search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    திருமந்திர நூலை இயற்றியவர், திருமூலர். இவர் தன்னுடைய மூவாயிரம் ஆண்டு வாழ்நாளில் 3 ஆயிரம் பாடல்கள் நிரம்பிய இந்த நூலை உருவாக்கினார். இதில் இருந்து 10 பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
    பாடல்:-

    சுத்தசிவன் குருவாய் வந்து தூய்மை செய்து
    அத்தனை நல்கருள் காணா அதிமூடர்
    பொய்த்தகு கண்ணால் நமர்என்பர் புண்ணியர்
    அத்தன் இவன்என்று அடிபணிவாரே.

    விளக்கம்:-

    உலகின் எல்லாப் பொருட்களிலும் இயல்பாகக் கலந்து இருக்கும் சிவபெருமான், குருவாக வந்து உயிரைத் தூய்மை செய்து அருள் வழங்குவதை, அறிவற்றவர்கள் எவரும் அறியமாட்டார்கள். அதைவிடுத்து, அந்தக் குருவும் நம்மில் ஒருவர்தான் என்பார்கள். ஆனால் புண்ணியப் பிறவியான நல் உயிர்கள், சிவபெருமானை இனம் கண்டு, ‘நம் தலைவன் இவர்’ என்று பணிந்து வணங்குவர்.

    பாடல்:-

    இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்துள
    நன்செயல் புன்செயலால் அந்த நாட்டிற்காம்
    என்ப இறைநாடி நாடோறும் நாட்டினில்
    மன்பதை செப்பம் செயின் வையம் வாழுமே.

    விளக்கம்:-

    ஒரு நாட்டின் இன்பமும், துன்பமும் அந்த நாட்டில் உள்ளவர்கள் செய்யும், நல்ல செயல்களாலும், தீய செயல்களாலும் விளைபவை. அதனால் நாட்டை ஆளும் வேந்தன் நாள்தோறும் ஆராய்ந்து, நல்லவர்களை காத்தும், தீயவர்களுக்கு தண்டனை வழங்கியும் சமுதாயத்தைக் காத்தால், உலகம் நன்கு செழித்து வாழும்.

    பாடல்:-

    அவமும் சிவமும் அறியார் அறியார்
    அவமும் சிவமும் அறிவார் அறிவார்
    அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
    அவமும் சிவமும் அவன் அருளாமே.

    விளக்கம்:-

    இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ‘அவம்’ என்ற சொல் ‘ஆணை’ என்ற பொருளைத் தருகிறது. அதன்படி ஆணையின் பிறப்பிடமே சிவத்தின் இருப்பிடம் என்பதை அறியாதவர்கள், எதையுமே அறியாதவர்கள்தான்.

    மாறாக ஆணையின் பிறப்பிடம் சிவனின் இருப்பிடம் என்பதை அறிந்து உணர்ந்தவர்கள், அனைத்தும் அறிந்தவர்கள் ஆவர். ஆணையும், அதைப்பிறப்பிக்கும் ஈசனும் ஒன்றென உணரும் அருள் அறிவானது, சிவபெருமானின் அருளைப் பெற்றால் மட்டுமே கிடைக்கும்.

    அந்த அருளைப் பெற்றவர்கள், ஒவ்வொரு ஆணையையும் சிவமாகவும், அவனின் கட்டளையுமாகவே இருப்பதை உணர்ந்துகொள்வார்கள்.

    பாடல்:-

    போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தைத்
    தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி
    சாற்றுகின்றேன் அறைஓர் சிவயோகத்தை
    ஏற்றுகின்றேன் எம்பிரான் ஓர் எழுத்தே.

    விளக்கம்:-

    இறைவன் திருவடியை நான் வழிபடுகின்றேன். அந்தப் பெருமானை புகழ்கின்றேன். அவன் அறிவுறுத்திய ஞானத்தால் தெளிவடைகின்றேன். சிவனின் திருவடியை சேர, அதற்குரிய பட்சாட்சரமான ஐந்தெழுத்து மந்திரத்தை கூறுகின்றேன். சக்கரத்தையும், சிவமந்திரத்தையும் சொல்கின்றேன். அந்த மந்திரத்தின் எழுத்தாகிய சிகரத்தைச் சிந்திக்கின்றேன்.

