search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் படவாய்ப்பை இழந்து விட கூடாது என்பதற்காக புதிய திட்டம் போட்டு இருக்கிறாராம்.
    தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை, நடுவில் சித்தி பிரச்சனையால் வாய்ப்புகளை இழந்தாராம். அதன்பிறகு தமிழ் மொழி பக்கம் தலைகாட்டாமல் இருந்த நடிகை, தெலுங்கில் பிசியாக நடித்து வந்தாராம். தற்போது தமிழ் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.

    இந்த நிலையில், காமெடி நடிகருடன் நடிக்க நடிகையிடம் அணுகினார்களாம். நடிகையும் கதை கேட்டு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். திகைத்து போன படக்குழுவினர், நடிகையிடம் ஓரளவிற்கு சம்பளத்தை குறைத்து பேசினார்களாம். நடிகையும் பட வாய்ப்பை விட்டுவிட கூடாது என்பதற்காக உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, பட வாய்ப்புக்காக எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் கிடைக்காததால் புலம்பி வருகிறாராம்.
    தமிழில் கண் கட்டிய படம் மூலம் அறிமுகமான நடிகை, முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்திருந்தாராம். அவர்களுடன் நடித்ததால் தான் ஒரு பெரிய நடிகை என்று நினைக்க ஆரம்பித்து விட்டாராம். சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகம் சேர்ந்ததால் முன்னணி நடிகையாகி விட்டோம் என்று நினைத்து பல சின்ன படங்களை நடிக்க மறுத்து வருகிறாராம்.

    ஆனால், நடிகை எதிர்பார்த்த பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். இதனால் போட்டோஷூட், நடிகர்கள், இயக்குனர்களுக்கு தூது என பல முயற்சிகளில் இறங்கினாராம். ஆனால், எதுவும் நடிகைக்கு கைகொடுக்கவில்லையாம். இதனால், நடிகை புலம்பி வருகிறாராம்.
    தமிழில் சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அடுத்ததாக பெரிய நடிகருக்கு கொக்கி போட்டு இருக்கிறாராம்.
    தமிழில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான நடிகை, அடுத்ததாக முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு ஒரு வழியாக பட வாய்ப்பை பிடித்தாராம். அடுத்ததாக உச்ச நடிகரின் உறவினருக்கு கொக்கி போட்டு தூது அனுப்பி பட வாய்ப்பை பிடித்திருக்கிறாராம்.

    இந்நிலையில், நடிகை அடுத்ததாக தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவருடன் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறாராம். இதற்காக தூது அனுப்பி வருகிறாராம். மேலும் அவரின் கவனத்தை ஈர்க்க பல முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறாராம். போக்கிரியான நடிகர், நடிகையை கவனிப்பாரா என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர், நடிகரின் அழைப்பை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தற்போது தேர்தலில் மும்முரமாக செயல்பட்டு வருகிறாராம். தேர்தல் முடிந்த பிறகு இளம் இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதற்காக கதாநாயகி தேடுதல் வேட்டை நடைபெற்றதாம். ஆனால், நடிகரோ நான் இன்னும் முன்னணி நடிகை ஒருவரிடம் மட்டும் நடிக்க வில்லை, அவரை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொன்னாராம்.

    இதற்காக படக்குழுவினர் நடிகையை அனுகிய போது விரைவில் சொல்லுகிறேன் என்று சொல்லி இருக்கிறாராம். ஆனால், நடிகைக்கு அவருடன் நடிக்க விருப்பம் இல்லையாம். அதனால்தான் பெரியதாக கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம் நடிகை. 
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகையை சிலர் கிண்டல் செய்ததால் கோபப்பட்டு ஒரு செயலை செய்திருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான பெத்தான நடிகை, தனக்கு திறமை இருந்தும் ஏன் பட வாய்ப்பு கிடைக்க வில்லை என்று புலம்பி வந்தாராம். நடிகையை பார்த்த ஒரு சிலர் நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று கிண்டல் செய்தார்களாம்.

    இதனால், கோபப்பட்ட நடிகை அதை சீரியசாக எடுத்துக் கொண்டு உடல் எடையை குறைத்து இருக்கிறாராம். கிண்டலுக்கெல்லாமா உடல் எடையை குறைப்பார் என்று தற்போது பலரும் பேசி வருகிறார்களாம். இனிமேலாவது நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், அந்த நடிகைதான் வேண்டும் என்று படக்குழுவினருக்கு கட்டளை போடுகிறாராம்.
    தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். இது ஒரு பக்கம் இருந்தாலும் இளம் இயக்குனர் ஒருவரை ஒப்பந்தம் செய்து புதிய படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறாராம் நடிகர். இந்த படத்திற்கான நாயகி தேடுதல் வேட்டை நடைபெற்றதாம்.

    அதற்கு நடிகர், நான் இன்னும் பெரிய நம்பர் நடிகையுடன் மட்டும் நடிக்கவில்லை. அதனால் அவரை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறாராம். நடிகை பல படங்கள் கைவசம் வைத்திருப்பதால் ரொம்ப பிசி என்று நடிகரிடம் சொன்னால் கூட ஏற்க மறுக்கிறாராம். எப்படியாவது அந்த நடிகை வேண்டும் என்று கட்டளை போடுகிறாராம்.
    தமிழ் சினிமாவில் நடிகராக இருப்பவரை பெயரை சொன்னால், தயாரிப்பாளர்கள் பலரும் அலறுகிறார்களாம்.
    தமிழ் சினிமாவில் பசங்களோடு நடித்து பிரபலமான நடிகர், அந்த படத்துக்குப் பிறகு எந்த படமும் பெரியதாக கைக்கொடுக்கவில்லையாம். இதனால், சொந்தமாக படம் தயாரிப்பில் இறங்கினாராம். அந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால் நஷ்டம் அடைந்தாராம்.

