என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
- இதனால் பெருமாளுடன் மிக, மிக ஐக்கியமானவராக கருடர் உள்ளார்.
- இந்த சிறப்பு காரணமாக கருடனை வைணவர்கள் “கருடாழ்வார்” என்று போற்றி புகழ்கின்றனர்.
நாராயணருக்கு வைகுந்தத்தில் சேவை செய்ய எத்தனையோ பேர் இருந்தாலும் அனந்தன் எனப்படும் ஸ்ரீஆதிசேஷன், பெரிய திருவடி எனப்படும் ஸ்ரீகருடன், சேனாமுதல்வன் எனப்படும் ஸ்ரீவிஸ்வக்சேனர் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள்.
இவர்களில் ஆதிசேஷன் பெருமாளுக்கு குடையாகவும், சிம்மாசனமாகவும், படுக்கையாகவும் இருக்கிறார். விஸ்வக் சேனர் மகா விஷ்ணுவின் படைகளின் சேனாதிபதியாக விளங்குகிறார்.
ஆனால் ஸ்ரீகருடனோ பெருமாளுக்கு தோழன், தாசன், ஆசனம், வாகனம், கொடி, மேல்சுட்டு, விசிறி என 7 விதமான தொண்டுகளை செய்பவராக உள்ளார்.
இதனால் பெருமாளுடன் மிக, மிக ஐக்கியமானவராக கருடர் உள்ளார்.
இந்த சிறப்பு காரணமாக கருடனை வைணவர்கள் "கருடாழ்வார்" என்று போற்றி புகழ்கின்றனர்.
கருடனை பெரிய திருவடி, கொற்றப்புள், தெய்வப் புள், வேதஸ் வரூபன், காய்சினப்புள், பட்சிராஜன், புள்ளரையன் வைநதேயன், ஓடும் புள், சுபர்ணன், விஜயன், உவணன், வினைதச் சிறுவன் என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
- சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார்.
- இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரிய பட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.
ஏழுமலை ஏறித் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கவும் ராமானுசர் ஏற்பாடு செய்தார். அதுவே "ராமானுசக் கூடம்" ஆனது.
இன்றும் அங்கு பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக அன்றே "சமபந்தி" சாப்பாட்டை ராமானுசர் தொடங்கி வைத்து விட்டார். ஏழுமலையான் மார்பில் திருமகள் திருமேனியைத் தொங்க விட்டவரும், ராமானுசரே!
ஏழுமலையானுக்குப் பச்சைக் கற்பூர நாமம் சாத்தவும் ராமானுசரே ஏற்பாடு செய்தார்.
சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார்.
இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரிய பட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.
வெள்ளி தோறும் திருமஞ்சனக் காப்பு நடத்தவும், அலங்காரம் செய்யும் முறையையும், நித்திய பூசையையும் ராமானுசர் வகுத்துக் கொடுத்தார். மலை அடிவாரத்தில் கீழ்த் திருப்பதி ஊரையும் உருவாக்கினார்.
இப்படி ஏழுமலையான கோவிலை வைணவர்களுக்கே உரியதாக ஆக்கியதால் தான் ஏழுமலையான் கோவிலுக்குள் ராமானுசர் சந்நிதியும் இடம் பெற்றுள்ளது.
ராமானுசர் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் விழா கொண்டாடுகிறார்கள்.
- காடு திருத்தி, வீதி அமைத்து, பெருமாள் வீதிவலம் வரவும், விழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தார்.
- அதிலிருந்துதான் திருமலை நகரம் தோன்றியது. இன்றும் அங்கு “ராமானுசர் வீதி” இருக்கிறது.
திருப்பதியை வைணவத்தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுசர் தான்.
அவர் காலத்தில் வேங்கடமலை மீது இருப்பது சைவக் கோவிலா? வைணவக் கோவிலா? சிவன் சிலையா? பெருமாள் சிலையா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.
ராமானுசர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார்.
ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுசர் ஏற்பாடு செய்தார்.
ஸ்ரீரங்கம் கோவிலின் நடைமுறைகளை இங்கும் கொண்டு வந்தார்.
காடு திருத்தி, வீதி அமைத்து, பெருமாள் வீதிவலம் வரவும், விழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தார்.