    பாடல்:-

    ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
    பாசம் இயங்கும் பரிந்துயிராய் நிற்கும்
    ஓசை அதன்மணல் போல விடுவதோர்

    ஓசையாம் ஈசன் உணர வல்லார்க்கே.

    விளக்கம்:-

    மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து, சிவபெருமானை உணருங்கள். அப்படி உணர்பவர்களுக்கு, அவர்களுக்குள் இருந்து ஓசை ஒன்று வெளிப்படும். அது பூவில் இருந்து வெளிப்படும் நறுமணம் போலவும், ஈசனின் சொரூபமாகவும், தேவர்கள் முதலிய அனைத்து உயிர்களுக்குள் இருக்கும் பாச உணர்வாகவும், அந்த பாசத்தின் கருணையால் உயிருக்குள் உயிராகவும் கலந்து நிற்கும்.

    பாடல்:-

    இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
    இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
    இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
    இருந்தேன் என்நந்தி இணைஅடிக் கீழே.

    பொருள்:-

    பல கோடி ஆண்டுகள், தியானத்தின் வழியாக இந்த உடலோடு வாழ்ந்தேன். பகல் எது, இரவு எது என்று அறியாத வகையில் தவயோகத்தில் நான் என்னை மறந்து இருந்தேன். தேவர்கள் அனைவரும் வழிபட்டு பேறுபெறும் திருவடியை நானும் வணங்கி துதித்தபடி இருந்தேன். என் தலைவன் நந்தியம்பெருமான் திருவடியே துணை என்று அதனை இறுகப்பிடித்தபடி, பற்று இன்றி இருந்தேன்.

    பாடல்:-

    தூய விமானமும் தூலம் அது ஆகுமால்
    ஆய சதாசிவம் ஆகும் நற் சூக்குமம்
    பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்

    ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே.

    விளக்கம்:-

    கோவில் கருவறையின் மேல் பருப்பொருளாக விளங்கும் விமானம், சிவவடிவம் ஆகும். சதாசிவ வடிவம் என்பது கருவறையில் சூட்சுமப் பொருளாக இருப்பதாகும். பரந்த பலிபீடம் சிவலிங்கமாம். இப்படி கோவிலின் ஒவ்வொரு பகுதியும் சிவமே ஆகும்.

    பாடல்:-

    கூடும் உடல் பொருள் ஆவி குறிக் கொண்டு
    நாடி அடிவைத்து அருள் ஞான சக்தியால்
    பாடல் உடலினில் பற்றற நீக்கியே
    கூடிய தானவனாங் குறிக் கொண்டே.

    விளக்கம்:-

    உயிர், அதன் நல்வினை மற்றும் தீவினைக்கேற்ப உடலைப் பெறுகின்றது. உடம்பு, அதனால் பெறப்பட்ட பொருள், உடலின் உள்ளே அமைந்த உயிர் ஆகியவற்றை, தன்னுடைய அன்பால் ஈர்த்து, தன்னுடைய திருவடியில் வைத்து அருள் ஞான சக்தியை வழங்குபவர், சிவபெருமான். எனவே நாம் அனைவரும் துன்பத்திற்கு காரணமான பற்றை அறவே நீக்கினால், அதுவரை மறைவாக அருள் செய்த ஈசன், பின் நேரடியாகவே அருள் செய்வார்.

    பாடல்:-

    மேலும் முகடு இல்லை; கீழும் வடிம்பு இல்லை;
    காலும் இரண்டு; முகட்டு அலகு ஒன்றுஉண்டு;
    ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
    வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.

