என் மலர்
- ஸ்தோத்திர பண்டிகை கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- கூட்டத்தில் சேகரகுரு ஜோயல் சாம் மெர்வின், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம்:
சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.நேற்று மாலை வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேகர தலைவர் கிங்ஸ்லி ஜான்ஸ்டீபன் தலைமை தாங்கினார்.
சாராள் தக்கர் கல்லூரி செயலர் சவுந்தரபாண்டியன் செய்தி அளித்தார். கூட்டத்தில் சேகரகுரு ஜோயல் சாம் மெர்வின், தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜ் காளித்துரை, அற்புதராஜ், ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், ஏ.ஜி.கணேசன், துரைராஜ் பாண்டியன், மோசே ராம்ராஜ், அரியப்புரம் ஊராட்சித்தலைவர் தினேஷ்குமார், துணைத்தலைவர் சக்திகுமார், சேகர செயலர் செல்வராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் டேவிட் செல்வராஜ், சிம்சோன் தேவதாசன் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் கலந்து கொண்டனர்.
- யோகா போட்டி கோவில்பட்டி ஆச்சாரியா பள்ளியில் நடைபெற்றது.
- மாணவன் இஷாந்த் ராகவன் 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்றார்.
தென்காசி:
மதுரை சகோதயா ஒவ்வொரு வருடமும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டுப் போட்டி களை நடத்தி வருகிறது. அதன்படி யோகா போட்டி கோவில்பட்டி ஆச்சாரியா பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவி கள் கலந்து கொண்ட இப்போட்டியில் தென்காசி ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் இஷாந்த் ராகவன் 12 வயதிற்குட்பட்ட மாண வர்கள் பிரிவில் முதலிடத்திலும், 7-ம் வகுப்பு மாணவன் முகமது இலியாஸ் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடத்திலும் வெற்றி பெற்று சாதனை படை த்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். மண்டல அளவில் முதலி டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- சிவன்மாரி ராணுவம் மற்றும் காவலர் தேர்வு பயிற்சி மைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் 200 பயிற்சி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் சார்பில் கடையநல்லூர் மங்களாபுரத்தில் சிவன்மாரி ராணுவம் மற்றும் காவலர் தேர்வு பயிற்சி மைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் மயில் தலைமை தாங்கினார். ராணுவ பயிற்சி மைய நிறுவனர் சிவன் மாரி வரவேற்று பேசினார். ரோட்டரி கிளப் செயலாளர் இத்ரீஸ், ஓய்வு பெற்ற ஆசிரியர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் டாக்டர் மீரான்மைதீன், முகமது கானித், முகமது இஸ்மாயில், மைதீன், கருப்பசாமி மற்றும் 200 பயிற்சி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 100 மரக்கன்று நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டனர்.
- காளிராஜ் கார் மீது நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் மோதியது.
- சக்திவேல் மீதும் வாகனங்கள் மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே புல்லுக்காட்டுவலசை ஊரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32) தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்.
இவர் நேற்று இரவு தென்காசி தனியார் மருத்துவ மனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை பூலாங்குளம் வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சில் தென்காசி - நெல்லை சாலையில் வந்து கொண்டிருந்தார்.
வாகனங்கள் மோதல்
இந்நிலையில் பாவூர்சத்திரம் யூனியன் அலுவலகம் எதிரே மற்றொரு காரை ஓட்டி வந்த பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மனோஜ் பிரபாகர் (வயது29) என்பவர் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வழியாக திரும்பிய போது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் யூனியன் அலுவலகம் எதிரே நிறுத்தப்பட்டிருந்த குறும்பலாப் பேரியை சேர்ந்த காளிராஜ் கார் மீது நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் மோதியது.
இதனிடையே கீழப்பாவூர் ஊரை சேர்ந்த சக்திவேல் (38) மோட்டார் சைக்கிள் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது அவர் மீதும் வாகனங்கள் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆம்புலன்சில் வந்த மூதாட்டியை மற்றொரு வாகனம் ஏற்பாடு செய்து அதில் பூலாங்குளத்திற்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் விபத்தில் சேதம் அடைந்த ஆம்புலன்ஸ் உட்பட 3 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் தொடர்ச்சியாக 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தால் பாவூர்சத்திரத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ஆய்வின்போது கட்டிடங்களின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
- பஸ் நிலையப் பணிகள் 9 மாதங்களுக்குள் முடிவடைந்து விடும்.
சங்கரன்கோவில்:
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், சங்கரன் கோவிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை உறுதி மொழிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ. பத்மாவதி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், உறுதி மொழிக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயகுமார், சதன் திருமலை குமார், ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினர்.
தொடர்ந்து கட்டிடங்களின் தரம் உள்ளிட்ட வைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் பேசுகையில், சங்கரன்கோவில் பஸ் நிலையப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 9 மாதங்களுக்குள் பணிகள் முடிவடைந்து விடும் என்றார்.
