search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • அங்குசம் யானையை அடக்க உதவும் கருவி.
    • இவரது அங்குசமோ மனம் என்ற யானையை கட்டிப்போடும் வல்லமை படைத்தது.

    விநாயகருக்கு தும்பிக்கையுடன் சேர்ந்து ஐந்து கரங்கள் இருக்கிறது. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார்.

    பின் வலது கைகளில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன்பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்த கலசமாகிய மோதகம் ஆகியவை இருக்கும்.

    புனித நீர்க்குடம் கொண்டு உலக வாழ்வில் உழன்று தத்தளித்து களைத்து தன்னை சேரும் மக்களின் தாகம் தணித்து களைப்பை போக்கி பிறப்பற்ற நிலையை அளிக்கிறார்.

    அங்குசம் யானையை அடக்க உதவும் கருவி. இவரது அங்குசமோ மனம் என்ற யானையை கட்டிப்போடும் வல்லமை படைத்தது.

    அதனால் தான் முகம் யானை வடிவில் இருக்கிறது.

    பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளை கட்டிப்போடுகிறார்.

    ஒடித்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியை பெற வேண்டும் என்பதை குறிக்கிறது.

    இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது.

    உலகம் உருண்டை. மோதகமும் உருண்டை.

    உலகத்துக்குள் சகல உயிர்களுக்கும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதை காட்டுகிறது.

    • அக்குழந்தையைப் பூமாதேவி எடுத்து வளர்த்ததால் “பூமி குமாரன்” என்ற பெயரும் உண்டு.
    • அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர்.

    விநாயகரின் பரமபக்தரான பரத்துவாச முனிவர் தலயாத்திரை சென்றபோது நர்மதை நதியில் நீராடினார்.

    அங்கே ஒரு கந்தர்வ மங்கையைக் கண்டார்.

    அவள் மேல் அன்பு கொண்டு வாழ்ந்தார்.

    இவ்விருவருக்கும் சிவந்த நிறத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. செந்நிறம் கொண்டிருந்ததால் "அங்காகரன்" என்று குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது.

    அக்குழந்தையைப் பூமாதேவி எடுத்து வளர்த்ததால் "பூமி குமாரன்" என்ற பெயரும் உண்டு.

    அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர்.

    அவருடைய பக்தித்திறத்தை மெச்சிய விநாயகர் அங்காரகன் வேண்டிக் கொண்டபடி தேவர்களைப் போல் வாழவும், நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பெரும்பேற்றினையும் பெற்றார்.

    அதனுடன் அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

    இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவோர் உடல் பிணிகள் யாவும் நீங்கப் பெறுவர்.

    செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும்.

    • 5 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளை அனுமதிக்க மாட்டார்கள்.
    • மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என்று தமிழ்நாட்டில் அனேக இனத்தவர்கள் இவ்விரதத்தைப் போற்றி வருகின்றனர்.

    தை, ஆடி மாதங்களில் வரும் செவ்வாய்க் கிழமைகளில், பெண்கள் பிள்ளையார் விரதத்தை தொடங்குவார்கள்.

    பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை இருப்பார்கள், ஆண்கள் இவ்விரதத்தில் கலந்து கொள்ளக் கூடாது.

    ஆண்கள் அநேகமாக இந்த விரதம் நடக்கும் போது வீட்டை விட்டு வெளியிலோ அல்லது வெளியூருக்கோ சென்று விடுவார்கள்.

    5 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளை அனுமதிக்க மாட்டார்கள்.

    மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என்று தமிழ்நாட்டில் அனேக இனத்தவர்கள் இவ்விரதத்தைப் போற்றி வருகின்றனர்.

    பெண்கள் எழுந்து நீராடித் தூய்மையான ஆடைகளை அணிந்து நெல் குத்துவார்கள்.

    பிறகு குத்தின அரிசியை மா இடித்து, அதை உப்பில்லாமல் பிசைந்து, தேங்காய் துண்டுகளை அதில் போட்டு இளநீரை விட்டு நன்றாகப் பிசைவார்கள்.

    அடையும் உருண்டையுமாகச் செய்து நீராவியில் வைக்கோலைப் பரப்பி அதன் மேல் வைத்து ஆவி போகா வண்ணம் மூடி வேகவைப்பார்கள்.

    பிறகு ஈனக்கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து புங்க இலை, புளிய இலை ஆகியவற்றைக் கொண்டு சூழல் அமைத்து, அதன் நடுவே பிள்ளையாரை எழுந்தருளச் செய்வார்கள்.

