search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ் சினிமாவில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை, படப்பிடிப்புக்கு செல்ல மறுத்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை, கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மிகவும் பிசியாக படப்பிடிப்புக்கு சென்று வந்தாராம். ஊரடங்கில் எந்த படப்பிடிப்புக்கும் செல்லாமல் இருந்ததால் நடிகைக்கு சோர்வு அதிகமாகி விட்டதாம்.

    ஊரடங்கு தளவிற்குப் பிறகும் நடிகை படப்பிடிப்புக்கு செல்லவில்லையாம். நடிகையை படப்பிடிப்புக்கு அழைத்தால் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக போகவில்லை, எனக்கு இன்னும் பயமாக இருக்கிறது என்று சொல்லி வர மறுக்கிறாராம். நடிகையின் இந்த செயலால் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் கடுப்பில் இருக்கிறார்களாம். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகையை இயக்குனர் ஒரு கண்டுக்கொள்ள வில்லையாம்.
    அழகா, குண்டாக இருந்த நடிகையை ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருந்ததாம். என்ன நினைத்தாரோ தெரியவில்லை தன் உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும் தோலுமாக ஆகிவிட்டாராம். அவர் எடையை குறைத்ததோடு மார்க்கெட் மரண அடி வாங்கிவிட்டதாம். ஒல்லியான பிறகு நடிகையை பார்க்க பரிதாபமாக, வயதானவர் போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்களாம். 

    நடிகை அவ்வப்போது தன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறாராம். பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால், யாருமே கண்டுகொள்வது இல்லையாம். இதனால் தன்னை வைத்து பேய் படம் எடுத்த இயக்குனரை அழைத்து பட வாய்ப்பு கேட்டாராம். இயக்குனரோ நடிகையை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம்.
    இளசுகள் மனதை கொள்ளை கொண்ட இளம் நடிகையை, பிரபல கோலிவுட் இயக்குனர் ஒருவர் அழவைத்து விட்டாராம்.
    கோலிவுட்டில் இருந்து டோலிவுட்டுக்கு படையெடுத்த இயக்குனர் ஒருவர், அங்கு தனது முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் முனைப்புடன் இருக்கிறாராம். இதனால் ஒவ்வொரு காட்சிகளையும் கச்சிதமாக படமாக்கி வருகிறாராம். அந்த படத்தில் இளசுகள் மனதை கொள்ளை கொண்ட இளம் நடிகை ஒருவர் ஹீரோயினாக நடித்துள்ளாராம்.

    அவர் படப்பிடிப்பின் போது ஒரு காட்சிக்கு ஏராளமான டேக் வாங்கியதால் கடுப்பான இயக்குனர், அந்த நடிகையை சக நடிகர், நடிகைகள் முன்னிலையில் வைத்து திட்டிவிட்டாராம். இதனால் கோபமடைந்த நடிகை இனி இந்த இயக்குனரின் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். தற்போது அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் படக்குழு இறங்கி உள்ளதாம்.
    பிரபல நடிகை ஒருவர், நடிகர் சிபாரிசு செய்யும் படங்களில் நடிக்க மறுத்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நடிகராக இருப்பவருடன் முதல் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை, சில காலங்களில் காணாமல் போயிருந்தாராம். அதன்பிறகு பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று மிகவும் பிரபலமானாராம். உடல் எடையையும் குறைத்து படங்களில் நடிக்க தயாரானாராம்.

    அதன்பிறகு தான் முதலில் நடித்த ஒல்லி நடிகருக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டாராம். நடிகரோ வாய்ப்பு தருகிறேன் என்று கூறி இதுவரை எதுவும் தரவில்லையாம். விடாமல் நடிகரை தொந்தரவு செய்ததால், நடிகைக்கு வேறு படங்களில் நடிக்க சிபாரிசு செய்தாராம் நடிகர். ஆனால், நடிகை உங்களுடன்தான் நடிப்பேன் என்று விடாபிடியாக இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், தற்போது தனது மகளுக்கு ஜோடி தேடி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் இட்லிக்கு பெயர் பெற்ற நடிகை, சின்னத்திரை, அரசியல் என்று பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். அதுபோக படம் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். தற்போது நடிகை, தனது மகளை கதாநாயகியாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.

    தனது மகளை உடல் எடையை குறைக்க வைத்து நடிப்புக்கு பயிற்சி கொடுத்தும் இருக்கிறாராம். தற்போது மகளுக்கு ஏற்ற கதாநாயகனை தேடி வருகிறாராம் நடிகை. இதற்கான முயற்சியில் நடிகை தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.
    இளம் நடிகை ஒருவர் தற்போது சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்திருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட்டாகி விட்டால், அந்த படத்தில் நடித்த நடிகைகள் சிலர், தான் பெரிய நடிகையாகி விட்டோம் என்று பந்தா காட்டுவார்களாம். ஆனால், தற்போது பாடகியாக இருந்து நடிக்க வந்திருக்கும் நடிகை ஒருவர் ஓவர் பந்தா காண்பித்து வருகிறாராம்.

