search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, பட வாய்ப்புக்காக எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் கிடைக்காததால் போட்டோ ஷூட் மட்டுமே எடுத்து வருகிறாராம்.
    தமிழில் கண் கட்டிய படம் மூலம் அறிமுகமான நடிதமிழில்கை, முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்திருந்தாராம். அவர்களுடன் நடித்ததால் தான் ஒரு பெரிய நடிகை என்று நினைக்க ஆரம்பித்து விட்டாராம். சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகம் சேர்ந்ததால் முன்னணி நடிகையாகி விட்டோம் என்று நினைத்து பல சின்ன படங்களை நடிக்க மறுத்து வருகிறாராம்.

    ஆனால், நடிகை எதிர்பார்த்த பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். இதனால் போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்தாராம். இதை நடிகர்கள், இயக்குனர்களுக்கு தூது என பல முயற்சிகளில் இறங்கினாராம். ஆனால், எதுவும் நடிகைக்கு கைகொடுக்கவில்லையாம். இருப்பினும் நடிகை போட்டோ ஷூட் எடுப்பதை கைவிடவில்லையாம்.
    தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையின் ஆர்வத்தை இயக்குனர்கள் மறுத்து வருகிறார்களாம்.
    தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி நடிகையாக பிசியாக இருந்த யோகா நடிகை, வரலாற்று படத்தின் 2 வது படத்துக்கு பிறகு தேர்ந்தெடுத்தே நடித்தாராம். உடல் எடையை குறைத்த பிறகு ஒரு படத்தில் மட்டும் நடித்தாராம்.

    இதனால் பல நடிகைகள் அவர் இடத்துக்கு போட்டியாக வந்துவிட்டார்களாம். இருந்தாலும் இழந்ததை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் ஆண்டு அதிக படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக நிறைய கதைகள் கேட்டுவருகிறாராம். 

    ஆனால், இயக்குனர்களோ நடிகைக்கு கதை சொல்ல மறுக்கிறார்களாம். நடிகைக்கு வயதாகிவிட்டது என்று ஓரம்கட்டுகிறார்களாம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், ஒரு நடிகருடன் இணைந்து நடிக்க தயக்கம் காண்பித்து வருகிறாராம்.
    தமிழில் முட்டை படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாராம். இதற்காக பல கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் தான் நடிக்கும் படங்களில் தன்னுடன் நடிப்பவர்களை அவரே தேர்வு செய்வாராம்.

    சமீபத்தில் நடிகை ஒப்பந்தமான படத்தில் பிரபல பாடகியின் கணவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் கேட்டார்களாம். இதற்கு நடிகை மறுப்பு தெரிவித்தாராம். பின்னர் படக்குழுவினரின் வற்புறுத்தலால் இளம் நடிகருடன் நடிக்க சரி என்று சொன்னாராம். இருப்பினும் நடிகை விருப்பம் இல்லாமல் அந்த படத்தில் நடித்து வருகிறாராம்.
    இயக்குனர்கள் சொல்லும் கதையும், கதாபாத்திரமும் தனக்கு ஒத்து வந்தால் மட்டுமே நடிப்பேன் என பிரபல நடிகை ஒருவர் கண்டிஷன் போடுகிறாராம்.
    பெரும்பாலும் ஹீரோக்கள் தான், இயக்குனர்கள் கதை சொல்லும்போது, ‘ரசிகர்கள் இந்த மாதிரி தான், என்னை திரையில் பார்க்க ஆசைப்படுகின்றனர், அதற்கேற்ப காட்சிகளை மாற்ற வேண்டும்...’ என்று சொல்வர். அதேபோன்று ஆறெழுத்து நடிகை ஒருவர், படத்தில் தனது கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்று இயக்குனர்களிடம் பட்டியலிடுகிறாராம். 

    அதில், ஹீரோவுக்கு இணையான வேடமாக இருக்கனும், ஓவர் கிளாமராக காட்டக்கூடாது, ஓவராக அழுது வடியக் கூடாது என பல கண்டிஷன்களை அடுக்குகிறாராம். முக்கியமாக இயக்குனர்களின் கதையும், கதாபாத்திரமும் தனக்கு ஒத்து வந்தால் மட்டுமே நடிப்பேன், இல்லையேல் ‘இந்த கதை எனக்கு செட்டாகாது, வேறு நடிகையை பாத்துக்கோங்க என்று கூலாக சொல்லி’ திருப்பி அனுப்பிவிடுகிறாராம் அந்த நடிகை.
    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம்வரும் ஒருவர், நடித்தால் அந்த நடிகையுடன் தான் நடிப்பேன் என கண்டிஷன் போடுகிறாராம்.
    பிரபல நடிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறாராம். அவர் தற்போது இளம் இயக்குனர் ஒருவரை ஒப்பந்தம் செய்து புதிய படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறாராம். இந்த படத்திற்கான ஹீரோயின் தேடுதல் வேட்டை நடைபெற்றதாம்.

    அதற்கு நடிகர், ஐந்தெழுத்து நடிகையை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொன்னாராம். நடிகை பல படங்கள் கைவசம் வைத்திருப்பதால் ரொம்ப பிசி, என்று நடிகரிடம் சொன்னால் கூட ஏற்க மறுக்கிறாராம். 

    எப்படியாவது அந்த நடிகையை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர் குழம்பிப்போய் உள்ளாராம்.
    பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், படத்தில் நடித்தது தப்பா போச்சே என்று வருத்தத்தில் இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், கணவரை பிரிந்த பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறாராம். சமீபத்தில் இவர் நடித்த படம் ஒன்று வெளியாவதற்கு பிரச்சனைகள் எழுந்ததால் தன் பணத்தை செலவு செய்து படத்தை வெளியிட்டாராம்.

