என் மலர்
- உதயசங்கர் (வயது 30). பா.ஜ.க. இளை ஞரணி பகுதி செயலாளராக இருந்த இவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி ஐ.ஜே.கே. கட்சியில் சேர்ந்தார்.
- 3 பேர் கும்பல் அங்கு வந்து தகராறு செய்து, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
சேலம்:
சேலம் அரிசிப்பாளையம் வண்டிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராம ஜெயம். இவரது மகன் உதயசங்கர் (வயது 30). பா.ஜ.க. இளை ஞரணி பகுதி செயலாளராக இருந்த இவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி ஐ.ஜே.கே. கட்சியில் சேர்ந்தார்.
கொலை
வெள்ளி தொழில் செய்து வந்த இவர் நேற்று மாலை தனது புல்லட் மோட்டார்சைக்கிளில் நண்பர் அலெக்ஸ்பாண்டி யன் என்பவருடன் பள்ளப்பட்டி கூட்டுறவு சொசைட்டிக்கு எதிரே உள்ள ஓட்டலுக்கு வந்தார். அங்கு மோட்டார் சைக் கிளை நிறுத்தி விட்டு, சாலையோரம் நின்றபோது 3 பேர் கும்பல் அங்கு வந்து தகராறு செய்து, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனால் வெட்டு காயத்துடன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.ஆனால் மர்ம நபர்கள் துரத்திச் சென்று ஓட, ஓட விரட்டி அவரை வெட்டி னர். இதில் உதய சங்கருக்கு தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதை தடுக்க வந்த அலெக்ஸ் பாண்டி யனையும் அந்த கும்பல் வெட்டியது. இதனால் உயிருக்கு பயந்து அவர் அங்கிருந்து ஓடினார்.
நண்பருக்கு சிகிச்சை
சாலையோரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த உதயசங்கரை அங்கிருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உதயசங்கர் பரிதாபமாக இறந்தார்.
தொடர்ந்து உதயசங்கரின் நண்பர் அலெக்ஸ்பாண்டியனுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. வார்டு செயலாளர்
இந்த கொலை சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார், ெகாலை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் கொலையில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ள னர். அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் தி.மு.க. 26-வது வார்டு செயலாளர் முருகன் (வயது 38) உள்பட 3 பேரை பிடித்து விசா ரணை நடத்தி வருகின்றனர். ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார், அவர்களிடம் எதற்காக இந்த கொலை நடந்ததது? இந்த கொலைக்கும், உங்களுக்கும் தொடர்பு உள்ளதா? கொலையில் ஈடுபட்ட நபர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள்? கொலைக்கு உதவி செய்த வர்கள் யார்?, கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்க ளுக்கு அடைக்கலாம் கொடுத்த நபர்கள் யார்? என பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் வெள்ளிப்பட்டறை உரிமையாளர் உதயசங்கரை எதற்காக கொலை செய்தார்கள் யார்? என்பது பற்றிய முழு விபரமும் தெரியவரும்.
1½ ஆண்டுகளுக்கு முன்பு உதயசங்கர் வெள்ளிகட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர்
பள்ளப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட உதயசங்கர் மற்றும் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர்,, மற்றொரு நபரும் என 3 பேர் சேர்ந்து ஓமலூர் பகுதியில் வெள்ளி வியாபாரியை கடத்தி வெள்ளிக்கட்டி மற்றும் பணம் பறித்தது தொடர்பான வழக்கில் ஓமலூர் போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் உதயசங்கர் ஜாமீனில் வெளியே வந்த பின், வண்டிப்பேட்டையில் பெற்றோருடன் வசித்து வந்தார். அவ்வபோது வெள்ளிக்கட்டி கொண்டு வரும் வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி தனி வியாபாரத்தையும் நடத்தி வந்திருக்கிறார். வெள்ளிகட்டி வியாபா ரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது.
இந்த பணம் கொடுக்கல், வாங்கல் சம்பவத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தான் மர்ம கும்பல் அவரை நேற்று சரமாரியாக வெட்டி கொலை செய்து உள்ளது, என விசாரணையில் தெரியவந்துள்ளது.
