search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகைக்கு 40 வயதை நெருங்க போகிறதாம். இதுவரை திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம். இதனால், குடும்பத்தினர் நடிகையை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி வந்தார்களாம்.

    நடிகை நீண்ட காலமாக மறுப்பு தெரிவித்து வந்தாராம். தற்போது நடிகை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம். இதற்காக தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறாராம் நடிகை.
    தமிழில் வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகை பட வாய்ப்புக்காக ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, குறிப்பிட்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தாராம். நடுத்தர நடிகர்களுடன் ஓரிரு படங்களில் நடித்ததால் முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம்.

    அப்படி வந்தாலும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று கேட்டார்களாம். ஆனால், நடிகை கவர்ச்சி நோ என்று சொல்லிவிட்டாராம். அதனால் எந்த பட வாய்ப்பும் நடிகைக்கு வரவில்லையாம். இதனால், இனிமேல் கவர்ச்சியாக நடிக்க போகிறேன் என்று பலரிடம் கூறி ரூட்டை மாற்றி இருக்கிறாராம். 
    சின்னத்திரை, பெரியத்திரை என்று கலக்கி வரும் பிரபல நடிகை ஒருவர், விளம்பரத்திற்கு அதிக பணம் கேட்டு இருக்கிறாராம்.
    தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடியில் போட்டோ எடுத்து பிரபலமான நடிகை, சமீபகாலமாக சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறாராம். இவர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி வரவேற்பு பெற்றதால் ஏராளமான ரசிகர்களை பெற்றாராம். மேலும் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று நல்ல பெயரையும் எடுத்தாராம்.

    இந்நிலையில், நடிகையிடம் சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று ஒரு நிறுவனம் கேட்டார்களாம். இதற்கு நடிகை, ரூ.10 லட்சம் வேண்டும் என்று என்றாராம். இதை கேட்ட அந்த நிறுவனம் அதிர்ச்சியில் எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார்களாம்.
    தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டுக்கு சென்றாராம். அதன்பின் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்த்தாராம். ஆனால், நடிகை எதிர்பார்த்தளவிற்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்க வில்லையாம்.

    இதனால் நடிகை புதியதாக தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம். இதற்காக எந்த தொழில் தொடங்கலாம் என்று நண்பர்களுடன் ஆலோசித்து தற்போது புது முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம். இதுவாது நடிகைக்கு கைக்கொடுக்குமா என்று பலரும் எதிர்பார்க்கிறார்களாம்.
    பட வாய்ப்பு குறைவதைப் பற்றி கவலைப்படாத பிரபல நடிகை, ஹீரோவுக்கு நிகராக சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என கறாராக சொல்லிவிட்டாராம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த நடிகை ஒருவர் தனக்கு ஜோடியாக நடித்த ஹீரோவையே திருமணம் செய்துகொண்டாராம். திருமணத்துக்கு பின்னரும் அந்த நட்சத்திர தம்பதி படங்களில் நடித்து வருகிறார்களாம். திருமணத்துக்கு பின்னர், புதுப்படத்துக்காக தன்னை அணுகும் தயாரிப்பாளர்களிடம், ஹீரோவுக்கு நிகராக தனக்கு சம்பளம் தந்தால் தான் நடிப்பேன் என கண்டிஷன் போடுகிறாராம் அந்த நடிகை.

    இதன் காரணமாகவே அவரை படத்தில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கி வருகிறார்களாம். இதன் எதிரொலியாக அந்த நடிகைக்கு பட வாய்ப்பும் குறைந்து வருகிறதாம். ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத நடிகை, சம்பளம் விஷயத்தில் தொடர்ந்து கறாராக இருக்கிறாராம்.
    கோலிவுட்டில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர், பிரபல நடிகரின் முடிவால் அதிருப்தி அடைந்து உள்ளாராம்.
    பிரபல இயக்குனர் ஒருவர், நான்கெழுத்து நடிகருடன் கூட்டணி அமைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கி வந்தாராம். இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் படத்தை முடிக்கவில்லையாம். ஹீரோ மற்ற படங்களில் பிசியானதால் முடிக்க முடியவில்லை என சொல்லிவந்தனர். 

    தற்போது படத்தின் ஒரு சில காட்சிகளே எஞ்சி உள்ளதால், இதர பணிகளை செய்யுங்கள், அது முடிவதற்குள் எஞ்சியுள்ள காட்சிகளை நடித்து தருகிறேன் என ஹீரோ சொல்லியுள்ளாராம். ஆனால் இதற்கு இயக்குனர் தரப்பில் இருந்து எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்களாம். ஹீரோ மீதுள்ள அதிருப்தியாலேயே இயக்குனர் அப்படி செய்வதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
    பிற மொழிகளில் பிசியாக நடித்து வந்த நடிகை, தமிழ் பட வாய்ப்புகளை பிடிக்க புது யுக்தியை கையாண்டு வருகிறாராம்.
    தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை, நடுவில் காதல் பிரச்சனையால் வாய்ப்புகளை இழந்தாராம். அதன்பிறகு கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் இருந்த நடிகை, பிற மொழிகளில் பிசியாக நடித்து வந்தாராம். தற்போது தமிழ் பட வாய்ப்புகளை பிடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.

