search icon
என் மலர்tooltip icon

    துலாம்

    இந்தவார ராசிபலன்

    22.7.2024 முதல் 28.7.2024 வரை

    அதிர்ஷ்டமான வாரம். லாப அதிபதி சூரியன் ராசி அதிபதி சுக்ரனுடன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசிக்கு 8ல் உள்ள குரு, செவ்வாய் குறுக்கு வழியில் சில அதிர்ஷ்டத்தை பெற்றுத்தரலாம். திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோகத்தில் உயர்வு, புதிய வீடு கட்டுதல், வாங்குதல், என்று இதுவரை எதையெல்லாம் எதிர் பார்த்தீர்களோ அவற்றையெல்லாம் அடைந்து உயர்வை காணப்போகிறீர்கள். வியாபாரிகள் விற்பனையை அதிகரிப்பார்கள். சிலருக்கு புதிய தொழில் கிளைகள் துவங்கும் அமைப்பு உள்ளது. கடன்களால் ஏற்பட்ட பாதிப்பு குறையும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நண்பர்களால் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்கவும்.

    பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தீய பழக்க வழக்கங்களில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம்.நாத்தனாரின் குடும்ப பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் சில மன ஸ்தாபங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆடி வெள்ளிக்கிழமை நெய் விளக்கு ஏற்றி மகாலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×