search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ் சினிமாவில் தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை ஒருவர் படக்குழுவினருடன் அடம்பிடித்து வருகிறாராம்.
    சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நடிகை ஒருவர், குறைந்தளவு சம்பளம் பேசி பல படங்களை கைவசம் வைத்திருக்கிறாராம். எப்படி படங்களை பிடித்தார் என்று சக நடிகைகள் இவர் மீது பொறாமைபட்டு வருகிறார்களாம். ஆனாலும் நடிகை படங்களில் கமிட்டாகிக் கொண்டே செல்கிறாராம்.

    அப்படி கமிட்டான ஒரு படத்தில் கொஞ்சம் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்களாம். ஆனால், நடிகை அதெல்லாம் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம். இப்படி கமிட்டான பிறகு அடம் பிடிக்கிறீங்களே என்று படக்குழுவினர் புலம்பி வருகிறார்களாம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர் தனது மனதை மாற்றி இருக்கிறாராம்.
    தற்போது பிரபலமாக இருக்கும் பாலிவுட் நடிகை ஒருவர், தமிழ், தெலுங்கு மொழிகளில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாராம். ஆனால் பாலிவுட்டில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மும்பைக்கு பறந்து சென்றாராம். 

    பாலிவுட்டில் இடத்தை தக்க வைத்துக் கொள்ள குறைந்தளவு சம்பளம் வாங்கினாராம் நடிகை. இவர் நடித்த படங்களும் நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது நடிகைக்கு பல பட வாய்ப்புகள் தேடி வருகிறதாம். இதனால் நடிகை தனது மனதை மாற்றி அதிக சம்பளம் வாங்கலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
    முன்னணி நடிகையாக இருந்தவரின் மகள் ஒருவர், நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்து இருக்கிறாராம்.
    வாரிசு நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் தனது தாய் போல் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தாராம். ஆனால் நடிகைக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நடிகை, இனியும் சினிமா வாய்ப்பு வரும் என காத்திருக்க விரும்பவில்லையாம்.

    அதனால் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, தான் தற்போது பொறுப்பு வகித்து வரும் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பணியையே தொடர முடிவு செய்துள்ளாராம் நடிகை. மேலும் இனி சினிமா பக்கமே திரும்புவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளாராம். 
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க தயக்கம் காட்டுகிறாராம்.
    தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்து பாடகியாக இருப்பவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாராம். இந்நிலையில் திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தாராம். ஒரு அரசியல் சார்ந்த நடிகரை நம்பி ஏமாந்து விட்டேன் என்று கூறி வந்தாராம்.

    தற்போது நடிகை தன்னுடைய ரூட்டை மாற்றி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறாராம். ஹீரோக்களுடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டால், பதில் அளிக்க மறுக்கிறாராம்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகர் ரசிகர்களை ஏமாற்றியதால் பலரும் அவர் மீது கடுப்பில் இருக்கிறார்களாம்.
    தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருப்பர், தன் தந்தை அளவிற்கு நடிப்பில் ஜொலிக்க முடியவில்லையாம். தன் வீட்டின் கதவை தட்டுபவர்கள் அனைவரும் தந்தைக்கே வாய்ப்பு தருகிறார்கள் என்று புலம்பு கிறாராம். இவர் முன்னணி நடிகருக்கு தீவிர ரசிகர் என்று அடிக்கடி சொல்லுவாராம்.

    இதனால் முன்னணி நடிகரின் ரசிகர்கள் பலரும் வாரிசு நடிகரை பின் தொடர்கிறார்களாம். இந்நிலையில் நடிகரை அணுகி, முன்னணி நடிகரின் பிறந்தநாளுக்கு போஸ்டர் ரிலீஸ் செய்து கொடுங்கள் என்று ரசிகர்கள் பலரும் கேட்டுக் கொண்டார்களாம். நடிகர் அனைவரிமுடம் ரிலீஸ் செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டு கடைசியில் அனைவரையும் ஏமாற்றி விட்டாராம். இதனால், முன்னணி நடிகரின் ரசிகர்கள் பலரும் வாரிசு நடிகர் மீது கடுப்பில் இருக்கிறார்களாம்.
    வாரிசு நடிகர் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காததால் கடும் அப்செட்டில் உள்ளாராம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகர் ஒருவர், திரையுலகில் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தாராம். இவர் இவ்வாறு நடிக்க இவர் தந்தை தான் காரணம் என சொல்கிறார்கள். ஏனெனில் அவர் மிகப்பெரிய தயாரிப்பாளராம். 