    காமெடி நடிகருடன் நடிக்க நடிகையிடம் அணுகினார்களாம். நடிகையும் கதை கேட்டு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். திகைத்து போன படக்குழுவினர், நடிகையிடம் ஓரளவிற்கு சம்பளத்தை குறைத்து பேசினார்களாம். நடிகையும் வந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பதற்காக உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
    கோலிவுட்டில் வாரிசு நடிகர் நடித்த படங்கள் அடுத்தடுத்து பிளாப் ஆனதால், புதிய படத்துக்கான கதை தேர்வில் சில நிபந்தனைகளை விதிக்கிறாராம்.
    கோலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வந்த வாரிசு நடிகர் ஒருவருக்கு, கடைசியாக நடித்த சில படங்கள் தொடர்ந்து பிளாப் ஆனதாம். இதனால் இனி நடிக்க இருக்கும் படங்களுக்கான கதை தேர்வில் முழு கவனம் செலுத்த, அந்த நடிகர் திட்டமிட்டு உள்ளாராம். அதேபோல் தனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு புது கண்டிஷன் ஒன்றை போடுகிறாராம்.

    தன்னிடம் நன்றாக கதை சொல்லும் இயக்குனர்கள், அதை படமாக்கும் போது கோட்டைவிடுவதாக எண்ணும் அந்த நடிகர், இனிமேல் முழுக் கதையையும் கேட்டு, அது தனக்கு பிடித்தால் மட்டுமே அந்த இயக்குனருக்கு ஓகே சொல்வது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். 
    முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான வாரிசு நடிகை, பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகை ஒருவர், முன்னணி நடிகர்களுடன் கமர்ஷியல் படங்களில் நடித்து பிரபலமான பின் ரூட்டை மாற்றி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பேன் என சில காலம் கண்டிஷன் போட்டு வந்தாராம். அந்த பாணியிலான படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லையாம்.

    இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து வருகிறதாம். இதனால் பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி உள்ள அந்த நடிகை, அதற்காக கவர்ச்சியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறாராம். வாரிசு நடிகையின் திடீர் கவர்ச்சி அவதாரத்தால் முன்னணி நடிகைகள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம். 
    கோலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இளம் நடிகை ஒருவர் சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம்.
    மலையாளத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகை, தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்யும் நடிகை, தற்போது சம்பள விஷயத்திலும் விடாப்பிடியாக இருக்கிறாராம்.

    இயக்குனர் ஒருவர் கதைசொல்ல நடிகையை அணுகினாராம். கதைக்கேட்டு பிடித்துப்போக, நடிகை ரூ.2 கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்தால் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம். இயக்குனர் சம்பளத்தை குறைக்க சொல்லியும், மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம் அந்த நடிகை. 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர், ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் வருவதால் கடுப்பாகி இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமீபத்தில் வெப் தொடர் ஒன்றில் நடித்திருந்தாராம். இந்த தொடர் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகள் எழுந்தது. இருப்பினும் இந்த தொடரை படக்குழுவினர் வெளியிட்டார்களாம். இதில் நடிகை கவர்ச்சியாகவும் துணிச்சலாகவும் நடித்திருக்கிறார் என்று பெயர் கிடைத்ததாம். 

    தற்போது நடிகைக்கு அதேபோல் கவர்ச்சியாக வேண்டும் என்று அழைப்பு வருகிறதாம். இதனால் கடுப்பான நடிகை, அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க போவதில்லை என்று முடிவு எடுத்துக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தனது சம்பளத்தை கேட்டால் விரலை நீட்டி சொல்லுகிறாராம்.
    தமிழில் நடிகையாக பிரபலமானவர் பாடுவதிலும் சிறந்தவராம். நடிகை தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பேய் படத்திற்காக தனது சம்பளத்தை ரூ.70 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறாராம்.

    இந்த படம் வெளியான பிறகு தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லி வருகிறாராம். மேலும் புதியதாக கதை சொல்ல வரும் இயக்குனர்கள் நடிகையிடம் சம்பளம் எவ்வளவு என்று கேட்டால், ஒரு விரலை நீட்டி கேட்கிறாராம். அதாவது ரூபாய் 1 கோடி கேட்கிறாராம்.
    ×