search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க அதிக சம்பளம் கேட்டிருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் தொடந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நடிகை, தற்போதும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறாராம். இதற்காக நடிகையிடம் ஒரு கணிசமான தொகை சம்பளமாக பேசப்பட்டதாம்.

    புதுமுக நடிகர்தான் இந்த படத்தில் உங்களுக்கு ஜோடி என்று சொன்னவுடன் திடீரென சம்பளத்தை அதிகமாக உயர்த்தி விட்டாராம். என்னை நம்பிதான் கதை, நீங்கள் தரவில்லை என்றால் விலகி விடுவேன் என்று நடிகை சொன்னதால் படக்குழுவினர் அதிக சம்பளம் கொடுத்து இருக்கிறார்களாம்.
    பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர், பாதியில் நிற்கும் படத்தை முடிக்க இயக்குனரை தேடி அலைந்து வருகிறாராம்.
    கோலிவுட்டில் மூத்த இயக்குனராக இருக்கும் ஒருவர், அவ்வப்போது படங்களையும் தயாரித்து வருகிறாராம். இவர் அடுத்ததாக தயாரிக்கும் படத்தை பிரபல இயக்குனர்கள் இணைந்து இயக்குகிறார்களாம். அப்படத்திலிருந்து ஒரு பிரபல இயக்குனர் மட்டும் திடீரென விலகினாராம்.

    அந்த இயக்குனர், எடுத்த படத்தை பார்த்த தயாரிப்பாளர், மிகவும் மோசமாகப் படமாக்கப்பட்டுள்ளதாக கோபமாக கூறினாராம். இதனால் கடுப்பான இயக்குனர் படத்தின் பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு திடீரென விலகிவிட்டாராம். தற்போது பாதியில் நிற்கும் அந்த படத்தை முடிக்க வேறு இயக்குனரை தேடி அலைகிறாராம் அந்த தயாரிப்பாளர்.
    கோலிவுட்டில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் ஒருவர், தற்போது தயாரிப்பாளர் கிடைக்காமல் திண்டாடி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே பிரபலமான நடிகர், அந்த படத்துக்குப் பிறகு, அவருக்கு எந்த படமும் பெரியதாக கைக்கொடுக்கவில்லையாம். இதனால், சொந்தமாக பட தயாரிப்பில் இறங்கினாராம். அந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால் நஷ்டம் அடைந்தாராம்.

    இந்த படத்திற்காக வாங்கிய கடன், தற்போது பிரச்சனையாகி வருகிறதாம். இதனால் நடிகர் பெயரை மற்ற தயாரிப்பாளர்களிடம் சொன்னால் முகம் சுளிக்கிறார்களாம். அவரை வைத்து படம் எடுதால் வம்பு, வழக்குகள் படத்தை பாதிக்கும் என்று பட அதிபர்கள் பயப்படுகிறார்களாம். இதனால் அந்த நடிகர் தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகிறாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சக நடிகர்களுடன் பேச மறுத்து வருகிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் தற்போது கைவசம் ஒரு சில படங்களை வைத்து இருக்கிறாராம். இவரை பற்றி வெளிநாட்டு பெண் ஒருவர் புகார் அளித்து இருக்கிறாராம். இது குறித்த செய்திகள் வெளியாகியும், நடிகர் தரப்பில் இதுவரைக்கும் எந்த மறுப்பும், செய்தியும் வெளியாகவில்லையாம்.

    மேலும் நடிகர் தன்னுடைய பட விழாவையும் சமீபத்தில் ரத்து செய்தாராம். ஒருவேளை நடிகர் மேல் அளித்த புகார் உண்மையாக இருக்குமோ என்று பலரும் நடிகரிடம் நாசுக்காக கேட்கிறார்களாம். இதனால், நடிகர் தன்னுடைய சக நடிகர்களுடன் பேச மறுத்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகை ஒருவர் வீசிய வலையில் பல முன்னணி நடிகர்கள் மாட்டி இருக்கிறார்களாம்.
    சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நடிகைக்கு பெரிய நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டராம். இளம் நடிகர்கள் படத்தில் நடித்தால் பெரிய நடிகையாக வர முடியாது என்பதை தெரிந்துக் கொண்ட நடிகை, முன்னணி நடிகர்களுக்கு வலை வீசினாராம்.

