search icon
என் மலர்tooltip icon

    துலாம்

    வார ராசிபலன் (5.8.2024 முதல் 11.8.2024 வரை)

    5.8.2024 முதல் 11.8.2024 வரை

    சுமாரான வாரம். ராசிக்கு 12-ல் கேது. ஆன்மீக இயக்கங்கள், சமூக சேவையாற்றும் நிறுவனங்களில் கவுரவப் பதவிகள் கிடைக்கும். தான தர்மங்கள் செய்வீர்கள். சேவை மனப்பான்மை மிகும். வயது முதிர்ந்தவர்களுக்கு 12-ல் உள்ள கேது மோட்சம் தருவாரா? என்ற சிந்தனை மிகுதியாகும். பாவம், புண்ணியம், முக்தி, மோட்சம் ஆன்மீகம் பற்றிய சிந்தனை அதிகமாகும். தேவையற்ற எண்ண ஓட்டத்தில் தூக்கம் சற்று குறைவுபடும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு வெளிநாட்டு குடியுரிமை திடைக்கும். சிலருக்கு வரவிற்கு மீறிய செலவினால், தேவையற்ற விரயத்தால் எதிர்காலம் பற்றிய சிந்தனை மற்றும் பய உணர்வு கூடும்.

    வியாபாரம் சார்ந்த விசயத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்க ளில் சிந்தித்து செயல்பட வேண்டும்.சிலர் உத்தி யோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்வார்கள். கலைத் துறையினருக்கு வெளிநாட்டு படப்பிடிப்பு அதிகரிக்கும். ஆரோக்கிய குறைபாடு சீராகும். மூட்டு அறுவை சிகிச்சை நல்ல பலன் தரும். திருமண முயற்சி வெற்றியாகும். ஆடிப்பூ ரத்தன்று அம்மனுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×