    பிறகு தேங்காய், பழம், பாக்கு வெற்றிலையை பரப்பி, கொழுக்கட்டைகளையும் பரப்பித் தூபமிட்டு, பிரார்த்தனை செய்து, ஒளவையார் பூஜை செய்யும் வழிமுறையை விளக்கிய கதையை அதன் பயனை கதையைச் சொல்லத் தொடங்குவார்கள். (இந்த கதை பெண்களுக்கு மட்டுமே தெரியும்).

    கதை முடிந்ததும் கற்பூர தீபாராதனை காட்டி, நைவேதியம் செய்து, பிறகு அனைவரும் கூடி அவரவர்களுக்குரிய அடைகளை உண்பார்கள். (இரவில் அல்லது மாலை நேரத்தில் தான் செய்வார்கள்).

    பொழுது விடியுமுன் நான்கு நாழிகைக்கு முன்பே எழுந்து, இரவு கொழுக்கட்டை வேகவைத்த வைக்கோல் மற்றும் புங்க இலை, புளிய இலை, பூஜை செய்த பூ எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய் ஆற்றிலோ, குளத்திலோ போட்டு விட்டு பிள்ளையாரையும் வழியனுப்பி விட்டு வாய் பேசாமல் நிறை குடத்துடன் மஞ்சள், குங்குமம் அணிந்து வெற்றிலை மென்றபடி வீடு திரும்புவார்கள்.

    அன்று முழுவதும் யாருக்கும் காசு, தானியம் ஏதும் கொடுக்க மாட்டார்கள்.

    பெண்களால் செய்யப்படும் இவ்விரதம் இன்றும் சிறப்பாக செய்யப்படுகின்றது.

    • அல்லல் தீர்த்த விநாயகர் - திருவண்ணாமலை
    • சித்தி விநாயகர் - மதுரை

    வெயிலுகந்த விநாயகர்

    நவபாஷாணம் என்னும் இடத்திற்கு அருகில் உள்ள உப்பூர் என்ற இடத்தில் விநாயகப் பெருமான் வெயிலுகந்த விநாயகர், என்ற திருப்பெயருடன் அருள் தருகிறார்.

    இவருக்கு எப்பொழுது கோபுரம் கட்ட ஆரம்பித்தாலும் எப்படியோ இடையூறு ஏற்பட்டு நின்றுவிடுமாம்.

    வெயிலிலும் மழையிலும் இவர் எப்பொழுதும் நனைவதால் இவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதாம்.

    விநாயகரது அறுபடை வீடு

    அல்லல் தீர்த்த விநாயகர்- திருவண்ணாமலை

    ஆழத்து விநாயகர்- விருத்தாசலம்

    கள்ள வாரணப் பிள்ளையார்- திருக்கடையூர்

    சித்தி விநாயகர்- மதுரை

    பொல்லாப்பிள்ளையார்- திருநாரையூர்

    துண்டிராஜபிள்ளையார்- காசி

    • வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கி நல்லருள் பெறலாம்.
    • மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமணக்காலம் விரைவில் வரும்.

    செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் விநாயகருக்கு உகந்த நாட்கள். அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்க வேண்டும்.

    சுக்ல சதுர்த்தசி அன்று அருகம் புல்லை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டால் செயல்கள் பெற்றி பெறும்.

    வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கி நல்லருள் பெறலாம்.

    மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமணக்காலம் விரைவில் வரும்.

    நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகும்.

    வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றிவர குடும்பத்தில் வறுமை விலகும்.

    சதுர்த்தியன்று அரிசி நொய்யை சாதமாக்கி பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளைகளாய் பாவித்துத் தூவ விநாயகர் மகிழ்ந்து குழந்தை வரம் தருவார்.

    உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்பு வர வேண்டும் என்றால் சுக்ல சதுர்த்தி நாளில் குழந்தை பெயரில் விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்து பென்சில் நோட்டுக்களை 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் தானம் செய்ய வேண்டும்.

    நாக்குப் பிறழாத குழந்தைகளுக்குத் தமிழ் மாதத்தில் 3-ம் செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு பழங்கள் படைத்து தானம் செய்தால் பலன் கிடைக்கும்.

    • தேவகோட்டையில் கலங்காத விநாயகர் உள்ளார். ஆவணி அமாவாசை உத்திர நட்சத்திரம் அன்று இவர் வீதி உலா வருவதைக்காணலாம்.
    • முன்பு, போருக்குச் செல்லும் அரசர்கள், இந்த விநாய கரை வணங்கி பூஜை செய்துவிட்டுதான் போருக்கு புறப்பட்டுப் போவார்கள்.