    இப்படி செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்த அந்த நடிகர், தற்போது ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாராம். ஏனெனில் அவர் அடுத்ததாக நடிக்கப்போவது பாலிவுட் படமாம். அதில் நாங்கள் நடிக்க மாட்டோம் என முன்னணி நடிகைகள் தெரிவித்துவிட்டதால், இரண்டாம் நிலை ஹீரோயின்களிடம் பேசி வருகிறார்களாம்.
    நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர் தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி இருக்கிறாராம்.
    பிரபல நடிகை ஒருவர், தான் நடிக்கும் படங்களின் கதைகள் அனைத்தும் தன் கதாபாத்திரங்களின் மீது பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே அவர் நடிக்க விரும்புகிறாராம்.

    லட்சத்தில் சம்பளத்தை வாங்கி வந்த நடிகை தற்போது, சம்பளத்தை கேட்டால் ஒரு கோடியை தாண்டி கேட்கிறாராம். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடந்ததை எண்ணி வருந்தி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், தற்போது 50 படங்களை நிறைவு செய்து இருக்கிறாராம். இவர் நடிக்க வந்த புதிதில் கொழு கொழு என்று இருந்தாராம். அப்போது பட வாய்ப்புகளும் கிடைத்ததாம்.

    உடல் எடையை குறைத்தால் இன்னும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நெருங்கியவர்கள் கூற, நடிகை தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறினாராம். ஆனால் எந்த பட வாய்ப்பும் வர வில்லையாம். இதனால் நடிகை உடல் எடையை குறைக்க எடுத்த முயற்சியை எண்ணி வருந்தி வருகிறாராம்.
    முன்னணி நடிகராக இருப்பவர், தான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் கதாநாயகி மாற்றியிருக்கிறாராம்.
    கட்சி தலைவராகவும் நடிகராகவும் இருப்பவர், கடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததால் மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பியிருக்கிறாராம். சமீபத்தில் வெளியான மலையாள படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழில் ரீமேக் செய்வதையே இப்போதைக்கு கையில் எடுத்திருக்கிறாராம் நாயகன். 

    முதல் பாகத்தில் மனைவியாக நடித்த நடிகையை மீண்டும் நடிக்க வைக்க நாயகனுக்கு விருப்பம் இல்லையாம். இதனால் மலையாளத்தில் நடித்தவரையே தமிழில் நடிக்க வைக்கப் போகிறாராம்.
    அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நடிகை திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    திருமணத்துக்குப்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகையின் சில படங்கள், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையாம். இதற்கு காரணம் அவர் மாற்று திறனாளி கதாபாத்திரங்களில் நடித்ததுதான் என்ற உண்மையை அவரது சினேகிதிகள் போட்டு உடைத்தார்களாம்.

    அதனால் நடிகை, இனிமேல் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம். தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கண்டிப்பாக சொல்லி விடுகிறாராம்.
    கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான நடிகை ஒருவரின், அதிரடி மாற்றம் தயாரிப்பாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளதாம்.
    தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வந்த ஒருவர், தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறாராம். அவருக்கு வயதாகி வருவதால் முன்னணி நடிகர்கள் அவருடன் நடிக்க மறுக்கிறார்களாம். இதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடித்த அவர் அதிலும் தோல்வியை தழுவினாராம்.

    தற்போது வேறு வழியின்றி இளம் நடிகர்களுடன் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறாராம் அந்த நடிகை. மேலும் அவர் தனது சம்பளத்தையும் கணிசமாக குறைத்து இருக்கிறாராம். நடிகையின் இந்த அதிரடி மாற்றம் தயாரிப்பாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளதாம்.
    பிரபல நிறுவனம் ஒன்றிடமிருந்து இந்தியில் இரண்டு படங்களில் நடிப்பதற்கான வந்த அழைப்பை பிரபல நடிகை மறுத்து விட்டாராம்.
    தமிழில் நடித்து பிரபலமான நடிகைகள், தெலுங்கு சினிமாவில் நுழைந்து அடுத்ததாக பாலிவுட்டுக்கு செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால், அந்த வாய்ப்பு பல நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை. தற்போது ஒரு நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தும் பட வாய்ப்பை மறுத்து இருக்கிறாராம்.

    மலையாளத்தில் காதல் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நடிகை தற்போது தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறாராம். இந்தநிலையில் நடிகைக்கு பிரபல நிறுவனம் ஒன்றிடமிருந்து இந்தியில் இரண்டு படங்களில் நடிப்பதற்கான அழைப்பு தேடிவந்ததாம். ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் நடிகை.
    ×