என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
திரிஷா விவகாரம்: விசாரணைக்கு ஆஜராகாத மன்சூர் அலிகான்
- நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- மன்சூர் அலிகான் முன் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை:
நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மன்சூர் அலிகானின் பேச்சு தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை மாநகர போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் போலீ சார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. அவரது வீட்டுக்கு நேரில் சென்று போலீசார் சம்மனை வழங்கினார்கள். இதனை ஏற்றுக்கொண்டு மன்சூர் அலிகான் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் முன் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது.
முன் ஜாமின் கேட்டு கோர்ட்டை நாடியுள்ள நிலையில், போலீசாரால் மன்சூர் அலிகானிடம் இன்று விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், எனது குரல்வளை
15 நாட்களாக தொடர் இருமலாக இருந்து நேற்று மிகவும் பாதிப்பு அடைந்து பேச மிகவும் சிரமமாக உள்ளது. நான் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு நாளை தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் தங்களைச் சந்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.