    நடிகையின் வலையில் பல முன்னணி நடிகர்கள் சிக்கி இருக்கிறார்களாம். இதற்கு பலனாக நடிகையின் கைவசம் பல படங்கள் இருக்கிறதாம். இவை அனைத்தும் முன்னணி நடிகர்களாம். நடிகையின் யுக்தியை பல இளம் நடிகைகள் பின் தொடர இருக்கிறார்களாம்.
    முன்னணி நடிகர் ஒருவர் வில்லன் வேடத்தில் நடிக்க பல கோடி ரூபாய் சம்பளமாக கேட்டு இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவருக்கு தற்போது வில்லன் வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறதாம். நடிகரும் கதை கேட்டு, எந்த மொழி என்றாலும் ஓகே சொல்லி விடுகிறாராம். ஒரு படக்குழுவினர் நடிகரை அணுகி வில்லன் வேடத்தில் நடிக்க கேட்டார்களாம்.

    நடிகரும் கதை கேட்டு ஓகே சொல்ல, சம்பளமாக 20 கோடி கேட்டாராம் நடிகர். இதைக் கேட்டு பதறி போன படக்குழுவினர் அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். தற்போது அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்களாம்.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஒருவர், தற்போது சர்ச்சைக்குரிய வேடங்களுக்கு முக்கியத்தும் அளிக்கிறாராம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை ஒருவர், கோலிவுட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தாராம். தற்போது அந்த நடிகைக்கு வயதாகி விட்டாதால், பட வாய்ப்பும் படிப்படியாக குறைந்துவிட்டதாம். இழந்த பட வாய்ப்பை பிடிக்க அந்த நடிகை அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

    அதன்படி சர்ச்சைக்குரிய கதைகளில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அடுத்த படத்தில் 40 வயது பெண்ணாக நடிக்கிறாராம். அந்த படத்தில் 20 வயது நடிகருடன் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளும் அவருக்கு இருக்கிறதாம். நடிகையின் இந்த முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளதாம்.
    சின்னத்திரை, பெரியத்திரை என்று கலக்கி வரும் பிரபல நடிகை ஒருவர், விளம்பரத்திற்கு அதிக பணம் கேட்டு இருக்கிறாராம்.
    தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடியில் போட்டோ எடுத்து பிரபலமான நடிகை, சமீபகாலமாக சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறாராம். இவர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி வரவேற்பு பெற்றதால் ஏராளமான ரசிகர்களை பெற்றாராம். மேலும் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று நல்ல பெயரையும் எடுத்தாராம்.

    இந்நிலையில், நடிகையிடம் ஒரு நிறுவனம் அணுகி தங்கள் பொருட்களை விளம்பர படுத்தம் விதமாக ஸ்டோரி மற்றும் போஸ்ட் போட வேண்டும் என்று கேட்டார்களாம். இதற்கு நடிகை, ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டாராம். இதை கேட்ட அந்த நிறுவனம் அதிர்ச்சியில் எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார்களாம்.
    வாரிசு நடிகருடன் நடித்து பிரபலமான நடிகை கவர்ச்சி நோ சொன்னதால் பட வாய்ப்பை இழந்ததாக புலம்பி வருகிறாராம்.
    தமிழில் வாரிசு நடிகருடன் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், நடிகைக்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லை. தேடி வந்த படங்களில் கவர்ச்சியாக நடிக்க சொன்னதால் நடிக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டாராம்.

