என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை
- ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்நதவர் சாமிநாதன் (வயது65).
இவர் கடந்த 14-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கிடைக்காததால் சாமிநாதன் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி தனலட்சுமி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின்பேரில் ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று தளி பகுதியைச் சேர்ந்த சந்தீப் (வயது24). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் லேப்-டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை சீனிவாசன் தளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வாலிபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
- திலக்கை கொல்ல சசிகுமாருக்கு திம்மராயப்பா பணம் கொடுத்ததும், தெரியவந்தது.
- போலீசார் 3 பேரை சுற்றி வளைத்து நேற்று கைது செய்தனர்.
ஓசூர், மே.17-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி பக்கமுள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் திலக் (24). ரவுடி ஆவார். கடந்த 12-ந் தேதி ஓசூர் பெரியார் நகர் டீக்கடை அருகில் இவரை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் கொலை செய்யப்பட்ட திலக் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கடந்த 1.1.2022 அன்று சொப்பட்டியை சேர்ந்த மோகன்பாபு என்பவரை கொலை செய்ததும், அந்த வழக்கில் திலக் உள்பட 6 பேரை மத்திகிரி போலீசார் கைது செய்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீனில் திலக் வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மோகன்பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை ஓசூர் டவுன் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள்.
அதில் தனது மகன் மோகன்பாபுவை கொலை செய்ததற்கு பழிக்கு பழி வாங்கும் விதமான தான் மத்திகிரியை சேர்ந்த சசிகுமார்(24) என்பவர் மூலம் மேற்கண்ட கொலையை செய்ததாக கூறியிருந்தார்.
தொடர் விசாரணையில், திலக், டீ கடையில் இருந்த தகவலை, சசிகுமாருக்கு இவர்தான் தெரியபடுத்தினார் என்றும், திலக்கை கொல்ல சசிகுமாருக்கு திம்மராயப்பா பணம் கொடுத்ததும், தெரியவந்தது.
இதையடுத்து, திம்மராயப்பா, மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி மகன் சிவகுமார்(24) மற்றும் தின்னூரை சேர்ந்த வெங்கடேஷ் (25) ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளியான சசிகுமார், நேற்று சங்ககிரி கோர்ட்டில் சரணடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாகியுள்ள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- தருமபுரி ெரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட மின் தூக்கிகளை எம்.பி. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
- 2-வது நடை மேடையில் தான் அதிக அளவில் ரெயில்கள் நிற்கிறது.
தருமபுரி,
தருமபுரி ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மின் தூக்கி (LIFT) அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது.
இதனால் மூத்த குடிமகன்கள் முதல் பிளாட் பாரத்தில் இருந்து இரண்டாவது பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மின் தூக்கிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனை தொடர்ந்து நேற்று பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தருமபுரி ெரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட மின் தூக்கிகளை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் முதல் நடைபாதையில் அதிக அளவிலான ெரயில்கள் நிற்பதில்லை. 2-வது நடை மேடையில் தான் அதிக அளவில் ரெயில்கள் நிற்கிறது.
இதற்காக மின் தூக்கி அமைக்க வேண்டும் என ெரயில்வே அமைச்சரை சந்தித்து முறையிட்டதன் காரணமாக மின் தூக்கிகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
- கடந்த வாரம் பேருந்து நிலையத்துக்குள் அதிவேகமாக நுழைந்த தனியார் பேருந்து இடித்து ஒருவர் பலியானார்.
- பேருந்துநிலையத்தில் புதிதாக வேகத்தடை அமைபக்கப்படடது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கிருஷ்ணகிரி , தருமபுரி , சேலம் , பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து வந்து செல்கின்றன .
பேருந்துகள், பஸ் நிலையத்திற்கு வரும்பொழுது மிக வேகமாக உள்ளே நுழைகின்றன. அப்படி நுழையும் போது பேருந்து நிலையத்திற்கு உள்ளே நுழையும் பொதுமக்கள் வேகமாக பேருந்துகளுக்கு வழி விடும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் பேருந்து நிலையத்துக்குள் அதிவேகமாக நுழைந்த தனியார் பேருந்து இடித்து ஒருவர் பலியானார்.
இதனை அடுத்து காவேரிபட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லும் வழியும் வெளியே செல்லும் வழியினை வேகத்தடை அமைக்கும் பணியினை இன்று தொடங்கினர்.