    நடிகை தற்போதுதான் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறாராம். அதற்குள் மேனேஜர், உதவியாளர் என்று பலரை வேலைக்கு சேர்த்து இருக்கிறார்களாம். நடிகையை யார் அழைத்தாலும் அவரது உதவியாளர்களை வைத்தே பேச வைக்கிறாராம். இதையறிந்த பலரும், இன்னும் படமே வெளியே வரல... அதுக்குள்ள இவ்வளவு பந்தாவா என்று புலம்பி வருகிறார்களாம்.
    பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய முயற்சியை பல நடிகர்கள் எச்சரித்து வருகிறார்களாம்.
    சினிமாவில் முன்னணி இயக்குனர் படத்தில் நடித்து பிரபலமான நடிகர், தான் பெரிய நடிகராகி விட்டோம் என்று நினைத்து பந்தா காட்ட ஆரம்பித்து விட்டராம். அதன்பின் வந்த பட வாய்ப்புகளை ஓவராக பேசி இழந்தாராம். தற்போது புதிய படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர், நான் மாறிவிட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.

    இனிமேல் நல்ல படங்களில் நடிப்பேன், விரைவில் படம் தயாரிக்க போகிறேன் என்று கூறினாராம். இதைக்கேட்ட பல நடிகர்கள் படம் தயாரிக்க வேண்டாம் என்று நடிகருக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்களாம். ஏற்கனவே பல நடிகர்கள் தயாரித்து நஷ்டம் அடைந்திருப்பதால் இப்படி எச்சரிக்கிறார்களாம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பணம் சம்பாதிக்க திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், உடல் எடை கூடியவுடன் பட வாய்ப்புகளை இழந்தாராம். அதன்பின் உடல் எடையை குறைக்க மிகவும் கஷ்டப்பட்டாராம். ஆனால், பலனலிக்கவில்லையாம். காதலித்தவரை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாராம்.

    கணவரின் அறிவுரைப்படி படம் தயாரிப்பில் களமிறங்கினாராம். கொரோனாவால் அந்தப் படமும் கிடப்பில் இருக்கிறதாம். இந்நிலையில் நடிகை பணம் சம்பாதிக்க சின்னத்திரை பக்கம் திரும்பி இருக்கிறாராம். நடிகையின் இந்த திடீர் முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
    பட வாய்ப்பின்றி திண்டாடி வரும் நான்கெழுத்து நடிகை ஒருவர், தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    டோலிவுட் முதல் கோலிவுட் வரை முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நான்கெழுத்து நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாமல் திண்டாடி வருகிறாராம். வரும் ஒன்றிரண்டு வாய்ப்புகளும், கதை தனக்கு ஏற்றபடி இல்லை என சொல்லி திருப்பி அனுப்பி விடும் அந்த நடிகை, தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

    பிற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்து நடிக்க அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். தனக்கு ஏற்ற கதையை பார்த்து தேர்ந்தெடுப்பதற்காக தனியாக ஒரு குழுவையும் அமைத்துள்ளாராம் அந்த நடிகை. நடிகையின் இந்த பலே திட்டம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற நடிகை ஒருவர், இயக்குனரை நம்பி ஏமாந்து விட்டாராம்.
    தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற நடிகை, அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லையாம். மேலும் அந்த படத்தின் இயக்குனர் வேறொரு படம் இயக்குவார் அதில் நடிக்கலாம் என்று காத்துக் கொண்டு இருந்தாராம்.

    ஆனால், இயக்குனர் இதுவரைக்கும் எந்த படத்தையும் இயக்கவில்லையாம். அவரை நம்பி சில வருடங்களையும், பல படங்களையும் இழந்துவிட்டதாக நடிகை புலம்பி வருகிறாராம். இதற்கு மேல் அவரை நம்பக்கூடாது என முடிவெடுத்த நடிகை, தற்போது தீவிரமாக பட வாய்ப்பு தேடி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் தனது சம்பளத்தை திடீரென்று உயர்த்தி இருக்கிறாராம்.
    தற்போது இளம் நடிகைகள் பலரும் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்களாம். நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகையின் சம்பளம் ரூ.4 கோடியை தாண்டி உள்ளதாம். அதுபோல் தற்போது தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்து முன்னணி நடிகருக்கு ஜோடி சேர்ந்து இருக்கும் நடிகையும் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம்.

    தனது சம்பளத்தை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடிக்கு உயர்த்தி இருக்கிறாராம். இவ்வளவு சம்பளம் ஏன் என்று கேட்டால், முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து விட்டேன் அதான் சம்பளத்தை உயர்த்திவிட்டேன் என்று கூலாக கூறுகிறாராம் நடிகை.
    வாரிசு நடிகருடன் நடித்து பிரபலமான நடிகை கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் பட வாய்ப்பை இழந்து புலம்பி வருகிறாராம்.
    வாரிசு நடிகருடன் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், நடிகைக்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லை. தேடி வந்த படங்களில் கவர்ச்சியாக நடிக்க சொன்னதால் நடிக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டாராம்.

    நடிகை கவர்ச்சியாக நடிக்க மறுத்த விஷயம் சினிமா உலகம் முழுவதும் தீயாக பரவியதால், நடிகைக்கு யாரும் பட வாய்ப்பை கொடுக்க வில்லையாம். தற்போது கைவசம் ஒரு படத்தை வைத்திருக்கும் நடிகை, கவர்ச்சிக்கு நோ சொன்னதால் பட வாய்ப்பை இழந்ததாக புலம்பி வருகிறாராம்.

    ×