அதிலிருந்துதான் திருமலை நகரம் தோன்றியது. இன்றும் அங்கு "ராமானுசர் வீதி" இருக்கிறது.
கோவில் நந்தவனம் அமைத்து அழகுபடுத்தினார். அது "ராமானுசர் நந்தவனம்" என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.
- திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது.
- தாயார் சன்னதி கூடக் கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது.
திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது.
தாயார் சன்னதி கூடக் கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது.
திருமலையின் ஆதிமூர்த்தி யான வராகசாமி தெப்பக் குளக்கரையில் தான் இருக்கிறார்.
ஆழ்வார்களுக்கும் இடம் கிடையாது.
இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு, ராமானுஜர் மட்டுமே.
திருவேங்கடத்தான் கோவிலுக்குள் இவருக்கு தனி சன்னதி இருக்கிறது.
ராமானுஜர் 1017ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார்.
1137ம் ஆண்டு வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த இவர் வியக்கும் அளவுக்கு திருப்பதிக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார்.
- நான் என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும்.
- சடாரி என்பது என்ன?
பெரும்பாலான நேரங்களில் நாம் கோவிலுக்குப் போனாலும் சில விஷயங்களை வெறும் சடங்குகளாகவே செய்வோம், அதன் பொருள் என்ன ஏன் செய்கிறோம். அதன் பின்னால் இருக்கக்கூடிய தாத்பரியம் என்ன என்பதை நாம் எண்ணி பார்த்திருப்போமா..?
அப்படியான ஒரு விஷயம் தான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் சடாரி சேவை. பகாவனை கண்குளிர சேவித்து, தீபாரதனை முடித்து துளசி தீர்த்தம் ஆன பிறகு, நம் தலைமீது சடாரி வைக்கப்படுகிறது.
சடாரி என்பது என்ன? அது ஏன் நம் தலை மீது வைக்கப்படுகிறது? என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
ஒருமுறை வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் நேரம், தன்னுடைய சங்கு, சக்கரம் திருமுடி ஆகியவற்றை எடுத்து ஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்களின் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன் வழக்கத்துக்கு மாறாக தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார்.
ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும் சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன ஆனால் அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து
கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?" என்று கேட்டன
"இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்' என்றன பாதுகைகள்.
பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும். சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு, பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை.
உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று கோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் அலங்கரிப்பவர்கள்தான் ஆனால், பாதங்களை அல்ல.
மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள் தான்" என்று பதிலுக்கு பாதுகைகள் வாதிட்டன.
கிரீடத்துடன், சங்கும், சக்கரமும் கூட்டணி அமைத்துக் கொண்டதால், தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் பகவானிடம் முறையிட காத்து நின்றன. பகவானும் வந்தார்.
அவர் பாதத்தை கண்ணீரால் கழுவி பாதுகைகள் முறையிட்டன. 'இங்கே நடந்ததை நான் அறிவேன் என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள்.
அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும் போது இந்த திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார் பகவான்.
சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும் போது நம்முடைய நான் என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும். வைணவக் கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு சடாரி சாதித்தலின் அடிப்படை பொருள் இதுவே.
- இறைவழிபாடு செய்தாலும் நம் கர்மவினை நம்மை விட்டு அகலாது.
- பெரும் கர்ம வினையாக வளர்ந்துகொண்டே போகும்.
ஒரு ரிஷி எமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைப்பட்டார்.! எம தர்மன் அவரது ஆசைக்கு செவிசாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திர குப்தனை அனுப்புகிறேன் என்றார். பின் சித்திரக்குப்தனை எமன் ரிஷியுடன் செல்ல பணிந்தார். சித்திரக்குப்தன் எமன் ஆணைக்கு இணங்க ரிஷியுடன் சென்றார்.
எமலோகம் விசித்திர லோகம். அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற-பாரபட்சமற்ற நீதி. நிலை நிறுத்தப்படும் தர்மம் அத்தனையையும் பார்க்கப் பார்க்க, அந்த ரிஷியே ஆடிப்போனார்.