    விளக்கம்:-

    வீட்டைப் போல விளங்கும் இந்த உடம்புக்கு, தலைக்கு மேல் முகடு ஒன்றும் இல்லை. தலைக்குக் கீழே விளிம்பும் இல்லை. இரண்டு கால்கள் இருக்க, உடம்பை இறுக்கிக் கட்டத் தவறி விட்டனர். ஓலை கொண்டு வீட்டை மேய்ந்தவர், இடையை கட்ட மறந்துபோயினர். படைப்பவனின் பணியால் உருவான வெறும் கோவில் போன்றது இந்த உடம்பு. இதனை உணர்ந்து நல் உணர்வு பெற வேண்டும்.

    பாடல்:-

    காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
    பூணும் பலபல பொன்போலத் தோன்றிடும்
    பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
    காணும் தலைவி நற்காரணி தானே.

    விளக்கம்:-

    இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவளாக அன்னை ஆதிபராசக்தி இருக்கிறாள்.

    அந்த சக்தியின் அருளால், அயன் என்னும் பிரம்மன், அரி என்னும் திருமால், அரன் என்னும் சிவன் என பல தெய்வங்கள் தோன்றி, வெவ்வேறு (படைத்தல், காத்தல், அழித்தல்) பணிகளைச் செய்வர்.

    பொன்னில் இருந்து பல அணிகலன்கள் உருவாவது போல, அந்த சக்தி, தன்னுடைய ஆருயிரில் இருந்து பலவற்றைத் தெய்வமாக்குவாள். மூவருக்கும் அவளே முதன்மையானவள் ஆவாள்.
    தெரியாத குலதெய்வத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.
    குலதெய்வ வழிபாடு தான் நம்முடைய குலத்தை காக்கும். குலதெய்வம் நம் வீட்டில் இல்லை என்றால் நம் குடும்பத்தில் சந்தோஷம் நிச்சயமாக இருக்காது. குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யவில்லை, குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தோடு செல்வது இல்லை, குறிப்பாக குலதெய்வத்தை மனதில் கூட நினைப்பதில்லை என்றால், கஷ்ட நேரத்தில் மற்ற தெய்வங்களும் நமக்கு நிச்சயமாக துணையாக நிற்காது. குலதெய்வம் தெரிந்தவர்கள் குலதெய்வத்தை தினமும் மனதார நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது குடும்பத்தில் சுபிட்சத்தை தரும்.

    தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக நீங்கள் இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும். ஒரு சிறிய டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துளசி இலையை போட்டு கொள்ளுங்கள். இந்த டம்ளர் தண்ணீருக்கு முன்பு நீங்கள் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை உச்சரிக்கவும். கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.

    ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே
    இஷ்ட தர்ஷய நமஹா

    தெரியாத குலதெய்வத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்து முடித்த பின்பு, டம்ளரில் இருக்கும் தண்ணீரை குடித்து விட வேண்டும். இதேபோல தொடர்ந்து 48 நாட்கள் இரவு நேரத்தில், மேல் சொன்னபடி இந்த வழிபாட்டு முறையை செய்ய வேண்டும். கட்டாயமாக மந்திரத்தை நம்பிக்கையோடு உச்சரிக்க வேண்டும். இப்படி செய்தால் தெரியாத உங்கள் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்கு தெரியவரும் என்பது ஒரு நம்பிக்கை.

    நாற்பத்தி எட்டு நாட்களில் குலதெய்வம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றாலும் பரிகாரத்தை விட்டுவிட வேண்டாம். 90 நாட்கள் தொடர்ந்து இப்படி வழிபாட்டை மேற்கொள்ள நிச்சயமாக உங்களுடைய குல தெய்வத்தைப் பற்றிய ஏதாவது ஒரு தகவல், குல தெய்வத்தைப் பற்றிய விபரத்தை யார் மூலமாகவாவது நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
    ராகு-கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள், இந்த மந்திரத்தைத் தினமும் 9 முறை கூறி வந்தால் ராகு-கேதுவால் ஏற்படும் துன்பங்கள் வெகுவாக குறையும்.
    ராகு-கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள், ராகு காலத்தில் துர்க்கை தேவி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. தினமும் ராகுவுக்குரிய சுலோகத்தை பாராயணம் செய்து வருவது நன்மையளிக்கும்.