- கலெக்டர் அலுவலகத்தில் வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி( புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
- கலெக்டர் கார்மேகம் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்கு நரக அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் முன்னிலையிலும் நடக்கிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் பணி புரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறை கள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி( புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்கு நரக அரசு கூடுதல் செயலா ளர், நிதித்துறை இயக்குநர் முன்னிலையிலும் நடக்கிறது.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபு ரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வூதிய பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது முறை யீட்டு மனுக்களை 2 பிரதிக ளுடன் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரிவித்துள்ளார்.
- ராகுல் (வயது 22). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தொண்டிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- தொட்டிபட்டியை சேர்ந்த நடராஜ் (60) என்பவரது மொபட் மீது நேருக்கு நேர் மோதியது.
பரமத்திவேலூர்:
–நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, நடந்தை பகுதியை சேர்ந்த வர் சிவகுமார். இவரது மகன் ராகுல் (வயது 22). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள தொண்டிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தொண்டிபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே தொண்டிபட்டிபுதூரில் இருந்து வேலக வுண்டம்பட்டி நோக்கி வந்த தொட்டிபட்டியை சேர்ந்த நடராஜ் (60) என்பவரது மொபட் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ராகுல் மற்றும் நடராஜ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் அவ்வழியாக வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், ராகுல் மற்றும் நடராஜ் ஆகிய இருவரும் வரும் வழியி லேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த வேலகவுண்டன்பட்டி போலீசார், விபத்தில் உயிரிழந்த நடராஜ் மற்றும் ராகுல் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நல்லப்பன் (வயது 50). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
- நல்லப்பன் தட்டி கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில், சகாதேவன், அவரது மகன் ஷங்கர் ஆகியோர் நல்லப்பனை கத்தியால் குத்தினர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லப்பன் (வயது 50). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், நல்லப்பனுக்கு சொந்தமான நிலத்தில், அதே பகுதியை சேர்ந்த சகாதேவன் (65), அவரது மகன் ஷங்கர் (39) ஆகியோர் கற்களை போட்டதாக கூறப்படுகிறது.
இதனை நல்லப்பன் தட்டி கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில், சகாதே வன், அவரது மகன் ஷங்கர் ஆகியோர் நல்லப்பனை கத்தியால் குத்தினர். பலத்த காயமடைந்த நல்லப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சகாதேவன் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் 11-ந் தேதி, ஆடு மேய்க்க சென்றபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
- இந்த நிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகில் உள்ள சரளைமேடு பகுதியைச் சேர்ந்த நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் 11-ந் தேதி, ஆடு மேய்க்க சென்றபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். இதைத்தொ டர்ந்து அப்பகுதியில் 2 பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
அதையடுத்து, வெல்ல ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் குடிசைக்கு தீ வைப்பு, வீடுகளுக்கு தீ வைப்பு, டிராக்டர்கள் எரிப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு என, அடுத்தடுத்து தொடர் சம்பவங்கள் அப்பகுதியில் நடைபெற்றதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த, 14-ந் தேதி, அதிகாலை சரளைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலையில் தூங்கி கொண்டிருந்த தொழிலா ளர்கள் 4 பேர் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
அதில், படுகாயம் அடைந்த 4 பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதையடுத்து, அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரவி, பர மத்தி போலீஸ் நிலை யத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, சேலம் சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் (பொ) வழங்கி உள்ளார்.
- பழனிச்சாமி (வயது 41). இவர் நேற்று திருச்சி ரோட்டில் நாகராஜபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார்.
- நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 41). இவர் நேற்று திருச்சி ரோட்டில் நாகராஜபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, லாரி உரிமையாளரான பழனிச்சாமி, குடிபோ தையில் இருந்ததாகவும், இதனால் நிலைகுலைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்ததாகவும் கூறப்படு கிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரவணன்(வயது 38). இவர் பரமத்திவேலூர் 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் வெல்டிங் பட்டறையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- இரவு வீட்டிலிருந்த அனைவரும் தூங்கிய பிறகு, அங்கிருந்த ஒரு அறையில் சரவணன் தூக்கு போட்டுக் கொண்டார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் செட்டியார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரவணன்(வயது 38). இவர் பரமத்திவேலூர் 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் வெல்டிங் பட்டறையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சுசீலா (33). இவர்களுக்கு சுசீந்திரன் (8), ரோகித் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சரவணன் உடல்நிலை பாதிப்பால் விரக்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டிலிருந்த அனைவரும் தூங்கிய பிறகு, அங்கிருந்த ஒரு அறையில் சரவணன் தூக்கு போட்டுக் கொண்டார். இரவில் திடீரென எழுந்த சுசீலா, சரவணன் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சரவணன் உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சரவணனின் மனைவி சுசீலா பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 274 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய கலெக்டர், மனுக்களை விரைவாக பரிசீலித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் ஆர்.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு தலா ரூ.78 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.10.92 லட்சம் மதிப்பீட்டில் இலவ வீட்டு மனைப்பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். பின்னர், கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ மணிமேகலை, சமூக பாது காப்புத்திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- ஏற்காட்டுக்கு வீடு கட்ட ஹாலோபிரிக்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு குப்பனூர் மலை பாதை வழியே கனரக லாரி ஒன்று சென்றது.
