டென்னிஸ்

தியான அறையை உடலுறவுக்காக பயன்படுத்தக் கூடாது: விம்பிள்டன் நிர்வாகம் எச்சரிக்கை

Published On 2023-07-05 03:12 GMT   |   Update On 2023-07-05 04:39 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் நடைபெறும் இடத்தில் தியானத்திற்கான அறை உள்ளது
  • தியான அறைக்கு ரசிகர்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என நிர்வாகம் வேண்டுகோள்

இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரும் ஒன்று. இந்த போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக உலக ரசிகர்கள், தலைவர்கள் வருவதுண்டு.

விம்பிள்டன் டென்னிஸ் பல மைதானங்களில் (கோர்ட் என அழைக்கப்படும்) நடைபெறும். கோர்ட் அருகே ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்ய அறைகள் உள்ளன.

கடந்த வருடம் 12-வது கோர்ட் அருகே உள்ள அறையில் ஒரு ஜோடி உடலுறவு கொண்டதாகவும், ரசிகர்கள் முகம் சுழித்ததாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து விம்பிள்டன் நிர்வாகத்திடம் புகாரும் அளிக்கப்பட்டது.

பிரார்த்தனை மற்றும் தியானத்திற்கான இடத்தில் இப்படி செய்யலாமா?, அந்த இடத்தை ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக பயன்படுத்த வேண்டும். பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் வாய்ப்பாக அந்த இடம் உள்ளது. அதை சரியான வழியில் பயன்படுத்துவதை எதிர் பார்க்கிறோம். அந்த இடத்திற்கான மதிப்பை ரசிகர்கள் வழங்க வேண்டும்'' என இங்கிலாந்து டென்னிஸ் கிளப்பு நிர்வாக தலைவர் சாலி பால்டன் தெரிவித்துள்ளார்.

''ஒரு ஜோடி அறையில் இருந்து மிகப்பெரிய புன்னகையுடன் வந்ததாகவும், பெண் கோடைக்கால ஆடை அணிந்திருந்ததாகவும், உள்ளே வேறு என்ன நடந்திருக்கும்'' என ரசிகர் ஒருவர் புகார் கூறியதாகவும், மற்றொரு ரசிகர் ''நெருக்கமாக இருக்கும்போது வெளிப்படும் சத்தம்'' கேட்டதாகவும் புகார் அளித்ததாக சாலி பால்டன் தெரிவித்துள்ளார்.

அந்த அறையில் சேர், மடிக்கக் கூடிய மேஜை, சார்ஜ் செய்யும் வசதி ஆகியவை உள்ளன.

Tags:    

Similar News