என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
நயன்தாரா, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது ஏன்? பரபரப்பு புதிய தகவல்கள்
- நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ம் தேதி பிரமாண்டமாக நடந்தது.
- எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத்தாய் முறை மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைஉலக பிரபலங்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது புதிய விஷயம் அல்ல. ஏற்கனவே பாலிவுட் நடிகைகள் சில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா இருவரும் இதே போல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அமீர்கான்-கிரண் ராவ் தம்பதியர் ஆசாத் ராவ் என்ற குழந்தையையும், ஷாருக்கான்-கவுரிகான், சன்னி லியோன்-டேனியல், பிரித்தி ஜிந்தா ஆகியோர் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர். இதில் பிரித்தி ஜிந்தாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
தற்போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவத்திற்குப் பிறகு வாடகைத்தாய் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் திருமணத்திற்கு முன்பே இதற்காக திட்டமிட்டு கருமுட்டை, உயிரணு ஆகியவற்றை சென்னையில் இருக்கும் பிரபலமான மருத்துவர்கள் மூலம் வாடகைதாய்க்கு செலுத்தியிருக்கிறார்கள்.
இரட்டைக் குழந்தைகளாக பிறந்திருப்பது நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும் குழந்தைகள் 8 மாதத்தில் பிறந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கான தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். சட்ட ரீதியாகவும் வாடகைத்தாயாக இருந்தவர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. குழந்தைகள் பற்றி விக்னேஷ் சிவன் குறிப்பிடும்போது எங்கள் உயிர், உலகம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது குழந்தைகளுக்கு வைத்த பெயர் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர்கள் தரப்பில் விசாரித்தில் இது பெயர் அல்ல என்று சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றிய விபரங்கள் இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு வருகிறது. உடல்நல பிரச்சினைகளால் கர்ப்பம் ஆக முடியாத பெண்கள், வயிற்றில் குழந்தையை சுமக்க முடியாத அல்லது விரும்பாத பெண்கள் மற்றொரு பெண் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதே வாடகைத்தாய் முறையாகும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணின் கருமுட்டையில் அவரது கணவரின் உயிரணு செலுத்தப்பட்டு, பின்னர் அந்த கருவை, வாடகைத்தாயின் கருப்பையில் பொருத்துவர்.
அந்த வாடகைத்தாய் வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பார். கருமுட்டையில் தந்தையின் விந்தணுவை செலுத்தி அதனை வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தி குழந்தை பெற்றுக்கொண்டால், வாடகைத்தாய்க்கும் குழந்தைக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது. இந்த முறையைப்பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள திரையுலகினர் சிலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தற்போது நயன்தாரா சென்னையில் பிரபல மருத்துவமனையில் மருத்துவர்களின் ஆலோசனைபடி குழந்தைகளின் அருகிலேயே இருந்து வருகிறார். விக்னேஷ் சிவன் இப்போதே குழந்தைகளுக்கென்று தனியாக உடைகளையும், விலை உயர்ந்த பொம்மைகளையும் வாங்கிக் குவிப்பதில் பிசியாக இருக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்