search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    ஷண்முக கவசத்தை நாள்தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு.
    வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும் போது அவற்றில் இருந்து வெளியேற நமக்கு உறுதுணையாக இருப்பது பக்தி என்னும் அமுத சுரபி. அதிலும் முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு வினை எல்லாம் விலகி போகும். எனவே தினந்தோறும் நாம் பூஜிக்க கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதில் சண்முக கவசத்தை படிப்பதால் நமது மனம் சுகம் பெறும். இவற்றை தினமும் பாராயணம் செய்வதால் கல்வி, தொழிலில் உள்ள எதிர்ப்புகள் அனைத்தும் பனிபோல் விலகும். அதுமட்டுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யும்.

    ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (Shanmuga kavasam). அண்டமாய் அவனியாகி பாடல் வரிகள். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ஷண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30 செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து – 12, மெய் எழுத்து – 18). ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வோர்க்கு தீராத நோய், சங்கடம் தரும் வழக்கு, செய்வினை, சூன்யம் போன்றவை நீங்கி முருகன் அருள் கிட்டுவது உறுதி. ஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு. இது உலகத்தின் நோய் மருந்து இதை கண்டிப்பாக தினமும் விடியல் காலையும் மாலையும் கண்டிப்பாக கேட்கவும்….

    அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்
    தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
    எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
    திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க…(1)

    ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க
    தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
    சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
    நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க…(2)

    இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
    முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க
    துரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
    திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க…(3)

    ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
    தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
    ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
    ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க…(4)

    உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க
    தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
    புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
    பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க…(5)

    ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத்
    தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய
    நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ
    ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க…(6)

    எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
    அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
    விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
    செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க…(7)

    ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க
    சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
    நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
    சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க…(8)

    ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க
    பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க
    மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க
    தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க…(9)

    ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்
    பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்
    கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்
    வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க…(10)

    ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்
    தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி
    பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,
    தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க…(11)

    ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
    தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்
    தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்
    கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க…(12)

    கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
    கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
    நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்
    சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க…(13)

    ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
    சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
    நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
    உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க…(14)

    சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
    நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
    குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
    பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க…(15)

    ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க
    சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
    திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
    எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க…(16)

    டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை
    குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,
    நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்
    எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க…(17)

    இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
    முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்
    சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த
    பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க…(18)

    தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
    சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்,
    அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
    எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க…(19)

    நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
    அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
    இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி
    இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க…(20)

    பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
    கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
    எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
    ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க…(21)

    மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்
    தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்
    விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
    நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க…(22)

    யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
    அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க
    சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
    சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க…(23)

    ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
    செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
    விஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்
    எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க…(24)

    லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று
    தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்,
    நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்
    இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க…(25)

    வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க
    விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
    நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்
    கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க…(26)

    இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,
    வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்
    பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
    செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க…(27)

    இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
    வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க
    ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க
    தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க…(28)

    இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க
    திறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க
    நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க
    மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க…(29)

    இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
    தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
    நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
    கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே…(30)

    … ஸ்ரீ சண்முக கவசம் முற்றிற்று. “எனை ஆதரித்த பரம ரகசிய சக்தி எனை நம்பினோரை ஆதரியாது நிற்குமோ, ஐயம் வேண்டாம்!” – பாம்பன் சுவாமிகள்
    கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும்.
    தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் நரசிம்மர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள்.

    தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள். அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும்.

    கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும். கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.

    பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார். “நரசிம்ம பிரபத்தி”யின் தமிழாக்கம் வருமாறு:-

    நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.
    சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
    அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
    எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
    இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுல கத்திலும் நரசிம்மரே!
    எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல் லாம் நரசிம்மரே!
    நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை
    அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.

    பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.
    மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
    சைவ நெறி நூல்களுக்கு சமமாக விளங்கக்கூடிய தத்துவம் நிறைந்தது, திருமந்திரம் நூல். அன்பே அனைத்திற்கும் மூலம். அந்த அன்பாக இருப்பவர் சிவபெருமான் என்பதை தன்னுடைய திருமந்திரப் பாடல்கள் மூலமாக உணர்த்துகிறார், திருமூலர். மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

    பாடல்:-

    போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தைத்

    தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி

    சாற்றுகின்றேன் அறைஓர் சிவயோகத்தை

    ஏற்றுகின்றேன் எம்பிரான் ஓர் எழுத்தே.

