search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலை மலர் செய்தி எதிரொலியாக தருமபுரி ரெயில் நிலையத்தில் புதிய மின் தூக்கி திறப்பு
    X

    தருமபுரி ரெயில்நிலையத்தில் புதிய மின்தூக்கியை செந்தில்குமார் எம்.பி. திறந்து வைத்தார்.

    மாலை மலர் செய்தி எதிரொலியாக தருமபுரி ரெயில் நிலையத்தில் புதிய மின் தூக்கி திறப்பு

    • தருமபுரி ெரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட மின் தூக்கிகளை எம்.பி. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
    • 2-வது நடை மேடையில் தான் அதிக அளவில் ரெயில்கள் நிற்கிறது.

    தருமபுரி,

    தருமபுரி ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மின் தூக்கி (LIFT) அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது.

    இதனால் மூத்த குடிமகன்கள் முதல் பிளாட் பாரத்தில் இருந்து இரண்டாவது பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மின் தூக்கிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியானது.

    இதனை தொடர்ந்து நேற்று பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தருமபுரி ெரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட மின் தூக்கிகளை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் முதல் நடைபாதையில் அதிக அளவிலான ெரயில்கள் நிற்பதில்லை. 2-வது நடை மேடையில் தான் அதிக அளவில் ரெயில்கள் நிற்கிறது.

    இதற்காக மின் தூக்கி அமைக்க வேண்டும் என ெரயில்வே அமைச்சரை சந்தித்து முறையிட்டதன் காரணமாக மின் தூக்கிகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×