search icon
என் மலர்tooltip icon

    ஜோதிடம்

    மேஷம்

    March : வேகம் மற்றும் விவேகத்தோடு செயல்பட்டு வெற்றி காணும் மேஷ ராசி நேயர்களே.

    13.2.2022 முதல் 14.3.2022 வரை

    வேகம் மற்றும் விவேகத்தோடு செயல்பட்டு வெற்றி காணும் மேஷ ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் 9-ம் இடத்தில் தனாதிபதி சுக்ரனோடு கூடிஇருக்கிறார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

    ராகு-கேது ஆதிக்கம்

    உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் ராகுவும், 8-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். ராகுவின் சஞ்சாரத்தால் தனவரவு தாராளமாக வந்து சேரும். அதே நேரம் குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். கோபத்தால், உறவினர்களை பகைத்துக் கொள்ள நேரிடும். உழைப்பு அதிகம் தேவைப்படும். அஷ்டமத்தில் கேது இருப்பதால் அடிக்கடி ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். பயணங்களில் அடிக்கடி மாற்றம் வரலாம். சுபவிரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம்.

    மகர - சுக்ரன் சஞ்சாரம்

    மாசி மாதம் 14-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். மகர சுக்ரனால் நிகரற்ற வாழ்வு உங்களுக்கு வரப்போகிறது. காரணம் தன, சப்தமாதிபதியாக விளங்குபவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். பொருளாதாரநிலை உயரும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் எண்ணம் கைகூடும். வரன்கள் பார்த்துக் கொண்டிருந்தால், அது சுமுகமாக முடியும்.

    உச்ச செவ்வாய் சஞ்சாரம்

    உங்கள் ராசிநாதன் செவ்வாய், மாசி 14-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அங்கு அவர் உச்சம் பெறுவதால், மிகுந்த யோகம் வரப்போகிறது. உடல்நலம் சீராகும். இருப்பினும் அங்குள்ள சனியோடு செவ்வாய் சேர்வது சில தாக்கத்தையும் ஏற்படுத்தலாம். எனவே முடிந்த அளவு கவனத்தோடு செயல்படுங்கள். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலை உருவாகும். தைரியமும், தன்னம்பிக்கையையும் தேவைப்படும் நேரம் இது.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சகோதர, சகாய ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானத்திற்கும் அதிபதியான புதன், மாசி 17-ந் தேதி உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருகிறார். உத்தியோக முன்னேற்றம், ஊதிய உயர்வு கிடைக்கலாம். நல்ல நிறுவனங்களில் இருந்து கூடுதல் சம்பளத்துடன் அழைப்புகள் வரலாம். கும்ப ராசியில் உள்ள சூரியன், குருவோடு இணைவதால் அரசுவழி ஆதாயம் உண்டு. அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து விண்ணப்பித்தவர்களுக்கு அதுவும் கிடைக்கலாம்.

    இம்மாதம் அஷ்டமத்து கேது இருப்பதால், வெள்ளிக்கிழமை தோறும் விநாயகப்பெருமானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- பிப்ரவரி: 15, 16, 26, 27, மார்ச்: 2, 3, 10, 11, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    பெண்களுக்கான பலன்கள்

    பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதம் இது. கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெறுவதால், நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வீடு வாங்கும் யோகம் உண்டு. படித்து முடித்த பிள்ளைகளுக்கு உத்தியோகமும், உயர்பதவிகளும் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

    மேஷம்

    12th Mar - 14th Mar: திருப்பங்கள் நிறைந்த வாரம்.

    14-03-2022 முதல் 20-03-2022 வரை

    திருப்பங்கள் நிறைந்த வாரம். ராசி அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று சனியுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முக்கிய முடிவு களை எடுக்க நல்ல நேரம். 5-ம் அதிபதி சூரியன் 12-ல் மறைவு பெற்றதால் தொழில் மற்றும் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். சிலர் வெளிநாட்டு வேலைக்குச் செல்லலாம்.

    வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக் கும். தொழிலில் போட்டி, பொறாமை மிகுதியாகும். பணவரவுகள் திருப்தியாக இருக்கும். சுமாரான நிலையில் இருப்பவர்கள் கூட படிப்படியாக உயர்ந்து நல்ல நிலையை அடையக் கூடிய சந்தர்ப்பம், சூழ்நிலை அமையும். பெயர், புகழ் அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். விலகிச் சென்ற குடும்ப உறவுகள் தவறுகளை உணர்ந்து மீண்டும் உங்களிடம் வருவார்கள்.