    தேவகோட்டையில் கலங்காத விநாயகர் உள்ளார். ஆவணி அமாவாசை உத்திர நட்சத்திரம் அன்று இவர் வீதி உலா வருவதைக்காணலாம்.

    முன்பு, போருக்குச் செல்லும் அரசர்கள், இந்த விநாய கரை வணங்கி பூஜை செய்துவிட்டுதான் போருக்கு புறப்பட்டுப் போவார்கள்.

    பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மன் இந்த விநாயகரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

    நீதிமன்றத்தில் வழக்குத்தொடர விரும்புபவரும் வழக்கில் வெற்றிபெற விரும்புபவரும் இவ்விநாயகரைத் தரிசனம் செய்து வேண்டிக்கொள்வதைக் காணலாம்.

    இவரை பூஜித்து செல்பவர்கள் ஒருபோதும் தோல்வியைக் கண்டதில்லை என்கின்றனர்.

    • திருவாரூரில் கமலாலயத் தீர்த்தக் குளத்தின் கீழக்கரையில் அமர்ந்துள்ள பிள்ளையார் இங்க் பிள்ளையார் என்று அழைக்கப்படுகின்றார்.
    • பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகருக்கு வெளிய மருத மரத்தடியில் வீற்றிருப்பவர் பாஸ்போர்ட் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

    இங்க் பிள்ளையார்

    திருவாரூரில் கமலாலயத் தீர்த்தக் குளத்தின் கீழக்கரையில் அமர்ந்துள்ள பிள்ளையார் இங்க் பிள்ளையார் என்று அழைக்கப்படுகின்றார்.

    தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் இந்த பிள்ளையார் முன் பிரார்த்தனை செய்தவாறு இங்கை (மையை) விநாயகர் மீது உதறி விட்டு சென்றால் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை நிலவி வருகின்றது.

    பாஸ்போர்ட் பிள்ளையார்

    பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகருக்கு வெளிய மருத மரத்தடியில் வீற்றிருப்பவர் பாஸ்போர்ட் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

    வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட் வைத்து அவரை வேண்டினால் சீக்கிரம் வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைப்பதனால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

    • விநாயகர் துதிக்கை இடம் சுழித்திருப்பின் இடம்புரி விநாயகர் எனவும் வலம் சுழிந்திருப்பின் வலம்புரி விநாயகர் எனவும் கூறுவர்.
    • வலம்புரி விநாயகர் வெற்றியைத் தரும் வடிவமாகும்.

    டிரான்ஸ்பர் விநாயகர்

    கோவை நகரில் அமைந்துள்ள பல்வேறு விநாயகர்களுள் டிரான்ஸ்பர் விநாயகர் மிகவும் பிரசித்தம்.

    தங்களுக்கு விருப்பமான ஊர்களுக்கு மாறுதல் வேண்டும் பணியாளர்களுடைய கோரிக்கையினை இவ்விநாயகர் நிறைவேற்றி வைப்பதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகின்றது.

    வலம்புரி விநாயகர்

    விநாயகர் துதிக்கை இடம் சுழித்திருப்பின் இடம்புரி விநாயகர் எனவும் வலம் சுழிந்திருப்பின் வலம்புரி விநாயகர் எனவும் கூறுவர்.

    வலம்புரி விநாயகர் வெற்றியைத் தரும் வடிவமாகும்.

    துதிக்கை வலம் சுழிக்கப்பெற்ற வலஞ்சுழி விநாயகரை திருவலஞ்சுழியிலும் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டத்திலும், பிள்ளையார்பட்டியிலும் காணலாம்.

    சர்ப்ப விநாயகர்

    பாபநாசம் நகரின் மையப்பகுதியில் ஐந்துதலை சர்ப்ப விநாயகர் உள்ளார். இவர் நாகதோஷங்களை நீக்கியருளுகின்றார்.

    • நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களை கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர்.
    • விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையவர்.

    நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களை கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர்.

    விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையவர்.

    ஒன்பது கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார்.

    இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார்.

    நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் ஒரே நேரத்தில் நவக்கிரகங்களையும் வழிபாடு செய்த பலன் உண்டாகும்.

