search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    முன்னணி நடிகையாக வலம் வருபவர், நீச்சல் உடையில் நடிக்க அதிக சம்பளம் கேட்டு வாங்கி இருக்கிறாராம்.
    தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகை, தெலுங்கில் சம்பளம் அதிகம் என்பதால் அங்கேயே கவனம் செலுத்தி வருகிறாராம்.

    தற்போது நடிகை ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்கிறாராம். அந்த படத்தின் ஒரு காட்சியில், அவர் நீச்சல் உடையில் தோன்றுகிறாராம். இதற்காக அவருக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ஒருவர் கடன் பிரச்சனையில் சிக்கி இருக்கிறாராம்.
    முன்னணியில் இருக்கும் நடிகர் ஒருவர் கடன் சுமையில் இருக்கிறாராம். தான் நடித்த படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்களின் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டது. சம்பளத்தை விட்டுக் கொடுத்தது என எல்லாம் சேர்ந்து பெரும் தொகை கடனாக நிற்கிறதாம். 

    கொரோனா காலம் வராமல் போயிருந்தால் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு சமாளித்திருப்பாராம். இப்போது படங்கள் முடங்கி கிடப்பதால், கடன் வளர்ந்து நிற்கிறதாம்.

    அவரின் இந்த நிலையை புரிந்து கொண்ட ஒரு நிறுவனம். அடுத்தடுத்து 5 படங்கள் நடித்துக் கொடுங்கள். ஒரு படத்துக்கு 15 கோடி சம்பளம் வீதம் 75 கோடியை மொத்தமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேசி இருக்கிறார்களாம். நடிகரும் தற்போதைய சூழலுக்கு இது தான் வழி என ஒப்புக்கொண்டாராம்.
    சின்னத்திரை நடிகை ஒருவர், பெரிய திரைக்கு வருவதற்காக ஆசை பட்டு நிறைய விஷயங்கள் செய்து வருகிறாராம்.
    அந்தக் காலத்தில் சினிமாவில் ரிட்டையர் ஆன நடிகைகள் எல்லாம் சீரியலுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது இது தலைகீழாக மாறி சீரியலில் நடிப்பவர்கள் சினிமாவிற்குள் நுழைகின்றனர்.

    மேலும் சினிமா வாய்ப்பை எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகைகள் சிலர் தங்களது கவர்ச்சியான புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்களாம்.

    அந்தவகையில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறாராம்.
    முன்னணி நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர், ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு நடிக்காமல் முழு சம்பளத்தை வாங்கிக் கொண்டாராம்.
    தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து, நடிகர் இயக்குனராக வலம் வருபவர், கைவசம் நிறைய படங்களில் நடித்து வெளியாகாமல் இருக்கிறதாம். இந்நிலையில் நடிகர் புது படத்தில் கமிட்டாகியுள்ளாராம்.

    இந்தப் படத்திற்கு ஒரு பெரிய சம்பளம் பேசி அதை மொத்தமாகவே வாங்கிவிட்டாராம் நடிகர். நடிகரை பற்றி தெரியாமலே அந்த புது தயாரிப்பாளர் அவருக்கு முழு சம்பளத்தை எப்படி கொடுத்தார் என்று பலரும் பேசி வருகிறார்களாம். 
    மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் மீண்டும் நடிகருடன் இணைய மறுத்து இருக்கிறாராம்.
    மலையாளத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகை, தமிழில் ஒரு படத்தில் பிரபல நடிகரும் ஜோடி சேர்ந்து நடித்தாராம். அந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றதாம்.

    இதையடுத்து நடிகைக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்ததாம். ஆனால் நடிகை நடிக்க மறுத்து விட்டாராம். தற்போது தமிழ் படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம். ஒரு இயக்குனர் நடிகையை அணுக, ஹீரோ யார் என்று நடிகை கேட்டு படத்தில் நடிக்க மாட்டேன் என்று நோ நோ சொல்லி விட்டாராம்.

    ஏற்கனவே நடித்த ஹீரோ என்பதால் மறுத்து விட்டாராம். காரணம் விசாரித்தால் முன்பு நடந்த எதோ சம்பவத்தால் நடிகை மறுத்ததாக சொல்கிறார்களாம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவரின் திரைப்படம் ஒன்று சர்ச்சையில் சிக்கி இருக்கிறதாம்.
    தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர்போன நடிகர், சில மாதங்களாக எந்த சர்ச்சையில் சிக்காமல் இருந்து வருகிறாராம். ஆனால், தற்போது நடிகர் நடித்த படம் ஒன்று சர்ச்சையில் சிக்கி இருக்கிறதாம். 

