என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பிரேசில்
- விமான எஞ்சின் தீப்பிடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு அதில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டனர்.
பிரேசில் நாட்டை சேர்ந்த லோ-கோஸ்ட் ஏர்லைனின் விமானம் ஒன்று ரியோ டி ஜெனிரோவின் சாண்டோஸ் டுமோண்ட் விமான நிலையத்தில் இருந்து போர்டோ அலெக்ரேவுக்கு புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது அதன் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விமானம் ஓடுபாதையில் செல்வதில் இருந்து அதன் எஞ்சின் திடீரென தீப்பற்றி எரியும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமான எஞ்சின் தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஓடுபாதையில் இருந்து விமானம் டேக் ஆஃப் ஆக சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், அதன் எஞ்சினில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. பின் எஞ்சின் தீப்பற்றி எரிந்தது. இதன் காரணமாக விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பின் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தின் எஞ்சின் வெடித்து விபத்து ஏற்பட்டதால் குறிப்பிட்ட ஓடுபாதை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மூடப்பட்டது. இதன் காரணமாக சில விமானங்களின் புறப்பாடு நேரம் தாமதமானது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்த பயணிகள் அடுத்த விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
- சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இதனால், பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா யானோமாமி பகுதியில் அவசர நிலையை பிறப்பித்தார். அப்போது முதல் அங்கு சட்ட விரோத சுரங்கத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பிரேசிலின் ரோரைமா மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சிலர் சுரங்க தொழிலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- ஹெலிகாப்டர் குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
- விபத்தில் தெருவில் சென்று கொண்டிருந்த 9 வாகனங்களும் சேதமானது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஏர் டாக்ஸி நிறுவனத்தை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனே விமானி அதனை தரையிறக்க முற்பட்டார். அதற்குள் அந்த ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தெருவில் சென்று கொண்டிருந்த 9 வாகனங்களும் சேதமானது.
இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தெருவில் சென்ற வாகனங்களில் இருந்த பலர் காயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
- அகோஸ்டா மெலிந்த உடல் நிலையுடன் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டார்.
- மழை பெய்யாமல் இருந்திருந்தால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன் என்றார்.
அப்போது, அகோஸ்டா அமேசான் காட்டில் வழி தவறி காணாமல் போயுள்ளார். தனது நண்பர்களுடனான தொடர்பையும் அவர் இழந்தார்.
இதனால், அகோஸ்டாவிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லாததை அடுத்து, அவரது குடும்பத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, மீட்பு குழுவினர் அமேசான் காட்டில் முழு வீச்சில் தேடி வந்தனர். இந்நிலையில் அகோஸ்டா மெலிந்த உடல் நிலையுடன் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டார்.
அமேசான் காட்டில் ஒரு மாதமாக உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்த அகோஸ்டா, அங்குள்ள பூச்சி, புழுக்களை திண்று பசியாற்றியுள்ளார். மழை பெய்யும்போது தான் போட்டிருக்கும் பூட்ஸ் ஷூ மூலம் தண்ணீர் பிடித்து குடித்துள்ளார். தண்ணீர் கிடைக்காத சில இடங்களில் தனது சிறுநீரையே குடித்து உயிர் பிழைத்து வந்துள்ளார். காட்டைவிட்டு வெளியேற திசை தெறியாமல் சுமார் 40 கிலோ மீட்டர் அகோஸ்டா நடந்துள்ளார். இதனால் அவர் சுமார் 17 கிலோ உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
"நான் கடவுளிடம் மழையைக் கேட்டேன், அது பெய்யாமல் இருந்திருந்தால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்" என்று அகோஸ்டா குறிப்பிட்டார்.
இவர் கூறுவது மட்டும் உண்மை எனில், அமேசான் மழைக்காடுகளில் இவ்வளவு காலம் உயிர் பிழைத்த ஒரே நபர் ஜொனாடன் அகோஸ்டா என்ற பெருமையை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.
- தங்களைப் பார்த்து ஏளனமாக சிரித்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
- துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பிரேசிலியா:
பிரேசில் நாட்டில் உள்ள மடோ கிராஸோ மாநிலம் சினோப் நகரில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு நடைபெற்றது. அப்போது ஒரு நபர் மற்றொரு நபரிடம் தோல்வியடைந்து, 4000 ரியால் பணத்தை இழந்துள்ளார். வெளியே சென்ற அந்த நபர், மற்றொரு நபரை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். தன்னை தோற்கடித்த நபரை மீண்டும் விளையாட அழைத்துள்ளார். இந்த முறையும் அந்த நபர்கள் தோல்வி அடைந்தனர்.
அப்போது போட்டியை காண வந்திருந்த சிலர், தோல்வியடைந்தவர்களை பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விளையாட்டில் தோல்வி அடைந்த நபர்கள், தங்களைப் பார்த்து ஏளனமாக சிரித்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய எட்கர் ரிக்கார்டோ மற்றும் எசேக்கியாஸ் ரிபேரோ ஆகிய 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- பிரேசிலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- கனமழையால் பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து தடைபட்டுள்ளது.
ரியோ டி ஜெனிரோ:
பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் சவொ பாலோ மாகாணத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரேசிலில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இடிந்து கிடக்கும் வீடுகளின் இடிபாடுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. வீடுகளை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
-------------
- குடிநீர் மற்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
- தொடர்ந்து இடைவிடாமல் மழை கொட்டி தீர்ப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
சாங்பவுசோ:
பிரேசில் நாட்டில் தென்கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
சாங்பவுலோ மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இகபெல்லா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. ரோடுகள் பலத்த சேதம் அடைந்தது.