    • இத்திருக்கோவில் சேலம் அருள்மிகு சொர்ணாம்பிகா சமேத சுகவனேசுவரர் கோவிலின் இணைக் கோயிலாக உள்ளது.
    • இவரை வழிபட முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    எமனை எதிர்க்கும் விநாயகர், திருப்பைஞ்லி

    திருச்சி மணச்சநல்லூரிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் இருக்கும் திருப்பைஞ்ஞீலியில் உள்ள எமன் கோவிலின் நுழைவாசலுக்கு முன்பாக உள்ள விநாயகர் தெற்கு திசையை நோக்கிய வண்ணம் நின்ற நிலையில் காட்சி தருகிறார்.

    இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி உதைக்கும் நிலையில் காணப்படுகிறார்.

    அதாவது தெற்கு திசையில் உள்ள எமன் இங்கு வந்தால் எதிர்ப்புத் தெரிவிக்க உதைக்கும் நிலையில் இந்த தோற்றம் என்கிறார்கள்.

    நோய் நொடியின்றி வாழ இவர் அருள்பாலிக்கிறார்.

    ராஜகணபதி, சேலம்

    அவ்வையார், பூத உடலோடு திருக்கைலாயத்துக்குச் செல்லும் போது இத்தலத்து ராஜ கணபதியைத்தான் வணங்கிச் சென்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது.

    இத்திருக்கோவில் சேலம் அருள்மிகு சொர்ணாம்பிகா சமேத சுகவனேசுவரர் கோவிலின் இணைக் கோயிலாக உள்ளது.

    இவரை வழிபட முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது.
    • அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை.எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூட்டி வழிபடலாம்.

    வடக்கு நோக்கி செல்லும் வெள்ளெருக்கு வேரைத் தேர்ந்தெடுத்து சாஸ்திர முறைப்படி மஞ்சள் காப்பு கட்டி, மந்திரம் கூறி, எடுத்து வடித்த விநாயகர் திருவுருவத்துக்கு சக்தி அதிகம்.

    சென்னைக்கு அருகில் உள்ள ஓரகடம் எனும் ஊரில் வெள்ளெருக்கு விநாயகர் கோவில் உள்ளது.

    கோவில் நிலத்தில் வெள்ளெருக்கஞ் செடிகள் வளர்க்கப்படுகின்றன.

    வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது.

    அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை.

    எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூட்டி வழிபடலாம்.

    அத்தர், ஜவ்வாது, புனுகு போன்ற வாசனைப் பொருள்களைச் சாத்தலாம்.

    வெள்ளெருக்கு விநாயகர் எழுந்தருளிய வீட்டில் செல்வம் பெருகும். பீடைகள் அகலும்.

    மகிழ்ச்சியுடன் மன அமைதியும் உண்டாகும்.

    • மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த எட்டய புரத்தில் உள்ள விநாயகர் பட்டத்துப்பிள்ளை என்றழைக்கப்படுகிறார்.
    • பதவி சம்பந்தமாக எந்தவிதமான பிரச்சினைகள் வந்தாலும் அதை இந்தப் பிள்ளையார் தீர்த்துவைப்பார் என்று ஐதீகம்.

    பட்டத்து பிள்ளையார்

    மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த எட்டய புரத்தில் உள்ள விநாயகர் பட்டத்துப்பிள்ளை என்றழைக்கப்படுகிறார்.

    அந்தக்காலத்தில் எட்டயபுரத்து குறுநில மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும்போது இந்தப் பிள்ளையாரை வணங்கிய பிறகுதான் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

    பதவி சம்பந்தமாக எந்தவிதமான பிரச்சினைகள் வந்தாலும் அதை இந்தப் பிள்ளையார் தீர்த்துவைப்பார் என்று ஐதீகம்.

    கும்பகர்ணப் பிள்ளையார்

    கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பாதையில் திருக்கடுவாய்க் கரைப்புத்தூர் என்ற தலத்தில் கும்பகர்ண பிள்ளையார் இருக்கிறார்.

    ஒரு முறை கும்பகர்ணனால் பாதிக்கப்பட்ட முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தன் மகன் விநாயகரை பார்த்து கும்பகர்ணனை இலங்கைக்கு அப்பால் உயிரோடு தூக்கி வீசு என்று கூற, விநாயகரும் தன் தும்பிக்கையால் கும்பகர்ணனைத் தூக்கி எறிந்தார்.

    விநாயகரால் கும்பகர்ணனின் தொல்லைகள் முனிவர்களுக்கு நீங்கியது. அன்று முதல் இந்த விநாயகருக்கு கும்பகர்ண பிள்ளையார் என்ற பெயர் வழங்கலாயிற்று.

    ×