- குப்புராஜூக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனமாக ரூ.2லட்சம் ரொக்கம், 35 பவுன் நகை, ஒரு அபார்ட்மெண்ட் வீடு ஆகியவை கொடுக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.
- தேவிக்கு தெரியாமல் குப்புராஜ் தனது தாய் ரேவதிக்கு மட்டும் விசா எடுத்து அனுப்பி வைத்து அவரை நண்பர்கள் உதவியுடன் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.
தருமபுரி,
தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே அதியமான் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் தேவி (வயது36). இவருக்கும், சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த குப்புராஜ் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
அப்போது குப்புராஜூக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனமாக ரூ.2லட்சம் ரொக்கம், 35 பவுன் நகை, ஒரு அபார்ட்மெண்ட் வீடு ஆகியவை கொடுக்கப்பட்ட தாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து குப்புராஜூக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் அங்கு விசா பெற்று கொண்டு தனது மனைவி, குழந்தையை அழைத்து சென்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவியிடம் குப்புராஜ் தமிழ்நாட்டிற்கு சென்று தனது தாய் ரேவதியை அமெரிக்காவிற்கு அழைத்து வருமாறும், இதற்காக 2 பேருக்கும் மீண்டும் விசா எடுத்து அனுப்பி வைப்பதாகவும் கூறி அங்கிருந்து அவரை தனியாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனை நம்பி அவரும் தமிழ்நாட்டிற்கு வந்தார். பின்னர் அவர் தமிழ்நாட்டிற்கு வந்து சில நாட்கள் ஆகியும் குப்புராஜ் விசா எடுத்து அனுப்பி வைக்காமல் இருந்தார்.
இதற்கிடையே தேவிக்கு தெரியாமல் குப்புராஜ் தனது தாய் ரேவதிக்கு மட்டும் விசா எடுத்து அனுப்பி வைத்து அவரை நண்பர்கள் உதவியுடன் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த தேவி அதிர்ச்சியடைந்தார். உடனே தனது கணவருக்கு தொடர்புக் கொண்டு கேட்டபோது, அவர் தேவிக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார்.
தேவியுடன் அவரது மகனையும் பேசவிடாமல் தடுத்துள்ளார்.
இதுகுறித்து தேவி தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் தேவியின் கணவர் குப்புராஜ், அவரது தாய் ரேவதி, தங்ைக உமா (37), தங்கையின் கணவர் பழனிவேல் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகப்பேறு பிரிவில் கழிப்பறைக்கு செல்லும் நடைபாதை சரி செய்யப்பட்டதா? என்று கேட்டபோது, அதற்கு மருத்துவ துறை அதிகாரிகள் சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
- கூட்டம் முடிந்த பின்பு எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் உடனே அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவுக்கு சென்றார்.
தருமபுரி,
தருமபுரியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் தருமபுரி மாவட்டத்தில் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் இருந்தும் உள்புற நோயாளிகள், புறநோயாளிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றுகொள்வதற்காக நவீனமயமாக்கப்பட்டு புதிதாக மகப்பேறு பிரிவு என்று தனியாக கட்டிடம் அமைக்கப்பட்டது.
மகப்பேறு பிரிவில் கழிவறைக்கு செல்லும் பாதை சிதலமடைந்து காணப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை மலரில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி நாகர் கூடல் பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இதில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களை தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன் பார்வையிட்டு நலம் விசாரிக்க நேரில் சென்றார்.
மாலைமலர் செய்தியை நினைவுகூர்ந்த அவர் மகப்பேறு பிரிவில் உள்ள கழிவறை பாதையை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு டைல்ஸ் கற்கள் சிதலமடைந்து கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற பெண்கள் யாரும் கழிவறைக்கு செல்லமுடியாத நிலையை பார்த்தார். உடனே டீன் மற்றும் மருத்துவ நிர்வாக அலுவலர்களை அழைத்து உடனடியாக இந்த பாதையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார்.