இதில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி சேதம் அடைந்தது. ரோடுகள் துண்டாகி கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி போய் கிடக்கிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டது.
மழை-வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட இதுவரை 24 பேர் பலியாகி விட்டனர். இந்த பேய் மழைக்கு கடற்கரையோர பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்து உள்ளது.
மீட்பு பணிகள் இங்கு முடுக்கி விடப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து இடைவிடாமல் மழை கொட்டி தீர்ப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இடிந்து கிடக்கும் வீடுகளின் இடிபாடுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர் மழையால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- இந்த சண்டையால் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.
- சண்டையிட்ட அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.
பிரேசிலின் சல்வேடார் நகரில் இருந்து சா பவுலோ நகரத்திற்கு கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானம் டேக் ஆப் ஆவதற்கு சில நிமிடங்களே இருந்தது. அப்போது விமானத்தில் சில பெண் பயணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 15 பெண் பயணிகள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர். முடியைப் பிடித்து இழுத்தும், ஆடைகளை பிடித்து இழுத்தும் சண்டையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை விலக்கி விடுவதற்கு விமான பணிப்பெண்களும் படாத பாடு பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சண்டை ஏன் நடந்தது என்பது குறித்து விமான பணிப்பெண் ஒருவர் கூறுகையில், "விமானத்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இருந்த ஒரு பெண் பயணியிடம் சக பெண் பயணி ஒருவர் தனது மாற்றுத்திறனாளி மகளுக்காக ஜன்னல் ஓர இருக்கையை விட்டு தருமாறு கேட்டு உள்ளார். ஆனால், ஜன்னல் ஓரத்தில் இருந்த அந்த பெண் பயணி இருக்கையை மாற்றிக் கொடுக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இரு பெண்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் சண்டையிட தொடங்கினர். இதனால், நாங்கள் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றார்.
விமானத்தில் ஜன்னல் ஓர இருக்காகாக தொடங்கிய இந்த சண்டையால் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. இதனால், பிற பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் கூறுகையில், "2-ம் தேதி இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது. சண்டையிட்ட அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. விமானத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். பயணிகளின் பாதுகாப்பு கருதியே நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
- போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது.
- பஸ் அங்கு பரானா என்ற நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
சாவ் பாலோ:
பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் தலைநகர் புளோரியானோபோலிசிஸ் நகரில் இருந்து, போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 54 இருந்தனர்.
இந்த பஸ் அங்கு பரானா என்ற நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் சாலையில் தறிக்கெட்டு ஓடியது. பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் மரண ஓலமிட்டனர். டிரைவர் பஸ்சை நிறுத்த முயற்சித்தார்.
ஆனால் பஸ் சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் உருக்குலைந்து போனது. இந்த கோர விபத்தில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த ஒரு பெண் அவரது 3 வயது குழந்தை உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
- போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
- தலைநகர் கிளர்ச்சியைத் தொடர்ந்து பிரேசில் ராணுவத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பிரேசிலியா:
பிரேசிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட்ட அதிபர் ஜெயீர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டி வந்தார். இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் இனாசியோ லுடா சில்வா கடந்த 1-ம் தேதி பதவியேற்றார்.
இதற்கிடையில் லுடா அதிகாரத்தைக் கைப்பற்றுவதை தடுக்க ராணுவ தலையீட்டுக்கு அழைப்பு விடுத்து போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 8-ம் தேதி தலைநகர் பிரேசிலியாவில் திரண்ட போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பாராளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் அதிபர் மாளிகை ஆகிய கட்டிடங்களுக்குள் புகுந்து சூறையாடினர். இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலவரக்காரர்களை அப்புறப்படுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
போல்சனாரோ இந்த கலவரத்தை தூண்டியதாக அதிபர் லுலா டா சில்வா குற்றம் சாட்டிய நிலையில், போல்சனாரோ அதனை திட்டவட்டமாக மறுத்தார்.
இந்நிலையில், தலைநகரில் ஜனவரி 8-ம் தேதி கிளர்ச்சியைத் தொடர்ந்து நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா நேற்று பிரேசிலின் ராணுவத் தளபதியை பதவி நீக்கம் செய்தார்.
இதன்படி, ஜெனரல் ஜூலியோ சீசர் டி அர்ருடா ராணுவத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக பிரேசிலிய ஆயுதப் படைகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக தென்கிழக்கு ராணுவக் கட்டளைத் தலைவராக இருந்த ஜெனரல் டோமஸ் மிகுவல் ரிபேரோ பைவா நியமிக்கப்பட்டார்.
ஏற்கனவே அதிபர் இல்ல கலவரம் தொடர்பாக 40 வீரர்களை பணிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் லூலா உத்தரவிட்டுள்ளார்.
- பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோ ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
- பாராளுமன்றத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
பிரேசிலியா:
பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று, புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றார்.
இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவரது ஆதரவாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். அதிபர் இல்லத்திலும் கலவரம் பரவியது. இந்தப் போராட்டத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில், பிரேசில் அதிபர் இல்ல கலவரம் தொடர்பாக 40 வீரர்களை பணிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் லூலா உத்தரவிட்டுள்ளார்.
- ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும்.
- பிரேசில் அதிகாரிகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும்.
பிரேசிலில் முன்னாள் அதிபர் போல்சனாரோ ஆதரவாளர்கள் பாராளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் புகுந்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பிரேசிலியாவில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் மற்றும் நாசவேலை பற்றிய செய்திகள் ஆழ்ந்த கவலையை அளித்து உள்ளது. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும், பிரேசில் அதிகாரிகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்