search icon
என் மலர்tooltip icon

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    1.7.2024 முதல் 7.7.2024 வரை

    நெருக்கடிகள் விலகும் வாரம். 2,7-ம் அதிபதி செவ்வாயின் சம சப்தம பார்வை ராசியில் பதிவதால் நினைத்தது நடக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் விற்பனை உயரும். ஆதாயம் கூடும். தொழிலில் நெருக்கடியால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும்.நல்லவர்களின் அறிமுகத்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். திருமண முயற்சிகள் வெற்றி தரும்.புதிய பொருட்கள் சேரும். வீடு, வாகனம் ஆடம்பர பொருட்கள் என வாழ்வாதாரம் உயரும். வாழ்க்கைத் துணை மற்றும் நண்பர்களின் ஆதரவால் அனைத்து விருப்பங்களும் பூர்த்தியாகும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும்.

    குடும்பத்திலும் வெளியிலும் செல்வாக்கு உயரும். புதிய சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். இதுவரை இருந்த வந்த சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்து இடம் தெரியாமல் மறையும். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். 2.7.2024 அன்று காலை 11.14 முதல் 4.7.2024 அன்று பகல் 3.58 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணிபுரியும் இடத்தில் பணத்தை கையாளுவதில் கவனம் தேவை. எதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.ஜாமீன் போடுவது வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. அங்காள பரமேஸ்வரியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×