search icon
என் மலர்tooltip icon

    துலாம் (Thulam)

    இந்தவார ராசிபலன்

    24.6.2024 முதல் 30.6.2024 வரை

    சங்கடங்கள் விலகும் வாரம். பாக்கியாதிபதி புதன் கர்ம ஸ்தானம் செல்வது தர்ம கர்மாதிபதியோகம். வார இறுதியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சனி வக்ரம் அடைந்தாலும் தர்மம் தலை காக்கும் உங்கள் மனதை வாட்டிய பிரச்சினைகள் சிறிது சிறிதாக குறையத் துவங்கும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படு வீர்கள்.குடும்பத்தில் குதூகலம் நிம்மதி கூடும்.குலத் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். புதிய தொழில் துவங்கும் முயற்சிகள் வெற்றியாகும். மாணவர்களின் மேற்கல்வி முயற்சி நிறைவேறும். மனதில் ஆன்மீக சிந்தனை அதிகமாகும். பொன், பொருள் சேரும். பூர்வீகச் சொத்து விற்று முழுப் பணமும் வந்து சேரும்.

    விற்ற பணத்தில் தாயார் சகோதரருக்கு அதிக பங்கு கொடுப்பது மன உளைச்சலை அதிகமாக்கும். சிலர் போலியான விளம்பரங்களை நம்பி நல்ல வேலையை தவறவிடுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரத்தில் திருமணம் நிச்சயிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. சிலர் வீடு மாற்றம் செய்யலாம்.ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் பெண்கள் குடும்பத்தை அமைதியாக வழி நடத்து வார்கள். செவ்வாய் கிழமை அஷ்ட லட்சுமிகளையும் வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×