    நாகத் துவாஜாய வித்மஹே

    பத்ம ஹஸ்தாய தீமஹே

    தந்நோ ராகு ப்ரசோதயாத்

    அச்வ த்வஜாய வித்மஹே

    சூல ஹஸ்தாய தீமஹி

    தந்நோ கேது ப்ரசோதயாத்

    இந்த மந்திரத்தைத் தினமும் 9 முறை கூறி வந்தால் ராகு-கேதுவால் ஏற்படும் துன்பங்கள் வெகுவாக குறையும்.
    லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்கர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப்படும். குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
    லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்கர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப்படும். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக, லலிதா பரமேஸ்வரியை சுற்றி வீற்றிருந்து அருள்வதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை எனப்படும் கிருஷ்ண பட்சம் (அமாவாசையுடன் சேர்த்து 15 நாட்கள்), வளர்பிறை எனப்படும் சுக்ல பட்சம் (பவுர்ணமியுடன் சேர்த்து 15 நாட்கள்) என இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பட்ச பதினைந்து நாட்களில் பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்திற்கும் ஒருநாள் அதிபதிகளாக வருவார்கள். ஒரு மாதத்தின் இரு நாட்களில் பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்கின்றனர். குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.

    இங்கே 5 நித்ய தேவிகளைப் பற்றிய விவரங்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.

    காமேஸ்வரி

    விரும்பிய உருவத்தை எடுக்கக் கூடிய தேவி இவள். கோடி சூரிய பிரகாசமாக ஜொலிக்கும் தேகம் கொண்டவள். மாணிக்க மகுடம், பொன் மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற அணிகலன்களை அணிந்தவள். முக்கண்கள், ஆறு திருக்கரங்களில் கரும்பு வில், மலர் அம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்தவள். பிறை சூடிய திருமுடி கொண்டவள். இவரை வழிபட்டால் குடும்பத்தில் ஆனந்தம், தன வரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்வு அமையும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளா்பிறை பிரதமை, அமாவாசை.

    மந்திரம்:-

    ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
    நித்யக்லின்னாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    பகமாலினி

    ‘பகம்’ என்ற சொல்லுக்கு பரிபூர்ண ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்கியம், வீரியம், முக்தி போன்ற பொருளும் உண்டு. இவற்றின் அம்சமாக திகழ்வதால் இந்த அன்னைக்கு ‘பகமாலினி’ என்று பெயர். சிவந்த நிறமுள்ள இவள், சிவப்பு கற்களால் ஆன நகைகளை அணிந்து அழகு பொலியும் திருமுகம் கொண்டவள். முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும், வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் காட்சி தருகிறாள். இந்த தேவியை வழிபாடு செய்தால், வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை துவிதியை, தேய்பிறை சதுர்த்தசி.

    மந்திரம்:

    ஓம் பகமாலின்யை வித்மஹே
    ஸர்வ வஸங்கர்யை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    நித்யக்லின்னா காயத்ரி மந்திரம்

    கருணை மிகுந்த இந்த அம்பிகையை வழிபடுவோர், மூவுலகிலும் புத்தி மற்றும் சக்தியோடு வாழ்வர். சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல், முக்கண்கள், திருமுடியில் பிறை சந்திரன் கொண்டு அருளும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். இந்த அன்னையை வழிபட்டால், குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் வராது.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை திருதியை, தேய்பிறை திரயோதசி.

    மந்திரம்:

    ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
    நித்ய மதத்ரவாய தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    வஹ்னி வாஸினி மந்திரம்

    அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி என்று பெயர். அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். `வஹ்னி’ என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள். இந்த அம்மனை வழிபட்டால் நோய் தீரும், தேக பலத்தோடு, உலக இன்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு அமையும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை ஏகாதசி.