    இந்த படத்திற்காக வாங்கிய கடன் தற்போது பிரச்சனையாகி வருகிறதாம். இதனால் நடிகர் பெயரை மற்ற தயாரிப்பாளர்களிடம் சொன்னால் முகம் சுளிக்கிறார்களாம். அவரை வைத்து படம் எடுதால் வம்பு, வழக்குகள் படத்தை பாதிக்கும் என்று பட அதிபர்கள் பயப்படுகிறார்களாம்.
    பிரபல நடிகரை தொடர்ந்து தொந்தரவு செய்து அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை ஒரு நடிகை பெற்றிருக்கிறாராம்.
    90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் திருமணத்திற்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து கணவருடன் செட்டிலாகி இருந்தாராம். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிலரின் வற்புறுத்தலினால் ஒரு சில படங்களில் நடித்தாராம்.

    இதைப்பார்த்த பலரும் நடிகைக்கு வாய்ப்பு கொடுத்தார்களாம். ஆனால், அந்த படங்கள் எல்லாம் சரியாக ஓடவில்லையாம். இதனால், தன்னுடன் அந்த காலத்தில் நடித்தவர்களிடம் போன் செய்து வாய்ப்பு கேட்டு வந்தாராம். அதன்படி நடிகர் ஒருவரை தொடர்ந்து தொந்தரவு செய்து புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் நடிகை.
    இளம் இயக்குனர் ஒருவர் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி திடீரென்று விலகி இருப்பதால், அதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி இருக்கிறதாம்.
    பாலிவுட் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தை தமிழில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடைபெற்றதாம். ஒரு வழியாக அந்த படத்தின் உரிமையை பிரபல நடிகரின் தந்தை கைப்பற்றினாராம். இந்த படத்தை இயக்குவதற்காக தேடுதல் வேட்டை நடைபெற்றதாம். இதில் முதலில் ஒரு இயக்குனர் ஒப்பந்தம் ஆகி படம் தொடங்க தாமதம் ஆனதால் படத்தில் இருந்து வெளியேறினாராம்.

    அதன்பின் இளம் இயக்குனர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். படம் தொடங்கப்படும் நிலையில், இயக்குனர் விலகி விட்டாராம். காரணம் விசாரித்தால், படத்தின் தயாரிப்பாளர் இயக்குனருக்கு தொல்லை கொடுத்திருக்கிறாராம். படத்தின் கதை மற்றும் திரைக்கதை உள்ளிட்ட அனைத்திலும் தயாரிப்பாளர் நுழைந்து பல மாற்றங்களை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறதாம். இதனால்தான் இயக்குனர் விலகி இருக்கிறாராம்.
    சினிமா உலகில் பட வாய்ப்பு இல்லாததால் விளம்பரத்தில் கவனம் செலுத்தி வரும் நடிகை தனது கணவருக்கு சிபாரிசு செய்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் தன்னுடைய சிரிப்பால் பலருடைய உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகை, தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் விளம்பர படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். இவர்தான் தற்போது இருக்கும் நிலையில் விளம்பர படங்களுக்கு அதிக சம்பளம் வாங்குபவராம்.

    இந்த நிலையில் நடிகை தான் நடிக்கும் விளம்பர படங்களில் தன்னுடன் கணவரையும் நடிக்க வைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறாராம். கணவரும் பட வாய்ப்பு இல்லாததால் நடிகை இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், ஏற்கனவே நடித்த நடிகைகளுடன் மீண்டும் ஜோடி சேர மறுக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தற்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறாராம். இவருடன் நடிக்க பல நடிகைகள் போட்டிபோட்டு வருகிறார்களாம். ஆனால், நடிகரோ நடிகை தேர்வில் உஷாராக இருக்கிறாராம்.

    காரணம் தான் ஏற்கனவே நடித்த நடிகைகளுடன் நடிக்க கேட்டால் வேண்டாம் என்கிறாராம். புதுமுகங்கள் அல்லது பாலிவுட் நடிகைகள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம். பழைய நடிகைகள் நடிகரிடம் வாய்ப்பு கேட்டால் படக்குழுவினர் மீது பழிப்போட்டு தப்பித்து விடுகிறாராம்.
    இளம் நடிகர் ஒருவரிடம் புது இயக்குனர்கள் அணுகினால் கதை கேட்க டைம் இல்லை என்று பந்தா காட்டுகிறாராம்.







    தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறதாம். தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்தவர் பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமாகி இருக்கிறாராம்.

    தற்போது நடிகரிடம் கதை சொல்ல புது இயக்குனர்கள் முயற்சி செய்தால் டைம் இல்லை என்று சொல்கிறாராம். இதையறிந்தவர்கள் முன்னணி நடிகர்கள் போல் இவரும் இப்போவே பந்தா காட்ட ஆரம்பித்து விட்டாரே என்று பேசுகிறார்களாம்.
    ×