தொடர்ந்து நெல்லை நகராட்சி மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், பொறியாளர் எட்வின், ஒப்பந்ததாரர் விக்னேஷ் ஆகியோர்களிடம் தரமான முறையில் எதிர்காலத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் கட்டிட பணிகளை முறையாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.
ஆய்வில் நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர் மற்றும் அரசு துறை அதிகாரிகள்பலர் கலந்து கொண்டனர்.
- தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களை தேர்வு செய்து வருகிற 17-ந் தேதியன்று பொற்கிழி வழங்கப்படும்.
- தெற்கு மாவட்ட அலுவலகமானது விரைவில் கலைஞர் அகடாமியாக செயல்படும்.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகமான சிவந்தி நகரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமை தாங்கினார். இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு பேசினார். செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி தொகுத்து வழங்கினார்.
கூட்டத்தில் தென்காசி மாவட்ட தி.மு.க.சார்பில் கடந்த 5-ந் தேதி நடை பெற்ற கட்சியின் மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கும், மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்திற்கும் அனுமதி பெற்று தந்த பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு நன்றி தெரிவித்தும், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.அலுவலகத்தை திறந்து வைத்து 70 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியினை ஏற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், நிகழ்ச்சிகள் நடைபெற முழு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் இளைஞரணி அமைப்பா ளர்களுக்கும் நன்றி தெரிவித்தும், தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அரசு கொறடாவுமான கதிரவனின் மனைவி மல்லிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது வழங்க பரிந்துரை செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு நன்றி தெரிவித்தும், வருகிற 17-ந் தேதி தி.மு.க. முப்பெரும் விழாவினை சிறப்பாக கொண்டாடிடவும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் பேசியதாவது:-
கடந்த 5-ந் தேதி 1,500 பேருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் வழங்கப்பட்ட மூத்த முன்னோடி களுக்கான பொற்கிழி வழங்கியதில் தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களை தேர்வு செய்து வருகிற 17-ந் தேதியன்று தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து வழங்கப்படும். இந்த தெற்கு மாவட்ட அலுவலகமானது காலை 9 மணி முதல் 11 மணி வரை செயல்படும் என்றும் விரைவில் இது கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் 4 ஆசிரியர்களை கொண்டு கலைஞர் அகடாமியாக செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் ஜேசு ராஜன், ஷேக் தாவூத், ராஜேஸ்வரன், சாமிதுரை, மாவட்ட பொருளாளர் ஷெரிப், மாநில விவசாய அணி இணை அமைப்பாளர் செல்லப்பா, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான், ஆலங்குளம் ஒன்றிய குழுத் தலைவி திவ்யா மணிகண்டன், மாவட்ட துணை செய லாளர் கென்னடி, கனி மொழி, தென்காசி தெற்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் மாரிமுத்து, தொண்டரணி அமை ப்பாளர் இசக்கி பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அன்பரசன், மாணவர் அணி அமைப்பாளர் ரமேஷ், செங்கோட்டை நகர செயலாளர் வெங்க டேசன், தி.மு.க. பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, முன்னாள் பேரூர் செயலாளர் சாம்பவர் வடகரை மாறன், குற்றாலம் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், வக்கீல்கள் அணி வேல்சாமி ரகுமான் சாதத், முத்துக்குமாரசாமி, சீனித்துரை, ரவிசங்கர், மகேஷ் மாயவன், பெரிய துரை, மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கப்பாண்டியன், நகர துணை செயலாளர் ராம் துரை, குத்துக்கல்வலசை கிளை செயலாளர் காசி கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா நன்றி கூறினார்.
- விழாவில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.
- சிறப்பு நிகழ்ச்சியாக வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை யொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இளைஞர்க ளுக்கான உறியடி, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஏராள மான இளைஞர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விழா குழுவினர் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
- கடையம் அருகே உள்ள மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அருணோதய பிரார்த்தனையை நல் ஆலோசனை திருப்பணி இயக்குனர் ஆமோஸ் நடத்தி வைத்தார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு ஆயத்த ஆராதனையை மஞ்சு விளை சேகரத் தலைவர் ஜேசன் தர்மராஜ் நடத்தி வைத்தார்.
நேற்று காலை அருணோதய பிரார்த்தனையை நல் ஆலோசனை திருப்பணி இயக்குனர் ஆமோஸ் நடத்தி வைத்தார். பின்னர் ஞானஸ்நான ஆராதனையை பாவூர்சத்திரம் மேற்கு சேகரதலைவர் வரதராஜ் நடத்தினார். பின்னர் நடைபெற்ற பண்டிகை ஆராதனையில் சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்ணபாஸ் கலந்து கொண்டு சிறப்பு செய்தி அளித்தார்.