    விளக்கம்:-

    இறைவன் திருவடியை நான் வழிபடுகின்றேன். அந்தப் பெருமானை புகழ்கின்றேன். அவன் அறிவுறுத்திய ஞானத்தால் தெளிவடைகின்றேன். சிவனின் திருவடியை சேர, அதற்குரிய பட்சாட்சரமான ஐந்தெழுத்து மந்திரத்தை கூறுகின்றேன். சக்கரத்தையும், சிவமந்திரத்தையும் சொல்கின்றேன். அந்த மந்திரத்தின் எழுத்தாகிய சிகரத்தைச் சிந்திக்கின்றேன்.
    மூவாயிரம் பாடல்கள் அடங்கிய இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம்.

    ஈசனையும், அவனை பற்றிக்கொண்டு முக்தியை அடையும் வழியையும், அன்பே சிவம் என்பதையும் பற்றி திருமூலரால் பாடப்பட்ட நூல்தான், திருமந்திரம். மூவாயிரம் பாடல்கள் அடங்கிய இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

    பாடல்:-

    அவமும் சிவமும் அறியார் அறியார்

    அவமும் சிவமும் அறிவார் அறிவார்

    அவமும் சிவமும் அருளால் அறிந்தால்

    அவமும் சிவமும் அவன் அருளாமே.

    விளக்கம்:-

    இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ‘அவம்’ என்ற சொல் ‘ஆணை’ என்ற பொருளைத் தருகிறது. அதன்படி ஆணையின் பிறப்பிடமே சிவத்தின் இருப்பிடம் என்பதை அறியாதவர்கள், எதையுமே அறியாதவர்கள்தான்.

    மாறாக ஆணையின் பிறப்பிடம் சிவனின் இருப்பிடம் என்பதை அறிந்து உணர்ந்தவர்கள், அனைத்தும் அறிந்தவர்கள் ஆவர். ஆணையும், அதைப்பிறப்பிக்கும் ஈசனும் ஒன்றென உணரும் அருள் அறிவானது, சிவபெருமானின் அருளைப் பெற்றால் மட்டுமே கிடைக்கும்.

    அந்த அருளைப் பெற்றவர்கள், ஒவ்வொரு ஆணையையும் சிவமாகவும், அவனின் கட்டளையுமாகவே இருப்பதை உணர்ந்துகொள்வார்கள்.
    ஸர்வ மங்களா தேவியை வணங்கி வந்தால், பயணங்களில் பாதுகாப்பு உறுதியாகும். அனைத்து வித மங்களங்களும் வந்துசேரும். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அனைத்து அன்பரையும் காக்கின்றது.
    இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்தினங்களும் அலங்கரிக்க, தலையில் வைடூர்ய மகுடம் சூடியிருக்கிறாள். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அனைத்து அன்பரையும் காக்கின்றது. இந்த தேவி, நான்கு கரங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டு உடுத்தி, சர்வ மங்களமும் பொருந்திய தேவியாக அருள்பாலிக்கிறாள். இவளைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன. இந்த தேவியை வணங்கி வந்தால், பயணங்களில் பாதுகாப்பு உறுதியாகும். அனைத்து வித மங்களங்களும் வந்துசேரும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை திரயோதசி, தேய்பிறை திருதியை.

    மந்திரம்:-

    ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே
    சந்த்ராத்மிகாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்
    ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம். அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!
    அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக்
    காப்பான்

    - இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.

    இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே” எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.

    முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவர் ஆஞ்சநேயர் என்பதனைக் குறிக்கும். அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும். அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,

    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது. (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை) கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.

    ராமபக்தனான ஆஞ்சநேயர் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பார் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருள். ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம். ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர். அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!
    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் 24 திருநாமங்களையும் காலையில் நீராடிய உடனும், மாலையில் வீட்டில் விளக்கேற்றிய பிறகும் சொல்லி வரலாம்.
    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் 24 நாமங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை. அந்த எளிமையான 24 திருநாமங்களையும் காலையில் நீராடிய உடனும், மாலையில் வீட்டில் விளக்கேற்றிய பிறகும் சொல்லி வரலாம். அந்த நேரத்தில் இறைவனுக்கு துளசியும், சுத்தமான நீரும் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் விசேஷம். இதன் மூலம் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் மனநிம்மதி ஏற்படுவதோடு, ராஜயோகம் கைகூடும். இறுதியில் நாராயணனின் திருவடிகளையும் அடைய முடியும்.

    அத்தகயை சிறப்புமிக்க 24 திருநாமங்களை இங்கே பார்க்கலாம்.