தண்டனைகளுக்கான காரணங்களில் அத்தனை துல்லியம். 'இப்படி நரகம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும், தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தும் ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்? நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக அனுபவிக்கும் கொடூர தண்டனைகள் அவரை சஞ்சலம் கொள்ள வைக்கவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட, அனைத்தையும் கடந்த, சித்தி பல பெற்ற முனிவர் அல்லவா?
சந்தேகம் எழும் இடங்களில் எல்லாம் சித்ரகுப்தனை திரும்பிப் பார்ப்பார். அவரின் குறிப்பை உணர்ந்தவனாக, சித்ரகுப்தனே அவருக்கு அனைத்தையும் விளக்குவார்.
இருவரும் நடந்துவரும் வழியில், ஓர் இடத்தில் ஐந்தடி உயரத்துக்கு கற்பாறை ஒன்றைக் கண்டார் முனிவர்.
'இது என்ன கற்பாறை?*
'ஒன்றுமில்லை மகாமுனி! ஒரு சிறுவனின் பாவம். இப்படி வளர்ந்து நிற்கிறது!"
"சிறுவன் செய்த பாவமா? அது என்ன பாவம்?"
பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு தினமும் பல அதிதிகள் வருவது வழக்கம். முனிவரும் வருபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளிப்பார். அந்த முனிவருக்கு ஒரு பிள்ளை. அந்த பிள்ளை மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புகள் செய்துகொண்டே இருப்பான்.
அதிதியாக வருபவர்களுக்கு முனிவர் பரிமாறும் உணவில் சிறு சிறு கற்களைப் போட்டு, அவர்கள் சாப்பிடும்போது படும் கஷ்டத்தை ரசித்துப் பார்ப்பான். அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்த கற்கள்தான் சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது.
விதி முடியும் நேரத்தில் அவன் எமலோகத்துக்கு வரும்போது இந்த பாறையை அவன் உண்ண வேண்டும் இதுதான் அவனுக்கான தண்டனை" என்றான் சித்ரகுப்தன்.
அசந்துபோனார் முனிவர். இருவரும் நடந்தார்கள், முனிவருக்கு அந்த சிறுவன் யார் என அறிந்துகொள்ள ஆர்வம். இது எங்கோ நடந்ததை தான் அறிந்ததாக அவருக்குள் ஒரு நினைவு நிழலாட்டம்.
ஆனால், சித்ரகுப்தனிடம் கேட்கத் தயக்கம். அவன் வேறுபுறம் சென்றதும், ரிஷி தன் ஞான திருஷ்டியில் அந்த சிறுவன் யார் எனப் பார்த்தார். அது வேறு யாரும் அல்ல. சாட்சாத் அவரேதான்.
தன் தவறை உணர்ந்தார். எமதர்மனிடம் போனார் நடந்ததைச் சொன்னார்.
எமதர்மா நான் முக்தி பெற்று இறைவனடி சேர விரும்புகிறேன். அதற்கு தடையாக நிச்சயம் இந்தக் கல் இருக்கும், எனவே, இந்த ஜன்மத்திலேயே அந்த பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்த கல்லை தின்று செரித்துவிடுகிறேனே!
முனிவரின் கோரிக்கையை எமதர்மன் ஏற்றான். கல்லை சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர். 'சிலா' என்றால் கல் என்று பொருள். கல்லை உண்டவர் என்பதால் அந்த முனிவர். சிலாதர் ஆனார்.
எத்தனை சக்தி பெற்றவராக இருப்பினும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும், ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரைச் சும்மா விடாது. பெரும் கர்ம வினையாக வளர்ந்துகொண்டே போகும்.
ஒருநாள் மொத்தமாகத் திரும்பக் கிடைக்கும். அப்போது நாம் அந்த கர்ம வினையை அனுபவித்தே தீர்க்க வேண்டும். இதை உணர்ந்தவர்கள் எறும்புக்கு கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள்.
சிலாதரின் கதை எத்தனை யாகம் ஹோமம் தவம் பரிகாரம் இறைவழிபாடு செய்தாலும் நம் கர்மவினை நம்மை விட்டு அகலாது. அதை கல் போல் மனம் இல்லாமல் உண்டு அனுபவித்து கழிக்க வேண்டும் இந்த நீதியைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது.
