search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • 64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்.
    • இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம்.

    தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே.

    இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.

    பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் வெண் பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.

    சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.

    திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும், கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ, கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போடக்கூடாது.

    64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்.

    இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம், அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் மட்டும் சாதாரணமான விளக்கு போடலாம்.

    • வறுமை நீங்கவும், செல்வச் செழிப்பு ஏற்படவும் கால பைரவரை வழிபடலாம்.
    • பாவம் நீங்கியதால் உயிர்கள் உன்னத நிலையை அடைந்து இறைவன் திருவடியை அடைகின்றன.

    கால பைரவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.

    திருமணத் தடைகள் விலகும்.

    சனிக்கிழமைகளில் வாசனை வீசும் மலர்களால் பைரவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி தோஷங்களும், நவக்கிரகத் தொல்லைகளும் நீங்கும்.

    தேய்பிறை அஷ்டமி அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும்.

    வறுமை நீங்கவும், செல்வச் செழிப்பு ஏற்படவும் கால பைரவரை வழிபடலாம்.

    பாவம் நீங்கியதால் உயிர்கள் உன்னத நிலையை அடைந்து இறைவன் திருவடியை அடைகின்றன.

    இதற்கு காரணமாக இருக்கும் கால பைரவரை நாமும் அவசியம் வழிபட வேண்டும்.

    கால பைரவர் அருள் பெற நமது நாட்டில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன.

    • ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம்.
    • எனவே அன்று பைரவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

    பைரவருடைய உடலின் அங்கங்களாக 12 ராசிகள் அமைந்துள்ளன.

    அவை மேஷம் சிரசு, ரிஷபம் வாய், மிதுனம் இரு கைகள், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி இடை, துலாம் புட்டங்கள், விருச்சிகம் மர்ம ஸ்தானங்கள், தனுசு தொடை, மகரம் முழங்கால்கள், கும்பம் காலின் கீழ் பகுதி, மீனம் கால்களின் அடிப்பாகம் என 12 ராசிகளும் நிறைந்துள்ளன.

    பைரவரின் சேவகர்களாக நவக்கிரகங்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய பக்தர்கள் எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்தக் கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பார்.

    பைரவரை வழிபட ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜென்மச்சனி, அர்த் தாஷ்டமச்சனி போன்ற சனி தோஷங்கள் விலகி விடும்.

    பைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகும்.

    ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம்.

    எனவே அன்று பைரவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

    பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர்.

    காசி கோவிலில் கால பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார்.

    சிவன் கோவில்களில் கால பைரவர்தான் காவல் தெய்வமாக விளங்குகிறார்.

    காலனாகிய எமனையே சம்காரம் செய்து மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த மூர்த்தி இவர்.

    எனவே இவரை கால சம்கார மூர்த்தி என்றும் அழைக்கின்றனர்.

    • சிவபெருமானின் தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர்.
    • இவர் காசியில் சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.

    சிவபெருமானின் தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர்.

    இவர் காசியில் சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.

    ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர்.

    முனிவரின் சாபத்தில் இருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர்.

    சனிக்கு அருள்பாலித்து ஈஸ்வர பட்டம் கொடுத்து சனீஸ்வரராக்கி நவக்கிரகங்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர்.

    இப்படி பைரவர் பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர்.

    இவரைக் கால பைரவர், மார்த்தாண்டவ பைரவர், சேத்ரபாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணகர்சன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.

    ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவபெருமானாரை வேண்டினார்கள்.

    ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்கினார்.

    அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டில் இருந்து அறுபத்து நான்காக மாறியது.

    அதோடு அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியது.

    இதுவே பைரவ அவதாரத்தின் தனித்துவம் ஆகும்.

    இதனால் மகிழ்வடைந்த தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    ஆனால் தற்சமயம் நம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது.

    • தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.
    • தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வு சிறக்கும்.

    பைரவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது மிக, மிக பிடிக்கும்.

    தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, சந்தன மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், தேன், அவல் பாயசம் மற்றும் பழ வகைகளை படைத்து பைரவரை வழிபட்டால் நாம் விரும்பியதை எல்லாம் பைரவர் தருவார்.

    தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.

    செல்வத்தை நமக்கு வாரி வழங்கும் அஷ்ட லட்சுமிகள், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு தங்களது செல்வ வள சக்தியை மேம்படுத்தி கொள்கிறார்கள்.

    எனவே நாமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் மங்காத செல்வ வளத்தை பெறலாம் என்பது ஐதீகமாகும்.

    தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வு சிறக்கும்.

    காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடியும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும்.

    அதே போல் ஆலயத்தின் மற்ற சன்னதிகளை மூடி சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டி சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

    • சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.
    • பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள்.

    சிவாலயங்களில் நீங்கள் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்தைப் பார்த்து இருப்பீர்கள்.

    சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.

    ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடா விட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும்.

    அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்.

    பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள்.

    வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் "பைரவா... காப்பாற்று'' என்று அழைத்துப் பாருங்கள்,

    காகம் விரட்டும் போது கோழி தன் குஞ்சுகளை எப்படி தன் இறக்கைக்குள் வைத்து காப்பாற்றுகிறதோ, அப்படி ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவர்.

    பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால், நவக்கிரக தோஷங்கள் விலகி, தீ வினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை குனியா வாழ்க்கையை நிச்சயம் வாழ்வீர்கள்.

    8 மற்றும் 64 என்ற எண்ணிக்கையில் பல கோலங்களில் பைரவர் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.

    • எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.
    • தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும்.

    பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார்.

    எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.

    தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும்.

    எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம்.

    ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை.

    குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.

    அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும்.

    பகலில் ஏதாவது ஒருபொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

    அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.

    மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும்.

    சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது.

    பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    • அந்த நாய்கள் யாருக்கும் எந்த துன்பமும் செய்வதில்லை.
    • பக்தர்கள் தங்களால் இயன்ற உணவை அந்த நாய்களுக்கு வழங்கி விட்டு செல்கிறார்கள்.

    காலபைரவரோடு இருக்கும் நான்கு நாய்களையும் வேதங்கள் நான்காகக் கூறியுள்ளனர்.

    எப்போதும் இறைவனோடு சேர்ந்தே இருப்பவை வேதங்கள் என்பதை உணர்த்தவே இவர் கொண்ட கோலம் கால பைரவ மூர்த்தி கோலமாகும்.

    பைரவமூர்த்தியோடு நாய் இருப்பதற்கு மேலும் சில காரணங்களைக் கூறுவது வழக்கத்தில் உள்ளது.

    அவை, காவலுக்குத் துணை புரியும் நாய் காலத்தை அறிந்து சொல்லும் (உணர்த்தும்) சூக்கும புத்தி கொண்டது. குறிப்பாக எந்த உயிரையும் எடுக்க காலன் வருவது, கண்களுக்குத் தெரியாத தீய சக்திகள் வருவது போன்றவற்றைக் கண்டு அவற்றை தெரிவிக்கும் தன்மை நாய்க்கு உண்டு என்றும் சொல்வார்கள்.

    அஷ்டமி திதி நாட்களிலும் சனிக் கிழமைகளிலும் பைரவரை முறைப்படி அர்ச்சித்து வழிபட்டால் சனி தோஷங்களும் சகலவிதமான தோஷ்ங்களும் நீங்கும்.

    ராமகிரி தலத்தின் பிரதான மூர்த்தி காலபைரவர் என்பதால் என்னவோ அந்த கோவிலின் அனைத்து பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    எங்கு பார்த்தாலும் நாய்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

    அந்த நாய்கள் யாருக்கும் எந்த துன்பமும் செய்வதில்லை.

    பக்தர்கள் தங்களால் இயன்ற உணவை அந்த நாய்களுக்கு வழங்கி விட்டு செல்கிறார்கள்.

    பைரவர் சந்நிதியில் வழிபடும் போது பின்வரும் பாடலைப் பாடி வழிபட வேண்டும்.