    நடிகை கவர்ச்சி நோ சொன்ன விஷயம் சினிமா உலகம் முழுவதும் தீயாக பரவியதால், நடிகைக்கு யாரும் பட வாய்ப்பை கொடுக்க வில்லையாம். தற்போது கைவசம் ஒரு படத்தை வைத்திருக்கும் நடிகை, கவர்ச்சி நோ சொன்னதால் பட வாய்ப்பை இழந்ததாக புலம்பி வருகிறாராம்.
    கோலிவுட்டில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர், பிரபல ஹீரோவின் முடிவால் அதிருப்தி அடைந்து உள்ளாராம்.
    பிரபல இயக்குனர் ஒருவர், நான்கெழுத்து நடிகருடன் கூட்டணி அமைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கி வந்தாராம். இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் படத்தை முடிக்கவில்லையாம். 

    ஹீரோ மற்ற படங்களில் பிசியானதால் முடிக்க முடியவில்லை என சொல்லிவந்தனர். தற்போது படத்தின் ஒரு சில காட்சிகளே எஞ்சி உள்ளதால், இதர பணிகளை செய்யுங்கள், அது முடிவதற்குள் எஞ்சியுள்ள காட்சிகளை நடித்து தருகிறேன் என ஹீரோ சொல்லியுள்ளாராம். 

    ஆனால் இதற்கு இயக்குனர் தரப்பில் இருந்து எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்களாம். ஹீரோ மீதுள்ள அதிருப்தியாலேயே இயக்குனர் அப்படி செய்வதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
    முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பிற்கே சரியா வரவில்லை, இதற்கு மட்டும் வந்துவிடுவாங்களா என்று படக்குழுவினர் புலம்பி இருக்கிறார்களாம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், தற்போது வாரிசு நடிகைக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். நடிகர் எப்போதும் ரசிகர்களிடம் நெருக்கமாக இருப்பதால் படப்பிடிப்பில் இருந்து கொரோனா பயத்தில் நடிகை ஓடினாராம்.

    அதன்பிறகு வீட்டிலேயே இருக்கும் நடிகை, சமீபத்தில் அந்த படத்தின் இயக்குனர் மரணமடைந்தாராம். இதற்கு படக்குழுவினர் உள்ளிட்ட பலர் நேரில் இரங்கல் தெரிவித்தார்களாம். அப்போது படத்தின் நடிகை இயக்குனருக்கு நேரில் வந்து இரங்கல் தெரிவிக்கவில்லையாம்.

    ஏன் என்று பலரும் கேட்டதற்கு, நடிகை படப்பிடிப்பிற்கே சரியா வரவில்லை. இயக்குனர் இறப்பிற்கு எப்படி வருவார்கள் என்று படக்குழுவினர் பலரும் புலம்பி இருக்கிறார்களாம்.

    தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் திறமையான நடிகை ஒருவர், பட வாய்ப்பை பிடிக்க சம்பளத்தை குறைத்துள்ளாராம்.
    திறமையான நடிகை என கோலிவுட்டில் பெயரெடுத்த நடிகை ஒருவர், குடும்பப் பிரச்சினை காரணமாக சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தாராம். தற்போது அவர் டோலிவுட்டில் பிசியாக இருந்தாலும், மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். ஆனால் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு அமையவில்லையாம்.

    இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க அவரை படக்குழுவினர் அணுகினார்களாம். முதலில் தயங்கியவர், பின்னர் நம்பர் நடிகையே இது போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பதால் ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் சம்பளம் மட்டும் பெரிய தொகையாகக் கேட்டாராம்.

    பட வாய்ப்பு இல்லாத போதே இப்படி பந்தா காட்டுகிறாரே என நொந்து போன படக்குழு, படத்தின் பட்ஜெட்டே கம்மி தான் என்று சொல்லி, நடிகையிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டார்களாம். கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனமில்லாத அந்த நடிகை, வேறு வழியின்றி குறைந்த சம்பளத்திற்கு ஓகே சொல்லி விட்டாராம்.
    ×