- மத்யாஷ்டமி.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-9 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அஷ்டமி மாலை 5.55 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: திருவாதிரை மறுநாள் விடியற்காலை 4.11மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
மத்யாஷ்டமி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவர் கூடப்புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-லாபம்
கடகம்-இன்பம்
சிம்மம்-ஆசை
கன்னி-நிறைவு
துலாம்- பணிவு
விருச்சிகம்-பண்பு
தனுசு- ஒழுக்கம்
மகரம்-ஆக்கம்
கும்பம்-ஆதரவு
மீனம்-அன்பு
- பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
- வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு.
திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.
இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம்.
புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.
துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.
பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு.
சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.
அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைப்பது மரபு.
எல்லோரும் பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.
புரட்டாசி சனிக்கிழமை திருப்பதி வெங்கடேசப்பெருமாளை நினைத்து வழிபடும் விழாவானதால், அன்று வீட்டிலுள்ள பிள்ளைகளின் நெற்றியில் நாமம் இடுவர்.
வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர்.
இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.
- ஆஞ்சநேயரிடம் யார் ஒருவர் மனதை பறி கொடுக்கிறாரோ அவர் மனம் தெளிவடையும். அவரால் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.
- ஆஞ்சநேயரின் தீவிர பக்தராக மாறி விட்டால், ஆஞ்சநேயரின் முழு பலமும் அவருக்கு வந்து விடும் என்பது ஐதீகம்.
ஆஞ்சநேயருக்கு வாலில் தான் சக்தி அதிகம் என்பதால் வாலில் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து 48 நாட்கள் வழிபாடு செய்தால் உரிய பலனை பெறலாம். இது நவக்கிரக வழிபாட்டுக்கு நிகரானது.
மனதில் தாங்க முடியாத அளவுக்கு வேதனை உள்ளதா? ஆஞ்சநேயரின் சிறப்புகளை கூறும் சுந்தர காண்டம் படியுங்கள்.
துன்பங்கள் தூசியாக பறந்தோடி விடும். அவரை நினைத்தாலே புத்தி வரும், பக்தி வரும், புகழ் வரும், செல்வம் வரும், மன உறுதி வரும், வீரம் வரும்.
அனைத்துக்கும் மேலாக அவர் கடும் பிரம்மச்சார்யத்தை கடை பிடிப்பதால் நம் மனதில் ஒரு நொடி கூட தேவை இல்லாத காம உணர்வு வரவே வராது.
ஆஞ்சநேய விரதம் இருந்தால், குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எதிரிகளின் தொல்லை நீங்கி வெற்றி கிடைக்கும். உறவினர்களிடையே நட்பு அதிகரிக்கும். இதன் மூலம் குபேரனுக்கு இணையான வாழ்வை பெறலாம்.
தினமும் காலை அருகில் உள்ள பெருமாள் ஆலயத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டு, உங்கள் பணிகளை செய்து வந்தால் வெற்றி மீது வெற்றி வரும்.
13 முடிச்சுள்ள அனுமன் விரத கயிறை கையில் கட்டிக் கொண்டால் உங்களது எல்லா முயற்சிகளும் இடையூறு இல்லாமல் நிறைவேறும்.
ஆஞ்சநேயரின் சன்னதி முன்பு நின்று, அவரது மூல மந்திரத்தை 9 தடவை சொல்லி வழிபட்டால் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். கடுமையான வியாதிகள் குணமாகும்.
ஆஞ்சநேயரிடம் யார் ஒருவர் மனதை பறி கொடுக்கிறாரோ அவர் மனம் தெளிவடையும். அவரால் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.
ஆஞ்சநேயரின் தீவிர பக்தராக மாறி விட்டால், ஆஞ்சநேயரின் முழு பலமும் அவருக்கு வந்து விடும் என்பது ஐதீகம்.
எனவே பெருமாள் ஆலயத்தில் வழிபாடு செய்யும் போது ஆஞ்சநேயரிடம் மனம் விட்டு பேசுங்கள்.
"யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவரான ராம தூதனே! கருணைக் கடலே! பிரபோ... என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் வெற்றி தந்து சாதித்து தாருங்கள்" என்று கேளுங்கள். ஆஞ்சநேயரிடம் மனம் உருக, உருக நம்மை பிடித்த தோஷங்கள், கரைந்தோடிவிடும்.