    மந்திரம்:

    ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
    ஸித்திப்ரதாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்
    கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாக செல்வமும் சேரும் என்பதாலேயே, ஹயக்ரீவர் தன்னுடைய மடி மீது லட்சுமி தேவியை அமர்த்தியிருப்பதாகவும் காரண காரியம் சொல்லப்படுகிறது.
    சரஸ்வதியோடு சேர்த்து அவருடைய குருவான ஹயக்ரீவரையும் வணங்கி வந்தால், படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியாகும் என்பது ஐதீகம். பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ மாதந்தோறும், திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் ஏலக்காய் மாலை அணிவித்து, நோட்டு, பேனாவை பூஜையில் வைத்து வணங்க வேண்டும். தேன் கொண்டு அபிஷேகம் செய்து, அந்த தேனை படிக்கும் பிள்ளைகளின் நாக்கில் தடவி, ஹயக்ரீவரின் மந்திரத்தை உச்சரிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பிள்ளைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்குவர்.

    மந்திரம்

    ஞானானந்தமயம் தேவம்
    நிர்மல ஸ்படிகாக்கிருதிம்
    ஆதாரம் ஸர்வவித்யானாம்
    ஹயக்ரீவ முபாஸ்மஹே

    பொருள்:- ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக இருப்பவரும், எந்த மாசும் இல்லாத ஸ்படிக மணியைப் போன்ற திருமேனியைப் பெற்றவரும், எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமாக விளங்குபவரும், குதிரை போன்ற திருக்கழுத்தைக் கொண்டவருமான ஹயக்ரீவ பெருமாளை வணங்குகிறோம்.
    நாளை மாலை பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.
    சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார். நாளை மாலை பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.

    நந்திகேசி மஹாயாக

    சிவதயா நபராயண கௌரீ

    சங்கரஸேவர்த்தம்

    அனுக்ராம் தாதுமாஹஸ

    என்னும் நந்தி தேவருக்குரிய ஸ்லோகத்தையும் சொல்லி வணங்கலாம். எல்லாவற்றுக்கும் மேலான மந்திரமான நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து பிரதோஷ வேளையில் தியானிப்பதன் மூலம் நந்திபகவானின் கருணையையும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாகப் பெறலாம்.

    திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இந்த ஸ்லோகத்தை ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.
    வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம்
    ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்
    வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்
    அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்தம் அஜமவ்யயம்
    நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம்
    கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்
    வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம்
    சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம்
    வைகுண்டம் து(thu)ஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம்
    த்ரிவிக்ரமம் த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஸ்வரம்
    ராமம் ராமம் ஹயக்ரீவம் பீ(B)மம் ரௌத்ரம் ப(B)வோத்ப(B)வம்
    ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம் மங்கலாயுதம்