இந்த நிலையில் நேற்று (15-ந்தேதி) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எம்.பி. செந்தில்குமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.பி.வெங்கடேவரன் எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகளை அழைத்து கலெக்டர் முன்னிலையில் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு பிரிவில் கழிப்பறைக்கு செல்லும் நடைபாதை சரி செய்யப்பட்டதா? என்று கேட்டபோது, அதற்கு மருத்துவ துறை அதிகாரிகள் சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
அதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கூட்டம் முடிந்த பின்பு எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் உடனே அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவுக்கு சென்றார். அங்கு கழிவறை பாதையை சரி செய்யப்பட்டதா? என்று ஆய்வு செய்தபோது, அதிர்ச்சியடைந்தார். அங்கு எந்தவொரு பணியும் செய்யாமல் பழையபடியே கழிவறைக்கு செல்லும் பாதை சிதலமடைந்து காணப்பட்டது. இதனால் கோபம் அடைந்த எம்.எல்.ஏ. உடனே மருத்துவ நிர்வாக அதிகாரிகளை நேரில் அழைத்து, நடைபாதை சரிசெய்து விட்டதாக கலெக்டர் முன்னிலையில் என்னையே ஏமாற்றி விட்டீர்கள் என்றும், உடனடியாக இதை சரிசெய்யா விட்டால் தலைமை சுகாதார துறையிடம் நானே புகார் தெரிவிப்பேன் என்றும், அவர் உடனடியாக இந்தபாதையை தரமான முறையில் சரி செய்ய வேண்டும் என்றும் கடுமையாக எச்சரித்தார்.
எம்.பி., கலெக்டர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மகப்பேறு பிரிவில் கழிவறைக்கு செல்லும் பாதையை சரி செய்யாமலே சரி செய்துவிட்டதாக அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் எம்.எல்.ஏ.வுக்கே பல்பு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அந்த பெண் தனது காதலனை கடுமையாக திட்டியும், தாக்கியுள்ளார்.
- வீட்டில் தனியாக இருந்தபோது சிவகுமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் மடதஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சிவகுமார் (வயது21). இவர் பாலக்கோடு அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவருடன் படிக்கும் மாதேமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுகுறித்து சிவகுமார் தனது பெற்றோருக்கு தெரிவித்தனர்.
அவர்கள் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காததால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி சிவக்குமார் தன்னுடைய வீட்டிற்கு அவரை அழைத்து சென்றார். அந்த பெண் திருமணம் செய்யாமலேயே சிவக்குமாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் காதலர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் அந்த பெண் தனது காதலனை கடுமையாக திட்டியும், தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட சிவக்குமார் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமார் காதலியுடன் ஏற்பட்ட தகராறால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அங்கு இருந்த தண்ணீர் தொட்டி திறந்த நிலையில் இருந்தது.
- இதனை கவனிக்காத மஞ்சு தவறி தொட்டிற்குள் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் துரைபாபு. இவரது மனைவி மஞ்சு (வயது 45). இவர் நேற்று வீட்டின் முன்பு நடந்து சென்றார்.
அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டி திறந்த நிலையில் இருந்தது. இதனை கவனிக்காத மஞ்சு தவறி தொட்டிற்குள் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மஞ்சுவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து உறவினர்கள் ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மஞ்சுவின் மீட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெளியே சென்ற மாணவி, மீண்டும் வீட்டிற்கு திரும்பிரவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கெலப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி வெளியே செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பிரவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.
- பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை 17-ந்தேதி புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட மின்வாரிய செயற் பொறியாளர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி கோட்டம், பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை 17-ந்தேதி புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சினனம்பள்ளி, பாப்பாரப்பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைகுளம், ஆலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
- பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கைதான முனியப்பனை பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்துவுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாலக்கோடு அருகே கொல்லுப்பட்டியில் முனியப்பன் (வயது60) என்பவர் வீட்டில் வைத்து அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து பிராந்தி, பீர் பாட்டில்கள் என 7ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கைதான முனியப்பனை பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- இதுவரை 100 நாள் வேலை பணி பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கவில்லை.
- நாங்கள் குடும்பத்துடன் வேலை இன்றி கஷ்டப்பட்டு வருகின்றோம்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் 150 -க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம் .
இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் கூலி வேலைக்குச் சென்றால் தான் பிழைக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த வருடம் எங்களுக்கு 12 நாட்கள் மட்டுமே 100 நாள் வேலை கொடுத்தனர்.
பின்னர் இதுவரை 100 நாள் வேலை பணி பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கவில்லை. நாங்கள் குடும்பத்துடன் வேலை இன்றி கஷ்டப்பட்டு வருகின்றோம். அதனால் கலெக்டர் எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 100 நாள் வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.