    பைரவர் சந்நிதியில் வழிபடும் போது பின்வரும் பாடலைப் பாடி வழிபட வேண்டும்.

    'தளம் பொலி மலரோன் ஆதி வானவர் தாழ்ந்து போற்ற

    உளம் பொலி காசி மேஷம் உயிர்கள் செய் பாவமெல்லாம்

    களம் பொழியாது தண்டனை கண்டள பொழிந்து முந்தி

    வளம் பொலி வகை செய் கால பைரவற் கன்பு செய்வாம்!

    ஸ்ரீபைரவர் காயத்ரி

    ஓம் திகம்பராய வித்மஹே

    தீர்கஸிஷ்ணாய தீமஹி

    தந்நோ பைரவ; ப்ரசோதயாத்.

    • இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும்.
    • இவ்வாறு 16 சனிக் கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனி பகவானின் தாக்கம் நின்றுவிடும்.

    சனி பகவானின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே சிறந்தது ஆகும்.

    புதிய நீலத்துணியில் கறுப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும்.

    பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும்.

    பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும்.

    வைத்தப்பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.

    அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும்.

    அந்த நீலப் பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும்.

    இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும்.

    இவ்வாறு 16 சனிக் கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனி பகவானின் தாக்கம் நின்றுவிடும்.

    • ராமகிரி ஆலயத்தில் முதலில் தோன்றி அருள்பாலித்தவர் ஸ்ரீகால பைரவர்.
    • அதனால்தான் இத்தலத்தை கால பைரவ ஷேத்திரம் என அழைக்கிறார்கள்.

    ராமகிரி ஆலயத்தில் முதலில் தோன்றி அருள்பாலித்தவர் ஸ்ரீகால பைரவர்.

    அதனால்தான் இத்தலத்தை கால பைரவ ஷேத்திரம் என அழைக்கிறார்கள்.

    தனது பத்தினி ஸ்ரீகாளிகா தேவியுடனும் எதிரில் நாய் வாகனத்துடனும், ஐந்து கோஷ்ட மூர்த்திகள் உள்ள பிரத்யேகமான கர்ப்ப கிரகத்தில் சூலம், உடுக்கை, கத்தி, தண்டம், முறையாக வலது நான்கு கரங்களிலும், அங்குசம், பாசம், மணி, கபாலம் முதலியவற்றை இடது நான்கு கரங்களிலும் தரித்து நிர்வாண கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    சூரியன், சந்திரன், கங்கை உள்ள ஜடாமுனியுடன் கோரைப்பற்கள் உடைய முகத்துடனும், தென்திசை நோக்கி எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீகால பைரவ மூர்த்தி.

    பெயர் மாற்றம்

    ராமகிரி ஊரை ஆதி காலத்தில் "திருக்காரிக்கரை" என்று அழைத்தனர்.

    ஸ்ரீராமரின் பூஜை நிமித்தமாக கொண்டு வரப்பட்ட சுயம்புலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதன் காரணமாக "ராம்" என்ற நாமமும், ஆஞ்சநேயர் சாபத்தால் மடுகு மறைந்து "கிரி" (மலை) ஏற்பட்டதால் கிரி என்ற பதமும் சேர்த்து அன்று முதல் திருக்காரிக்கரை கிராமத்திற்கு ராமகிரி என்ற புனிதப் பெயர் உண்டாயிற்று.

    காலமாற்றத்தால் திருக்காரிக்கரை என்ற பெயர் மறைந்து ராமகிரி என்ற பெயர் நிலைத்து நின்று விட்டது.

    • சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.
    • எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

    சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.

    எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

    சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர்

    வைகாசி தாதா - ருரு பைரவர்

    ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர்

    ஆடி அரியமான் -கபால பைரவர்

    ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

    புரட்டாசி பகன் - வடுக பைரவர்

    ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்

    கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர்

    மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர்

    தை விஷ்ணு - குரோதன பைரவர்

    மாசி வருணன் - ஸம்ஹார பைரவர்

    பங்குனி பூஷா -சட்டநாத பைரவர். 

    ×