- லாரி கீரைகாடு என்ற இடத்தில் வந்தபோது லாரியை நிறுத்த டிரைவர் பிரேக் பிடித்தார். ஆனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு வீடு கட்ட ஹாலோபிரிக்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு குப்பனூர் மலை பாதை வழியே கனரக லாரி ஒன்று சென்றது. லாரியை ஏற்காடு பட்டிபாடி வேலூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டி வந்தார்.
லாரி கீரைகாடு என்ற இடத்தில் வந்தபோது லாரியை நிறுத்த டிரைவர் பிரேக் பிடித்தார். ஆனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இதனால் டிரைவர் ஏழுமலை லாரியை நிறுத்த முடியாமல் திணறினார். உடனே அந்த லாரியில் இருந்த மோகன் என்பவர் கீழே குதித்து கல் எடுத்து டயர் அடியில் வைத்து லாரியை நிறுத்த முயற்சித்தார். ஆனால், முடியவில்லை.
இதனால் லாரி பக்கத்தில் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஏழுமலை படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் மற்றும் போலீசார் சேர்ந்து அவரை மீட்டு ஏற்காடு அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
- மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
ஏற்காடு:
சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கி.மீ. ஆகும்.
மலைகளின் இளவரசி
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. வளைந்து நெளிந்த மலைப்பாதைகள், விண்ணை முட்டும் மரங்கள், ஆங்காங்கே கொட்டும் அருவிகள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்களை கடந்து சென்றால், பரந்து விரிந்த ஏரியும், படகு சவாரியும் கவனம் ஈர்க்கிறது.
இது மட்டுமின்றி அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், தலைச்சோலை என்று ஒவ்வொரு இடமும் இயற்கை அழகால் இதயம் வருடுகிறது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை என 8 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதற்கான முன் ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஏற்காடு ஊராட்சி அலுவலகம் கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் தமிழரசி, தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் கோவிந்தராஜ், ஏற்காடு ஊராட்சி ஒன்றி ஆணையாளர் அன்புராஜ், தாசில்தார் தாமோதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன், வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் மற்றும் சுற்றுலா துறை, ேதாட்டக்கலை துறை, தீயணைப்புதுறை உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஒரு வழிபாதையாக மாற்றம்
கூட்டத்தில், கோடை விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான அளவு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பது, சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகன நிறுத்த இடம் ஒதுக்குவது, போக்குவரத்தை சீர்படுத்த கூடுதலான போலீசாரை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் சுறறுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்வது, மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மலை பாதையை ஒருவழி பாதையாக மாற்றுவது பற்றி யும், ஆலோசிக்கப்பட்டது.
ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் கோடைவிழா மலர் கண்காட்சியை கண்டுகளிக்க அனைத்து வசதிகளையும் செய்து தருவது பற்றி விவா திக்கப்பட்டது. கேடைவிழா நடைபெறும் 8 நாட்களுக்கும் சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வும் முடிவு செய்யப்பட்டது.
- சாக்கடையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி இடதுபுற காம்பவுண்ட் சுவரில் ஒட்டிய நிலையில் உள்ள சாக்கடையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் புளூ, வெள்ளை நிறம் கலந்த கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், பச்சை, கருப்பு, வெள்ளை நிறம் கலந்த லுங்கியும் அணிந்தவாறு சாக்கடையில் தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து ஜாரிகொண்ட லாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் பெயர் மற்றும் அவருடைய ஊர் முகவரி தெரியவில்லை. இதனால் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.