    நடிகர் தன்னுடைய முன்னாள் காதலியுடன் நடித்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறதாம். ஆனால், அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும், டைரக்டருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாக உருமாறி இருக்கிறதாம். எல்லாம் நடிகர் வந்த நேரம்தான் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகர் ஒருவர், தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குனரை மிரட்டி இருக்கிறாராம்.
    மாஸ்டராக இருந்து டைரக்டராக மாறியவர் இந்தியில் இயக்கிய இரண்டெழுத்து படம், காலை வாரிவிட்டதாம். எதிர்பார்த்த வசூல் குறைந்ததாம். தயாரிப்பாளருக்கு இதனால் ரூ.80 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறதாம். அதை தயாரிப்பாளர் வேறுயாரிடமும் காட்டிக் கொள்ளவில்லையாம்.

    அவருடைய கோபத்தை கதாநாயகன் மூலம் வெளிப் படுத்தினாராம். ‘‘இனிமேல் உன்னை மும்பை பக்கம் பார்க்கக் கூடாது’’ என்று அந்த இயக்குனரை கதாநாயகன் எச்சரித்து அனுப்பினாராம். நல்லவேளை...அடி விழவில்லை என்கிறார்களாம்.
    கோலிவுட்டில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வந்த நடிகை ஒருவர், தற்போது பட வாய்ப்பு இல்லாததால் கிளாமர் ரூட்டுக்கு மாறி உள்ளாராம்.
    கோலிவுட்டில் பாவாடை தாவணி அணிந்து பவ்வியமாக நடித்து வந்த நடிகை ஒருவர், தற்போது பட வாய்ப்பு இல்லாததால், கவர்ச்சி வேடமானாலும் சரி என வரிந்து கட்டி நிற்கிறாராம். எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என கிளாமராக போட்டோஷூட்டும் நடத்தி வருகிறாராம்.

    இவரெல்லாம் கிளாமருக்கு செட்டாக மாட்டார் என ஒரு காலத்தில் சொன்ன இயக்குனர்கள், தற்போது அவரின் மாற்றத்தைப் பார்த்து மலைத்துப் போயுள்ளார்களாம். அவரைச் சுடச்சுட களத்தில் இறக்கி விடும் சூப்பரான கேரக்டர்களை தயார் பண்ண துவங்கியுள்ளார்களாம் சில இயக்குனர்கள்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், தனது சம்பள விஷயத்தில் திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
    பருவக் காற்றாக திரையுலகுக்கு அறிமுகமான நடிகர் கைவசம் 6 படங்கள் உள்ளன. ஆறு படங்களுமே முடிவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. ஆறு படங்களில் ஒன்று கூட ரிலீஸ் ஆகாத நிலையில், அந்த நடிகர் சம்பள விஷயத்தில் ஒரு முடிவெடுத்து இருக்கிறார்.

    இனிமேல் ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்பது என்பதே அந்த முடிவுவாம். இதையறிந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் இருக்கிறார்களாம். 
    தமிழ், இந்தி மொழிகளில் நடித்த பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் அப்படி நடித்தால் தப்பில்லை என்று துணிச்சலாக கூறியிருக்கிறாராம்.
    தமிழில் உச்ச நடிகராக இருக்கும் நடிகருக்கு ஜோடியாக நடித்த நாயகி புதுசாக ஒரு இந்தி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாராம். அதில் ஒரு காட்சியில் அவர் முழு நிர்வாணமாக தோன்றுகிறாராம்.

    ‘‘இப்படி நடிக்க எப்படி துணிந்தீர்கள்?’’ என்று கேட்பவர்களிடம், ‘‘நிர்வாணம் தப்பு அல்ல’’ என்று சிரித்தபடி கூறுகிறாராம். 
    தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் சம்பள பிரச்சனையால் படத்திலிருந்து விலகி விட்டாராம்.
    வரலாற்றுப் படங்களில் நடித்து பிரபலமான தமிழ், தெலுங்கு பட நடிகை, ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு முன்பாக ஒத்துக் கொண்டதால் அதிக சம்பளம் பேசி இருந்தாராம்.

    இப்போது நடிகைகள் பலரும் சம்பளத்தை குறைத்துக் கொண்டதால் நடிகையும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறினார்களாம். இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவர் இயக்குனரை விடாமல் துரத்தி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகர், பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது மீண்டும் படங்களில் நடிக்கலாம் என்று முடிவு செய்தாராம். நடிகர் எடுத்த முடிவுக்கு பிறகு கொரோனா வந்து அவரது முயற்சியை கெடுத்து விட்டதாம்.

    இந்நிலையில் நடிகருக்கு வெற்றியான இயக்குனர் படத்தில் நடிக்க வேண்டும் என்று தீராத ஆசையாம். ஆனால் இயக்குனர் நடிகரை கண்டுக் கொள்ளாமல் இருக்கிறாராம். நடிகர் இயக்குனரை விடாமல் துரத்து கிறாராம்.
    ×