    தாமோதரம் தமோபேதம் கேஸவம் கேஸிஸூதனம்
    வரேண்யம் வரதம் விஷ்ணுமானந்தம் வஸுதேவஜம்
    ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம்
    ஸகலம் நிஷ்கலம் ஸுத்தம் நிர்குணம் குணஸாஸ்வதம்
    ஹிரண்யதனுஸங்காஸம் ஸுர்யாயுத ஸமப்ரபம்
    மேகஸ்யாமம் சதுர்பாஹும் குஸலம் கமலேக்ஷணம்
    ஜ்யோதீ ரூமரூபம் ச ஸ்வரூபம் ரூப ஸம்ஸ்திதம்
    ஸர்வஞ்ஜம் ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம் ஸர்வதோமுகம்
    ஜ்ஞானம் கூடஸ்தமசலம் ஜ்ஞானதம் பரமம் ப்ரபும்
    யோகீஸம் யோக நிஷ்ணாதம் யோகினம் யோகரூபிணம்
    ஈஸ்வரம் ஸர்வபூதானாம் வந்தே பூதமயம் ப்ரபும்
    இதி நாமஸதம் திவ்யம் வைஷ்ணவம் கலுபாபஹம்
    வ்யாஸேன கதிதம் பூர்வம் ஸர்வபாப ப்ரணாஸனம்
    ய: படேத் ப்ராதருத்தாய ஸ பவேத் வைஷ்ணவோ நர:
    ஸர்வ பாப விஸுத்தாத்மா: விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
    சாந்த்ராயண ஸஹஸ்ராணி கன்யாதான ஸதானி ச
    கவாம் லக்ஷஸஹஸ்ராணி முக்திபாகீ பவேந்நர:
    அஸ்வமேதாயுதம் புண்யம் பலம் ப்ராப்னோதி மானவ:
    விஷ்ணு ஸதநாம ஸ்தோத்திரம்.
    கீழ்க்காணும் துதியையும் சோமவார விரத தினத்தன்று ஓதினால் எல்லா நலன்களும் நிறையும். மாலையில் சிவன் கோவிலில் ஈசனையும், நவகிரக சந்நதியில் சந்திரனையும் வணங்கி வரலாம்.
    ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
    ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவி
    தாங்க்ரிம்
    தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம்
    ஸுதாம்ஸும் ஸ்ரீவத்ஸ மௌக்திக
    தரம் ப்ரணமாமி நித்யம்.

    பொதுப்பொருள்: வெண்மையான வஸ்திரம் தரித்தவரே, சிறந்த வெண்மை நிறம் கொண்டவரே, வெள்ளைக் குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரே, தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரே, இரண்டு கைகளிலும் அபய-வரத முத்திகளைத் தரித்தவரே, மனமுவந்து வரங்களை அளிப்பவரே, அம்ருத கிரணமும், வத்ஸம் என்ற முத்துமாலையை தரித்தவருமான சந்திர பகவானே நமஸ்காரம். அன்று விரதம் முடிந்த பின் தஞ்சை மாவட்டத்திலுள்ள திங்களூர் சென்று கைலாசநாதரையும், தனி சந்நதியில் வீற்றிருக்கும் சந்திர பகவானையும் வழிபடலாம். இயலாதவர்கள் பக்கத்து சிவன் கோயிலில் ஈசனையும், நவகிரக சந்நதியில் சந்திரனையும் வணங்கி வரலாம்.

    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு உகந்த நாட்கள். இந்த நாட்களில் மாலை நேரத்தில் விளக்கேற்றி அம்மனை வழிபடுவது சிறப்பாக இருக்கும்.
    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் மாலை நேரங்களில் குளித்து, தூய மனதோடு துர்கை அம்மனுக்கான இந்த எளிய ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வந்தால் மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும். எந்த கெட்ட சக்தியும் உங்களை நெருங்காது.

    மந்திரம்:

    ஓம் காத்யாயனய வித்மஹே
    கன்யாகுமாரி தீமஹி
    தன்னோ துர்கிப்ரசோதயாத்

    பொருள்: காத்யாயனய என்ற மகரிஷிக்கும் மகளாகப் பிறந்தவளே, என்றும் இளமையாக இருப்பவளே, உன்னை வணங்குவோரின் மனக் குழப்பத்தை நீக்கி, நல்லறிவைக் கொடுத்து அதன் மூலம் பல நற்பலன்களை அருளக்கூடிய துர்க்கையே உன் பாதத்தைப் பணிகிறோம்.
    இந்த ஸ்லோகத்தை அரசமரமும், வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ஜெபிக்க நிறைவான பலன் கிடைக்கும். சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் உண்டானால் அது விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ:|
    ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் ||
    ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத:|
    ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:||
    சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத :||

    இந்த ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர சர்ப்பதோஷம் நீங்கும். சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் உண்டானால் அது விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதை அரசமரமும், வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ஜெபிக்க நிறைவான பலன் கிடைக்கும்.

