search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ் சினிமாவில் ஒரு சில நல்ல படங்களில் நடித்து பிரபலமானவர் நெருங்கியவர்களை நம்பி ஏமாந்து இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் நல்லவனாக கொண்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பெயர் பெற்றாராம். அதன்பின் சில படங்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்த நடிகர், தனக்கு உதவியாக ஒரு சிலரை தேர்வு செய்தாராம். அவர்களிடம் கதை தேர்வு செய்யும் பணி, சம்பளம் உள்ளிட்டவைகளை பார்க்க சொன்னாராம்.

    ஆனால், அவர்கள் நல்ல கதைகளை எல்லாம் நடிகரின் தகவலுக்கு கொண்டு செல்லாமல் தவிர்த்து விட்டார்களாம். இதனால் நடிகர் பல நல்ல படங்களை இழந்து விட்டாராம். இதை தற்போது அறிந்து அவர்களை நீக்கி விட்டு, தான் ஏமாந்ததை நினைத்து வருந்துகிறாராம்.
    தமிழ் சினிமாவில் போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தற்போது ரீச் கிடைக்கவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, மொட்டை மாடியில் எடுத்த போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலமானாராம். அதன் மூலம் நடிகைக்கு பல வாய்ப்புகள் குவிந்ததாம். அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று ரசிகர்களை கவர்ந்தாராம்.

    வீட்டை விட்டு வெளியே வந்த நடிகை, அதன்பின் பல போட்டோ ஷூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டாராம். ஆனால், எதுவுமே மொட்டை மாடி அளவிற்கு வைரலாகவில்லையாம். பணம் அதிகம் செலவு செய்து எடுத்தும் ரீச் ஆகவில்லையே என்று நடிகை வருத்தத்தில் இருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் சம்பளத்தை குறைக்க சொன்னதால் அதிரடி முடிவு எடுத்து இருக்கிறாராம்.
    வரலாற்றுப் படங்களில் நடித்து பிரபலமான தமிழ், தெலுங்கு பட நடிகை, ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு முன்பாக ஒத்துக் கொண்டதால் அதிக சம்பளம் பேசி இருந்தாராம்.

    இப்போது நடிகைகள் பலரும் சம்பளத்தை குறைத்துக் கொண்டதால் நீங்களும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அந்த நடிகையிடம் தயாரிப்பாளர் கூறினாராம். இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை அந்த படத்திலிருந்தே விலகி விட்டாராம். நடிகையின் இந்த அதிரடி முடிவைப் பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம்.
    கோலிவுட்டில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், கவர்ச்சியை நம்பி ஏமாந்து போய் உள்ளாராம்.
    நான்கெழுத்து நடிகை ஒருவர் ஆரம்பத்தில் சிறுபட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமானார். பெரும்பாலும் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வந்த அந்த நடிகையிடம், கவர்ச்சி காட்டினால் தான் முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியும் என சிலர் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். 

    இதை நம்பி கவர்ச்சியில் இறங்கிய அந்த நடிகைக்கு பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும், அத்துடன் பேரதிர்ச்சி ஒன்றும் காத்திருந்ததாம். அது என்னவென்றால், அந்த நடிகையை ஒரு பாடலுக்கு நடனமாட மட்டுமே அழைக்கிறார்களாம். இதனால் கவர்ச்சியை நம்பி ஏமாந்துவிட்டதாக, அந்த நடிகை, தனது திரையுலக நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்.
    தமிழில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் தனது சம்பளத்தை ரூ.20 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் பரவி வருகிறதாம்.
    முன்னணி நடிகர் நடித்து சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததாம். நடிகரின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்ததாம்.

    இந்த படத்துக்கு பிறகு நடிகரின் மார்க்கெட் அந்தஸ்து கூடி இருக்கிறதாம். இதனாலேயே இதற்கு முன்பு ரூ.10 கோடி வரை சம்பளம் பெற்று வந்த அவர் இப்போது ரூ.20 கோடி கேட்கிறாராம். தற்போது ஒப்பந்தம் ஆகி இருக்கும் வெப் தொடருக்கு 20 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், தன்னுடன் நடிக்கும் நடிகர்களை தானே தேர்வு செய்கிறாராம்.
    தமிழில் எக் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாராம். இதற்காக பல கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். தான் நடிக்கும் படங்களில் தன்னுடன் நடிப்பவர்களை அவரே தேர்வு செய்கிறாராம்.

    சமீபத்தில் நடிகை ஒப்பந்தமான படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை நான்தான் தேர்வு செய்வேன் என்று அடம்பிடித்தாராம். சரி என்று ஒப்புக் கொண்ட படக்குழு, நடிக்க தெரியாதவர்களை எல்லாம் தேர்வு செய்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறாராம்.
    பிரபல நாயகி ஒருவர் தனக்கு பிடித்த நடிக்கருடன் நடிக்க ஆசைப்பட்டு அவருக்கு சிபாரிசு செய்து இருக்கிறாராம்.
    ‘சாமி’ நடிகர் திரையுலகுக்கு வந்த நேரத்தில், அவருடைய அழகான தோற்றம் பிரபல கதாநாயகிகளை கவர்ந்து இழுத்ததாம். கதாநாயகனாக நடித்து வந்த அவர், இப்போது வில்லனாகி விட்டாராம். இருப்பினும் அவர் சில கதாநாயகிகளின் ‘கனவுக்கண்ணனாகவே இருந்து வருகிறாராம்.