ஆஞ்சநேயர் பணிவின் அணிகலனாகவும், ராஜதந்திரத்தில் சாமர்த்திய சாலியாகவும், வாக்கு சாதூர்யத்தில் வல்லவராகவும், வீரத்தில் நிகர் இல்லாதவராகவும், விளங்கி வருகிறார். அவரை வழிபட்டால் இத்தனை சிறப்புகளும் நமக்கும் நிச்சயம் வந்துசேரும்.
- ராம அவதாரம் நிறைவு பெற்றுவிட்ட போதிலும் ஆஞ்சநேயர் இன்னமும் சிரஞ்சீவியாக இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
- ராம நாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கு நிச்சயம் ஆஞ்சநேயர் இருப்பார்.
ராம அவதாரம் நிறைவு பெற்றுவிட்ட போதிலும் ஆஞ்சநேயர் இன்னமும் சிரஞ்சீவியாக இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
அதனால் தான் ராமாயண சொற்பொழிவுகள், ராம கீர்த்தனம் ஆகியவை எங்கு நடந்தாலும் அங்கெல்லாம் ஆஞ்சநேயர் அமர்ந்து ஸ்ரீராம தியானத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வார் என்கிறார்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ராம நாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கு நிச்சயம் ஆஞ்சநேயர் இருப்பார்.
அந்த வகையில் யார் ஒருவர் ராமநாமத்தை ஜெபிக்கிறார்களோ, அவர்களிடம் ஆஞ்சநேயர் நெருங்கிவிடுவார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இறை அவதாரங்களில் ஆஞ்சநேயருக்கு மட்டுமே இந்த சிறப்பு உண்டு.
எனவே வைணவத் தலங்களுக்கு வழிபாடு செய்யச்செல்லும் போது, மறக்காமல் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
ஆஞ்சநேயர் வழிபாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் அர்த்தம் பொதிந்துள்ளது. அந்த தார்ப்பயத்தை அறிந்து, உணர்ந்து நாம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தல் வேண்டும்.
பெரும்பாலும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
எப்போதும் ராமருக்கு சேவை செய்து கொண்டிருந்த ஆஞ்சநேயருக்கு களைப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உளுந்து தானியத்தில் அஞ்சனாதேவி வடை தயாரித்து கொடுத்தாள்.
இதனால் தான் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் பழக்கம் ஏற்பட்டது.
வெற்றிலை மாலை வழிபாடு, வெண்ணை காப்பு அலங்காரம் ஆகியவையும் பக்தர்களால் ஆஞ்சநேயருக்கு விரும்பி செய்யப்படுகிறது.
இலங்கை அசோகவனத்தில் தன்னை சந்திக்க வந்த அனுமனை வாழ்த்தி அருகில் இருந்த வெற்றிலையைப்பறித்து சீதை மாலையாக அணிவித்தார்.
அன்று முதல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பது வழக்கமாகி விட்டது.
அதுபோல ராமரின் ஆயுள் பலத்துக்காக நெற்றியில் செந்தூரம் பூசுவதாக சீதாதேவி கூறியதை கேட்ட ஆஞ்சநேயர், "என் பிரபு ராமனின் ஆயுள் கூடுமென்றால் நானும் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொள்வேன்" என்று பூசிக்கொண்டார்.
இதில் இருந்தே ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது.
சனி, செவ்வாய்க்கிழமை களில் ஸ்ரீராமஜெயம் கூறி ஆஞ்சநேயருக்கு செந்தூரம் சாற்றி வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- சில ஆலயங்களில் மூலவரை விட சன்னதியில் உள்ள இறைவன் மக்களிடம் அதிகப்படியான வழிபாடுகளை பெறுபவராக இருப்பார்.
- வைணவத்தலங்களில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி மக்கள் மிகவும் விரும்பி வழிபாடு செய்யும் சன்னதியாக திகழ்கின்றன.
சில ஆலயங்களில் மூலவரை விட சன்னதியில் உள்ள இறைவன் மக்களிடம் அதிகப்படியான வழிபாடுகளை பெறுபவராக இருப்பார்.