    தற்போது அதே போல் இவர் நடித்த மற்றொரு படமும் ரிலீசுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறதாம். இதை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் நடிகையை அணுக, அவரோ உங்க படத்தில் நடித்தது தப்பா போச்சே என்று வருத்தப்பட்டு புலம்பி வருகிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், தனக்கு ஒரு நியாயம், அவருக்கு ஒரு நியாயமா என்று புலம்பி வருகிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சின்ன நம்பர் நடிகை, பல வருடங்களாக கதாநாயகியாக நடித்து வருகிறாராம். ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து போரடித்து விட்டதால், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறாராம்.

    இந்த நிலையில், நடிகை தான் நடித்த படங்களின் புரோமஷனுக்கு கலந்துக் கொள்ள மறுத்து வருகிறாராம். இதனால், கோபமடைந்த தயாரிப்பாளர் ஒருவர் நடிகையிடம் கேட்க, அதற்கு பெரிய நம்பர் நடிகை மட்டும் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்வதில்லை, அவரை யாரும் கேட்க வில்லை.. என்னை மட்டும் ஏன் கேட்கிறீங்க... இது நியாயமே இல்லை என்று புலம்புகிறாராம்.
    பிரபல நடிகர் ஒருவர், சர்ச்சைகளால் தான் நான் வளர்கிறேன், சிறிய விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கி விடுகின்றனர் என்று சொல்கிறாராம்.
    சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் அடுத்தடுத்து சிக்கி வருகிறார் இரண்டு பெயர் கொண்ட நடிகர். ஆனபோதும், அதுகுறித்து அந்த நடிகர் பெரிதாக வருத்தப்படுவதில்லையாம்.  

    இதுபற்றி அவரிடம் கேட்டால், சர்ச்சைகளால் தான் நான் வளர்கிறேன், என் மீது அனைவரது கவனமும் இருப்பதால், சிறிய விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கி விடுகின்றனர் என்று கேஷுவலாக சொல்கிறாராம்.

    அதோடு, இது பத்தாது, இன்னும் நிறைய சர்ச்சைகளை எதிர்பார்க்கிறேன் என்று தில்லாக சொல்லி நல்லெண்ண அடிப்படையில் அட்வைஸ் கொடுத்தவர்களை வாயடைக்க வைத்து விடுகிறாராம். 
    தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் முன்னணி நடிகருக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்த நடிகையின் படம் ப்ளாப் ஆனதால், தெலுங்கு பக்கம் சென்ற நடிகை அங்கு முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தாராம். தற்போது அந்த நடிகை தமிழில் முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறாராம்.

    இந்நிலையில், அடுத்த படத்திற்காக தமிழில் மற்றொரு முன்னணி வாரிசு நடிகருக்கு கொக்கி போட்டு வருகிறாராம். எப்படியாவது அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் வாரிசு நடிகை, படப்பிடிப்புக்கு செல்ல மறுத்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் வாரிசு நடிகை, கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மிகவும் பிசியாக படப்பிடிப்புக்கு சென்று வந்தாராம். ஊரடங்கில் எந்த படப்பிடிப்புக்கும் செல்லாமல் இருந்ததால் நடிகைக்கு சோர்வு அதிகமாகி விட்டதாம்.

    ஊரடங்கு தளவிற்குப் பிறகும் நடிகை படப்பிடிப்புக்கு செல்லவில்லையாம். நடிகையை அழைத்தால் எதாவது காரணம் சொல்லி ஏமாத்துகிறாராம். எல்லாரும் படப்பிடிப்புக்கு செல்கிறார்கள் நடிகை மட்டும் ஏன் படப்பிடிப்புக்கு வரமறுக்கிறார் என்று பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறதாம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகையின் முயற்சியை பலரும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்களாம்.
    அழகா, குண்டாக இருந்த நடிகையை ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருந்ததாம். என்ன நினைத்தாரோ தெரியவில்லை தன் உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும் தோலுமாக ஆகிவிட்டாராம். அவர் எடையை குறைத்ததோடு மார்க்கெட் மரண அடி வாங்கிவிட்டதாம். ஒல்லியான பிறகு நடிகையை பார்க்க பரிதாபமாக, வயதானவர் போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்களாம். 

    நடிகை அவ்வப்போது தன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறாராம். பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால், யாருமே கண்டுகொள்வது இல்லையாம். வாய்ப்புகள் கிடைக்காததால், நடிகையின் கவனம் வேறு பக்கம் திரும்பியிருக்கிறதாம். 
    வாரிசு நடிகர் ஒருவர், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு புது கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம்.
    கோலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்த வாரிசு நடிகர் ஒருவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக நடித்த படங்கள் அனைத்தும் பிளாப் ஆனதாம். இதனால் இனி நடிக்க இருக்கும் படங்களுக்கான கதை தேர்வில் முழு கவனம் செலுத்த உள்ளாராம். அதேபோல் கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு புது கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம்.

    தன்னிடம் நன்றாக கதை சொல்லும் இயக்குனர்கள், அதை படமாக்கும் போது கோட்டைவிடுவதாக எண்ணும் அந்த நடிகர், இனிமேல் முழு கதையையும் கேட்டு, அது தனக்கு பிடித்தால் மட்டுமே அந்த இயக்குனருக்கு ஓகே சொல்வது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். நடிகரின் இந்த முடிவு கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    ×