நிகழ்ச்சியில் மேட்டூர் சேகரத்தலைவர் கிங்ஸ்லி ஜான் ஸ்டீபன், கவுரவ குரு லதா கிங்ஸ்லி, மேட்டூர் சேகர குரு ஜோயல் ஸாம் மெர்வின் பேராயர் உதவி குரு பொன்ராஜ், சேகரத் தலைவர்கள் கடையம் கேமில்டன், வி.கே.புரம் கிறிஸ்டோபர், ஸ்டாலின், புலவனூர் நிக்சன், மஞ்சு விளை ஜேசன் தர்மராஜ், மேல மெஞ்ஞானபுரம் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சேகர கமிட்டியினர், மேட்டூர், ஆவுடையானூர் வன்னிய நாடார்பட்டி சபை மக்கள் செய்திருந்தனர்.
- தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப்பணிகளை குழுவினர் பார்வையிட்டனர்.
- ஆய்வில் டி.ஆர்.ஓ. பத்மாவதி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட் டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன் மற்றும் உறுதிமொழிக்குழு உறுப்பி னர்கள் அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயகுமார் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட னர்.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் குற்றாலத்தில் உள்ள கலைவாணர் அரங்க த்தை புதுப்பித்தல் பணி நிறைவடைந்து பயன்பாட்டில் இருப்பதை பார்வையிட்டதோடு, குற்றலத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நல அரங்கம் வாரியத்தின் அமைப்புசார தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவத ற்கென உள்ள "திரு.வி.க. இல்லம்" எனும் விடுமுறை ஓய்வு இல்லம் புதுப்பித்தல் பணிகளை குழுவினர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவி அருகில் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதலாக பெண்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கவும், கோவில் சுவரில் ஏற்பட்டிருக்கும் தீக்கறையை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கவும் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட போலீஸ் அலுவலக கட்டிடத்தையும், தென்காசி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட பணிகளையும், தென்காசி அரசு மருத்துவமனையில் புதிய மாவட்ட மருந்துகிடங்கு கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது டி.ஆர்.ஓ. பத்மாவதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பிரேமலதா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) முரளிசங்கர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள் வில்லியம் ஜேசுதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குளம் அரசு நூலகத்தில் பயின்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்றவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலங்குளம் அரசு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற, ஆலங்குளம் அரசு நூலகத்தில் பயின்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்று பல்வேறு துறை அரசு பணிகளில் சேர உள்ளவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு, தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதாமோகன்லால், அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஷீலா, வட்டார நூலகர் பழனீஸ்வரன், நூலக வாசகர்கள் வட்ட தலைவர் தங்கசெல்வம், மனவளக்கலை மன்ற பேராசிரியர் . சிவஞானம், செங்கோட்டை நூலக வாசகர்கள் வட்ட நூலகர் ராமசாமி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆலங்குளம் அரசு கலை கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சங்கரன்கோவில் கோட்ட உதவிசெயற்பொறியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
- பயிற்சி வகுப்பினை பற்றி காணொலி காட்சி மூலம் செந்தில் ஆறுமுகம் விளக்கி கூறினார்.
சங்கரன்கோவில்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டம் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் கோட்ட அளவில் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு மின்பகிர்மானத்தில் பாது காப்புடன் பணிபுரிவது பற்றிய பயிற்சி வகுப்பு சங்கரன்கோவில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பிற்கு சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய ஆலோசனைகள் வழங்கினார். இதில் சங்கரன்கோவில் கோட்ட உதவிசெயற் பொறி யாளர்கள், உதவி பொறி யாளர்கள் மற்றும் கள ப்பணி யாளர்கள் கலந்து கொண்டனர். நெல்லை தொழில்நுட்ப பயிற்சி மற்றும் மேம்பாடு பிரிவு ஏற்பாட்டின் பேரில், நெல்லை மண்டல பாது காப்பு அதிகாரி செந்தில் ஆறுமுகம் பயிற்சி வகுப்பினை பற்றி காணொலி காட்சி மூலம் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கி கூறினார். நிலை இணைப்பு செய்ய வேண்டிய அவசியம், கையுறை பயன்படுத்த வேண்டிய அவசியம், இடுப்பு கயிறு பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் பற்றி விளக்கி கூறினார். பணிகளின் போது கைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அப்பொழுது தான் சிந்தனை சிதறல் இல்லாமல் பணி புரிய முடியும் என்றார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடு களை நகர் புறம் I பிரிவு உதவி மின் பொறியாளர் கருப்பசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- தென்காசியில் 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
- தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு கண்டிப்பாக வர வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2023-ம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இத்தேர்வுக்காக தென்காசியில் உள்ள இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித மிக்கேல் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 974 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும். தேர்வர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையங்களின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். காலை 9.30 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் தேர்வர்கள் செல்போன், லேப்டாப் மற்றும் கால்குலேட்டர்கள் போன்ற உபகரணங்களை தேர்வு மையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
தேர்வில் முறைகேடு களில் ஈடுபட்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எழுத தடை விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.