்டியில் ஜெர்மன் பார்ட்னருடன் இணைந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

பாம்ரி முனிச்சில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் பார்ட்னருடன் இணைந்து பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 32 ஜோடிகள் கலந்து கொள்ளும். ஒரு நாடு அதிகபட்சமாக இரண்டு ஜோடியை அனுப்ப முடியும்.

பிரெஞ்ச் ஓபன் முடிவடைந்த பிறகு, ஜூன் 10-ந்தேதி தரவரிசை முடிவு செய்யப்படும். கடந்த 2012-ம் ஆண்டு ஜோடி சேர்ந்த விளையாடுவதில் சர்ச்சை ஏற்பட்டது. மகேஷ் பூபதி, போபண்ணா ஆகியோர் லியாண்டர் பயேஸ் உடன் இணைந்து விளையாட மறுத்துவிட்டனர். இதனால் விஷ்னு வர்தன் சேர்ந்து விளையாடினார்.

2018-ல் நடைபெற்ற ஆசிய போட்டியில் சரியான ஜோடியை தரவில்லை என லியாண்டர் பயேஸ், ஆசிய போட்டியில் இருந்து வெளியேறினார். 

Tags:    

Similar News