டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் முறை- வரலாற்று சாதனை படைத்த இத்தாலி வீராங்கனை

Published On 2024-07-12 09:14 GMT   |   Update On 2024-07-12 09:14 GMT
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஜாஸ்மின் பவுலினி, வெகிக் உடன் மோதினார்.
  • இதில் பவுலினி 2-6 என முதல் செட்டை இழந்தார்.

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, குரோசிய வீராங்கனை வெகிக் உடன் மோதினார்.

இதில் பவுலினி 2-6 என முதல் செட்டை இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (10-8) என வென்றார். இறுதியில், 2-6, 6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வென்ற பவுலினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பவுலினி பெற்றார்.

Tags:    

Similar News