    பெண்கள் குடும்ப நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். ராசி அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதால் ஆடம்பரமான, விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் மிகும். தினமும் காலை, மாலையில் வீட்டில் நெய் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    14th March : வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள்

    தேதி : 14th மார்ச் 2022

    வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும். வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்

    திருச்சியில் உள்ள புத்தூரில் உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் காசி விசுவநாதர். இறைவியின் திருநாமம் காசி விசாலாட்சி.
    தமது தேவைகளை தீர்க்கும் பொருட்டு இறைவன் மற்றும் இறைவியிடம் வேண்டிக்கொள்வது மனிதர்களின் இயல்பு. தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின் இறைவன் இறைவிக்கு அபிஷேகமோ அல்லது ஆராதனையோ செய்து நன்றிக் கடனை நிறைவேற்றுவதும் பக்தர்களின் வழக்கம்.

    ஆனால், தாங்கள் வேண்டிக் கொள்ளும்போதே, அதாவது நன்றிக் கடனை முன்னதாகவே பெண்கள் செலுத்தும் ஆலயம் ஒன்று உள்ளது என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?

    ஆம்... திருச்சியில் உள்ள புத்தூரில் உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் காசி விசுவநாதர். இறைவியின் திருநாமம் காசி விசாலாட்சி.

    ஆலயம் ஊரின் நடுவே அமைந்திருக்க நான்கு புறமும் வீதிகள். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்திற்கு கிழக்கு, தெற்கு என இருபுறமும் வாசல்கள் உள்ளன. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். நந்திதேவன் தனி மண்டபத்தில் அமர்ந்திருக்க, அடுத்து உள்ளது மகா மண்டபம்.

    அந்த மகாமண்டபத்தின் வலதுபுறம் நின்ற கோலத்தில் அன்னை விசாலாட்சி அம்மன் அருள்பாலிக்கிறாள். அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவாசலின் இடதுபுறம் விநாயகர் மற்றும் ஆதிலிங்கேஸ்வரர் திருமேனிகளும், வலது புறம் பாலமுருகன் திருமேனியும் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் காசி விசுவநாதர் லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார்.

    பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த புராதன ஆலயம், அழகுற சீரமைக்கப்பட்டு, சுற்றிலும் திருமதிற் சுவற்றுடன் அழகுற விளங்குகின்றது.

    இங்குள்ள இறைவனின் திருவுருவம் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக பக்தர்கள் சொல்கின்றனர்.

    தெற்கு வாசலைக் கடந்தால் அங்கேயும் நந்தியும் பலி பீடமும் உள்ளன. இறைவனின் கருவறை கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கை அம்மனும் அருள் பாலிக்கின்றனர். தெற்குப் பிரகாரத்தில் விநாயகர், மேற்குப் பிரகாரத்தில் நாகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித் தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள்.

    வடக்குப் பிரகாரத்தில் சண்டீசுவரர் சன்னிதி உள்ளது. கிழக்குப் பிரகாரத்தில் சூரியன், சனி பகவான், பைரவர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களின் சன்னிதி உள்ளது.

    காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மன்

    நவராத்திரியின் 10 நாட்களும் இங்கு கொலு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. தவிர பிரதோஷம், வருடப்பிறப்பு, பொங்கல், தீபாவளி, ஆடி வெள்ளி நாட்கள், ஆடிபூரம், தை பூசம், சித்திரை மாதப் பிறப்பு, சங்கடஹர சதுர்த்தி, பங்குனி முதல் நாள், மாத கார்த்திகை நாட்கள், சஷ்டி தை வெள்ளி நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் போன்றவை நடைபெறுகின்றன. சித்திரா பவுர்ணமி, விஜயதசமி, தை பூசம், நவராத்திரி ஆகிய நாட்களில் இறைவன் இறைவி ரிஷப வாகனத்தில் வீதியுலா வருவதுண்டு. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடை பெறும் அன்னாபிஷேகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    தடைபட்ட திருமணம் நடந்தேற பிரார்த்தனை செய்து கொள்பவர்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவிக்கு சேலை வாங்கி சாற்றி வழிபட்டு நன்றிக் கடனை தெரிவித்துக் கொள்கின்றனர்.

    இங்கு அருள்பாலிக்கும் இறைவி அருள்மிகு விசாலாட்சி அம்மன் கன்னிப் பெண்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.

    திருமணத்திற்கு காத்து நிற்கும் பெண்கள் தங்களது மனதிற்குப் பிடித்த மணாளன் அமைய வேண்டுமென அன்னையிடம் மன முருக வேண்டிக் கொள்கின்றனர். அத்துடன், மாங்கல்யம் செய்து அதை இறைவியின் கழுத்தில் முன்னதாக நன்றி கடனாக அணிவித்து தங்களது பிரார்த்தனைக்கு முழு வடிவம் கொடுக்கின்றனர்.

    அவர்களது பிரார்த்தனை நிறைவேறுவது கண்கூடான நிஜம் என்று சிலிர்ப்போடு கூறுகின்றனர் பக்தர்கள்.

    திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில்இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். உறையூர் வழியாக செல்லும் நகரப் பேருந்துகள் இந்த ஆலயம் வழியே செல்லும்.
    ×