    கல்வி, ஞானம், தனம் உள்ளிட்டவற்றை பெருகச் செய்யும் கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் கிழமைகளில் பின்வரும் மந்திரங்களை சொல்லி வந்தால் புதன் பகவானின் அருளையும் ஆசியையும் பெறலாம்.
    ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் அவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும் கல்வியாளர்களாகவும் இறை பக்தி மிக்கவர்களாகவும் இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்கிறது. குடும்பத்தில் அமைதியை அருள்கிறது. வியாபாரத்தில் நஷ்டத்தை போக்கி, லாபம் கிடைக்க துணை செய்கிறது. கல்வி, ஞானம், தனம் உள்ளிட்டவற்றை பெருகச் செய்யும் கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் கிழமைகளில் பின்வரும் மந்திரங்களை சொல்லி வந்தால் புதன் பகவானின் அருளையும் ஆசியையும் பெறலாம்.

    புதன் மந்திரம்:

    ப்ரிங்கு கலிகா ச்யாம்
    ருபேணா ப்ரதிமம் புதம்
    ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
    தம் புதம் ப்ரணமாம் யஹம்

    புதன் காயத்ரி மந்திரம் :

    ஓம்  கஜத்துவ ஜாய  வித்மஹே
    சுக ஹஸ்தாய தீமஹி
    தன்னோ புத : பிரசோதயாத்

    புதன் கிழமைகளில் பெருமாளை வணங்கிவிட்டு, நவகிரகங்களை வழிபட்டுவிட்டு பிறகு புதன் பகவானை நோக்கி வழிபட வேண்டும். காலையில் குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி, பெருமாளை வணங்கிவிட்டு அதைத் தொடர்ந்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். பிறகு புதன் கிரகத்துக்குரிய மந்திரம், காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட வேண்டும். பச்சைப் பயறை வேகவைத்து பசுக்களுக்கு அளிப்பது நல்லது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் புதனின் அனுக்கிரகங்களைப் பெறலாம்.

    இந்த பாடலை பாடி புதன் அருளைப் பெற உங்க எல்லோருக்காகவும் பிராத்திக்கிறேன். புதன் கிழமை அன்று நாராயணணை வழிபட்டு பின்னர் நவக்கிரகங்களை வணங்கி, பின் புதன் பகவான் முன் நின்று வழிபட வேண்டும். இப்படிச் செய்தால் சகல சிறப்புகளையும் அடையலாம். இந்த மந்திரங்கள் கெட்ட சக்தியை விரட்டும் ஆற்றல் கொண்டது.

    பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி ,இஷ்ட தெய்வத்தை வணங்க, பெருமாளை வழிபடவும். புதன்கிழமை பச்சை பயறு வேக வைத்துப் பசு மாட்டுக்குக் கொடுக்கலாம். அல்லது புதன் ஓரைகளில் வீட்டில் விளக்கேற்றி புதன் பகவானை மனதார வேண்டி வந்தால் பலன் கிடைக்கும்.
    தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. அவரை வழிபடும் போது சொல்ல வேண்டிய மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
    தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக வனங்கப்படுபவர் விநாயகர். அதனால்தான் அவரை முழு முதல் கடவுள் என்கிறோம். தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி.

    1. விநாயகர் சகஸ்ரநாமம்:

    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

    2. விநாயகர் ஸ்லோகம்:

    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    3. விநாயகர் ஸ்லோகம்:

    ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ரதுண்டாய தீமஹி
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

    4. விநாயகர் ஸ்லோகம்:

    ஐந்து கரத்தனை யானை முகத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

    5. விநாயகர் ஸ்லோகம்:

    மூஷிக வாகன மோதக ஹஸ்த
    சாமர கர்ண விளம்பித சூத்ர
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர
    விக்ன விநாயக பாத நமஸ்தே.

    6. விநாயகர் காயத்ரி மந்திரம்:

    வக்ரதுண்டாய ஹீம்
    ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
    மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
    ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

    7. விநாயகர் ஸ்லோகம்:

    அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
    தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
    குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
    கணபதியைக் கைதொழுதக் கால்.

    ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.
    ×