search icon
என் மலர்tooltip icon

    துலாம்

    வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை

    தன்னம்பிக்கை மிளிரும் வாரம். 2,7-ம் அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராசி அதிபதி சுக்ரனை செவ்வாய் 4-ம் பார்வையாக பார்க்கிறார். மனம் மகிழ்ச்சியாகவும் இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நடக்க வேண்டிய நல்லவைகள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் மேலோங்கும்.

    முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். வியாபாரம் பெருகும். உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பலருக்கு வெளியூர், வெளிநாட்டிற்கு சென்று பிழைப்பு நடத்தும் சூழ்நிலை உண்டாகும். காதல் விவகாரங்கள் அவமானத்தை தரும்.

    பண வரவு தாராளமாக இருந்தாலும், தேவையற்ற அலைச்சல்கள் விரயங்கள் ஏற்படலாம். தேவையற்ற வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். சொத்துக்கள் விருத்தி அடையும். தாய்க்கு பண வரவு ஏற்படும். திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். எந்த செயலிலும் வெற்றி பெற திருவாசகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×