அதற்குகாரணம் அந்த இறைமூர்த்தம் பக்தர்கள் வேண்டுவதை எல்லாம் வழங்கும் அருள்கடலாகத் திகழ்வார்.
அந்த சன்னதி அமையப் பெற்றதன் பின்னணியில் உள்ள புராண நிகழ்வு கூட மக்களை ஈர்ப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அந்த வகையில் வைணவத்தலங்களில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி மக்கள் மிகவும் விரும்பி வழிபாடு செய்யும் சன்னதியாக திகழ்கின்றன.
கலியுக்தில் கண்கண்ட தெய்வமாக ஆஞ்சநேயர் திகழ்கிறார். "சர்வமங்கள கார்யானு கூலம்" என்று ஆஞ்சநேயர் வழிபாட்டின் பலனைக் குறிப்பிடுவார்கள்.
அதாவது தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தன்னிடம் உள்ள எல்லா ஆற்றலையும் கொடுத்து மனதில் வலிமையை ஏற்படுத்துவார் என்பது ஆஞ்சநேய வழிபாட்டின் ஐதீகமாகும்.
அவர் வாயுவின் புத்திரர் என்பதால் அவர் காற்றோடு காற்றாக கலந்து , எங்கும் நிறைந்து நம்மை காப்பதாக நம்புகிறார்கள்.
பலவித தோற்றங்களில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர், தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று மூன்று வகைகளிலும் வரப்பிரசாதமாக இருந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
சேவை செய்வதற்காகவே அவதாரம் எடுத்தவர் ஆஞ்சநேயர். மகாவிஷ்ணு ராமஅவதாரம் எடுத்த போது, அவருக்கு சேவை செய்வதையே தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு ஆஞ்சநேயர் வாழ்ந்தார்.
இதனால் ராமபிரானுக்கு எங்கெங்கு ஆலயம் உள்ளதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி அமைப்பட்டுள்ளது இவை தவிர ஆஞ்சநேயருக்கு என்றே தனியாக ஆலயங்களும் உண்டு. தென் இந்தியாவை விட, வட இந்தியாவில்தான் ஆஞ்சநேயருக்கு அதிகமான கோவில்கள் உள்ளன.
- சில பழமையான ஆலயங்களில், மூலவரே பல்வேறு பெயர்களில் பிரகாரங்களில் தனி தனி சன்னதிகளில் இருப்பதை காணலாம்.
- இந்த இறைமூர்த்தங்களின்அவதார தோற்றம் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு வரலாறும் சிறப்பும் உள்ளது.
ஆலய வழிபாட்டின் போது கருவறை மூலவரை வழிபட்ட பிறகு பிரகாரங்களில் உள்ள தனி சன்னதிகளில் அருள்பாலிக்கும் இறைமூர்த்தங்களையும் நாம் தவறாது வழிபட வேண்டும்.
பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மூலவரிடம் காட்டும் பயபக்தி உணர்வை பிரகார சன்னதிகளில் வெளிப்படுத்துவதில்லை. இது தவறு.
வைணவத்தலங்களில் கருடர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர் என்று பல்வேறு இறைமூர்த்தங்கள் தனி சன்னதிகளில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சில பழமையான ஆலயங்களில், மூலவரே பல்வேறு பெயர்களில் பிரகாரங்களில் தனி தனி சன்னதிகளில் இருப்பதை காணலாம்.
இந்த இறைமூர்த்தங்களின்அவதார தோற்றம் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு வரலாறும் சிறப்பும் உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் மூலவரின் அம்சமாக பிரதிபிம்பமாகத் திகழும் இந்த இறைமூர்த்தங்கள் குறிப்பிட்ட பலன்களை மக்களுக்கு வாரி, வாரி வழங்கும் ஆற்றல் பெற்றவை.
எனவே ஆலய வழிபாடு செய்யும் போது, அந்த ஆலயத்தில் உள்ள அத்தனை சன்னதிகளிலும் தவறாமல் மனதை ஒருமுகப்படுத்தி வழிபாடுகள் செய்ய வேண்டும்.
சில சன்னதிகளில் அபிஷேக, ஆராதனை, நைவேத்திய, பூஜை முறைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அதற்கு ஏற்ப நாம் வழிபாடுகளை செய்தல் வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்