    குறிப்பாக ஒரு பிரபல கதாநாயகி, ‘சாமி’ நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறாராம். அடுத்து அவர் நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில் தனக்கு ஜோடியாக, ‘சாமி’ நடிகரை ஒப்பந்தம் செய்யும்படி சிபாரிசு செய்து இருக்கிறாராம்! அவருடைய ரசனையை அறிந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாராம், கதை சொல்ல வந்த புது டைரக்டர்!
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, மற்ற நடிகைகளை பார்த்து தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளாராம்.
    தமிழில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக இருப்பவர் படத்தில் அறிமுகமான நடிகை, தொடர்ந்து குடும்ப பாங்கான தோற்றத்தில் நடித்து வந்தாராம். நடிகைக்கும் தொடர்ந்து ஓரிரு பட வாய்ப்புகள் கிடைத்ததாம். 

    தற்போது சமூக வலைத்தளத்தில் மற்ற நடிகைகள் பலரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதால், நடிகையும், அவர்களைப் போல் கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தி வெளியிட்டு இருக்கிறாராம். இதைப்பார்த்த நெட்டிசன்கள், நடிகைக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி மாறிட்டாங்க... நல்லாதானே இருந்தாங்க... என்று கிண்டல் செய்து வருகிறார்களாம். 
    மூன்றெழுத்து நடிகர் ஒருவரை நம்பி பல ஆண்டுகளாக காத்திருந்த இயக்குனர்கள் தற்போது பதறிப்போய் உள்ளார்களாம்.
    கதை பிடித்தால் எந்த இயக்குனரின் படங்களிலும் நடிப்பேன் என்று சொல்லி வந்த மூன்றெழுத்து நடிகர் ஒருவர், இப்போது தன் பாலிசியை மாற்றிவிட்டாராம். அதாவது ஹிட் படங்களை கொடுத்தவர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். 

    அதன் காரணமாக பல ஆண்டுகளாக ஒரு ஹிட் படம் கூட கொடுக்காமல் தன்னிடம் கதை சொல்வதற்காக அணுகிய சில இயக்குனர்களிடம் ‘புதுவரவு இயக்குனர்கள், திறமை இல்லாதவர்கள் படங்களில் நடித்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை’ எனக்கூறி கைவிரித்துவிட்டாராம் அந்த நடிகர். இதனால் அவரை நம்பி பல ஆண்டுகளாக காத்திருந்த இயக்குனர்கள் பதறிப்போய் உள்ளார்களாம்.
    பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், படத்தில் நடித்தது தப்பா போச்சே என்று வருத்தத்தில் இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், கணவரை பிரிந்த பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறாராம். சமீபத்தில் இவர் நடித்த படம் ஒன்று வெளியாவதற்கு பிரச்சனைகள் எழுந்ததால் தன் பணத்தை செலவு செய்து படத்தை வெளியிட்டாராம்.

    தற்போது அதே போல் இவர் நடித்த மற்றொரு படமும் ரிலீசுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறதாம். இதை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் நடிகையை அணுக, அவரோ உங்க படத்தில் நடித்தது தப்பா போச்சே என்று வருத்தப்பட்டு புலம்பி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இப்போதைக்கு திருமணம் இல்லை என்று கூறியிருக்கிறாராம்.
    நம்பர் ஒன் நடிகைக்கும், இயக்குனருக்கும் நிச்சயதார்த்தமான விஷயம் சமீபத்தில் எல்லோருக்கும் தெரிந்தது. அதைத் தொடர்ந்து அவர்களின் திருமணம் எப்போது நடக்கும்? என்று பலரும் கேட்டு வருகிறார்களாம்.

    ‘‘திருமணம் இப்போதைக்கு இல்லை’’ என்று நடிகை அவர்களிடம் பதில் அளித்து இருக்கிறாராம். முன்னணி நடிகருடன் நடித்து வரும் படப்பிடிப்பு முடிவடைந்ததும் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று நடிகை கூறியிருக்கிறாராம்.
    முன்னணி நடிகை ஒருவர் பிரபல இயக்குனருக்கு சில கட்டுப்பாடுகள் விதித்ததால், நடிகையை மாற்றி இருக்கிறார்களாம்.
    பல சர்ச்சைகளுக்கு நடுவில் பிரம்மாண்ட இயக்குனர் தெலுங்கு நடிகரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறாராம். இதில் இரண்டாவது நடிகையாக தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினாராம். நடிகை, 2வது நடிகையா.. அப்போ சம்பளம் அதிகம் வேண்டும், படப்பிடிப்பு தளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை விதித்தாராம்.

    இதைக்கேட்ட இயக்குனர், இந்த நடிகை சரிப்பட்டு வரமாட்டார் என்று சொல்லி, ஆளை மாற்றி விட்டாராம். இதையறிந்த நடிகை தற்போது பெரிய பட வாய்ப்பை இழந்து விட்டேன் என்று புலம்பி வருகிறாராம்.
    ×