null
24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்: கூடைப்பந்தாட்ட வீரருக்கு அஞ்சலி செலுத்திய ஜோகோவிச்- வைரலாகும் வீடியோ
- 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.
- 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இந்தப் போட்டியில் 6-3, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதன் மூலம் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.
2008-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய இவர் ஆஸ்திரேலியா ஓபன் பட்டம் 10, விமிள்டன் ஓபன் பட்டம் 7, அமெரிக்க ஓபன் பட்டம் 4 பிரெஞ்சு ஓபன் பட்டம் 3 என ஆக மொத்தம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.
பட்டம் வென்றதும் உடனடியாக தான் அணிந்திருந்த ஜெர்ஸியை மாற்றி கடந்த 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தினார். அவரது ஜெர்ஸி எண் 24 என்பது குறிப்பிடத்தக்கது. தனது 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது குறித்து அந்த எண்ணை சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.