    ஓம் கேசவாய நமஹ

    ஓம் சங்கர்ஷனாய நமஹ

    ஓம் நாராயணாய நமஹ

    ஓம் வாசுதேவாய நமஹ

    ஓம் மாதவாய நமஹ

    ஓம் ப்ரத்யும்னாய நமஹ

    ஓம் கோவிந்தாய நமஹ

    ஓம் அனிருத்தாய நமஹ

    ஓம் விஷ்ணவே நமஹ

    ஓம் புருஷோத்தமாய நமஹ

    ஓம் மதுசூதனாய நமஹ

    ஓம் அதோக்ஷஜாய நமஹ

    ஓம் த்ரிவிக்ரமாய நமஹ

    ஓம் லட்சுமி நரசிம்ஹாய நமஹ

    ஓம் வாமனாய நமஹ

    ஓம் அச்சுதாய நமஹ

    ஓம் ஸ்ரீதராய நமஹ

    ஓம் ஜனார்தனாய நமஹ

    ஓம் ஹ்ரிஷீகேசாய நமஹ

    ஓம் உபேந்த்ராய நமஹ

    ஓம் பத்மநாபாய நமஹ

    ஓம் ஹரயே நமஹ

    ஓம் தாமோதராய நமஹ

    ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ
    சீரடி சாய்பாபாவின் காயத்ரி மந்திரத்தை சமீப காலமாக நிறைய பேர் இடைவிடாமல் உச்சரிக்கும் வழக்கத்தை மேற்கொண்டு உள்ளனர். இதோ அந்த காயத்ரி மந்திரம்....
    ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
    ஸர்வ தேவாய தீமஹி
    தந்தோ ஸர்வப்ரசோதயாத்
    ஓம் ஷிரடி வாசாய வித்மஹே
    சச்சிதானந்தாய தீமஹி
    தந்தோ சாய் ப்ரசோதயாத்

    இப்படி மூல மந்திரத்தின் மகிமையை சாய் பாபா தனது பக்தர்களுக்கு பல தடவை உணர்த்தி உள்ளார். அதனால்தான் பாபா பக்தர்கள் இடையே சாய்ராம் சாய்ராம் என்று சொல்வது வழக்கத்துக்கு வந்தது.
    மகா சிவராத்திரி தினத்தன்று உச்சரிக்க வேண்டிய மிக அற்புத பாடல்களில் ஒன்று திருவாசகப் பாடல்கள். சிவன் மீதான பக்திச் சுவை சொட்டச் சொட்ட எழுதிய பாடல் தான் திருவாசகப் பாடல்கள்.
    மகா சிவராத்திரி தினத்தன்று உச்சரிக்க வேண்டிய மிக அற்புத பாடல்களில் ஒன்று திருவாசகப் பாடல்கள். மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. சிவன் மீதான பக்திச் சுவை சொட்டச் சொட்ட எழுதிய பாடல் தான் திருவாசகப் பாடல்கள்.

    சிவசிவ என்கிலர் தீவினையாளர்
    சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
    சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
    சிவசிவ என்றிடச் சிவகதி தானே.
    (திருமந்திரம் பாடல் : 2716)

    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
    வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
    நாதன் நாமம் நமச்சிவாயவே.

    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தன் இணையடி நீழலே!
    த்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
    வைத்தாய் பெண்ணைத் தென்பால்
    வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
    அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே!

    உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
    நிலவுலாவிய நீர்மலி வேணியன்
    அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

    கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
    நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்
    சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்
    எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சிஏகம்பனே!

    பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே!
    மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

    அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!
    அன்பு சிவமிர ண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
    அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
    அன்பே சிவமாக அமர்ந்திருந்தாரே!

    உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
    உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
    உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.

    அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
    அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
    அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு

    அணுவில் அணுவை அணுகலும் ஆமே

    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

    அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
    மொழிகின்ற முப்பத்து முன்றென்ப தாகுங்
    கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
    தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே
    மகாசிவராத்திரி தினமான நாளை நாம் சிவனுக்கு செய்யும் பூஜை, அபிஷேக, ஆராதனையின் போது நாம் சொல்ல வேண்டிய சிவனுக்குரிய மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
    சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவ வழிபாடு செய்பவர்கள், கீழே உள்ள மந்திரங்களை கூறி சிவனருள் பெற்றிடுங்கள்.

    சிவ மந்திரம்:

    நமச்சிவாய வாழ்க!
    நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!

    கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

    சிவா காயத்ரி மந்திரம் 1

    ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
    தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

    சிவா காயத்ரி மந்திரம் 2
    ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
    தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

    சிவ மந்திரம்

    அஸ்வினி ஸ்ரீமதாத்மனே
    குணைகஸிந்தவே நம சிவாய
    தாமலேச தூதலோக
    பந்தவே நம சிவாயநாம
    சோஷிதா நமத்

    பவாந்தவே நம சிவாய
    பாமரேதர ப்ரதாத
    பாந்தவே நம சிவாய

    ருத்ர மந்திரம்

    நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
    மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
    த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய
    நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
    ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.
    சிங் சிங் சிவாய ஓம்

    மூல மந்திரம்

    ஓம் நம சிவாய
    ஓம் சிவாய போற்றி
    ஓம் மஹேஸ்வராய போற்றி
    ஓம் சம்பவே போற்றி
    ஓம் பினாகினே போற்றி
    ஓம் சசிசேகராய போற்றி
    ஓம் வாம தேவாய போற்றி

    ஓம் விரூபக்ஷாய போற்றி
    ஓம் கபர்தினே போற்றி
    ஓம் நீலலோஹிதாய போற்றி
    ஓம் சங்கராய போற்றி
    ஓம் சூலபாணயே போற்றி
    ஓம் கட்வாங்கினே போற்றி

    ஓம் விஷ்ணுவல்லபாய போற்றி
    ஓம் சிபி விஷ்டாய போற்றி

    ஓம் அம்பிகா நாதாய போற்றி
    ஓம் ஸ்ரீ கண்டாய போற்றி
    ஓம் பக்த வத்ஸலாய போற்றி
    ஓம் பவாய போற்றி
    ஓம் சர்வாய போற்றி
    ஓம் திரிலோகேசாய போற்றி
    ஓம் சிதிகண்டாய போற்றி
    ஓம் சிவாப்ரியாய போற்றி
    ஓம் உக்ராய போற்றி
    ஓம் கபாலினே போற்றி

    ஓம் காமாரயே போற்றி
    ஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி
    ஓம் கங்காதராய போற்றி

    ஓம் லலாடாக்ஷாய போற்றி
    ஓம் காலகாளாய போற்றி
    ஓம் க்ருபாநிதயே போற்றி

    ஓம் பீமாய போற்றி
    ஓம் பரசுஹஸ்தாய போற்றி
    ஓம் ம்ருகபாணயே போற்றி
    ஓம் ஜடாதராய போற்றி
    ஓம் கைலாஸவாஸிநே போற்றி
    ஓம் கவசிநே போற்றி

    ஓம் கடோராய போற்றி
    ஓம் திரிபுராந்தகாய போற்றி
    ஓம் வ்ருஷாங்காய போற்றி
    ஓம் வ்ருஷபாரூடாய போற்றி
    ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி
    ஓம் ஸாமப்ரியாய போற்றி

    ஓம் ஸ்வரமயாய போற்றி
    ஓம் த்ரயீமூர்த்தயே போற்றி
    ஓம் அநீச்வராய போற்றி
    ஓம் ஸர்வஜ்ஞாய போற்றி
    ஓம் பரமாத்மநே போற்றி
    ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி

    ஓம் ஹவிஷே போற்றி
    ஓம் யக்ஞ மயாய போற்றி
    ஓம் ஸோமாய போற்றி
    ஓம் பஞ்வக்த்ராய போற்றி
    ஓம் ஸதாசிவாய போற்றி
    ஓம் விச்வேச்வராய போற்றி

    ஓம் வீரபத்ராய போற்றி
    ஓம் கணநாதாய போற்றி
    ஓம் ப்ரஜாபதயே போற்றி
    ஓம் ஹிரண்ய ரேதஸே போற்றி
    ஓம் துர்தர்ஷாய போற்றி

    ஓம் கிரீசாய போற்றி

    ஓம் கிரிசாய போற்றி
    ஓம் அநகாய போற்றி
    ஓம் புஜங்கபூஷணாய போற்றி
    ஓம் பர்க்காய போற்றி
    ஓம் கிரிதன்வநே போற்றி

    ஓம் கிரிப்ரியாய போற்றி
    ஓம் க்ருத்தி வாஸஸே போற்றி
    ஓம் புராராதயே போற்றி
    ஓம் மகவதே போற்றி
    ஓம் ப்ரமதாதிபாய போற்றி
    ஓம் ம்ருத்யுஞ்ஜயாய போற்றி

    ஓம் ஸூக்ஷ்மதனவே போற்றி
    ஓம் ஜகத்வ் யாபினே போற்றி
    ஓம் ஜகத் குரவே போற்றி

    ஓம் வ்யோமகேசாய போற்றி
    ஓம் மஹா ஸேன ஜனகயா போற்றி
    ஓம் சாருவிக்ரமாய போற்றி

    ஓம் ருத்ராய போற்றி
    ஓம் பூதபூதயே போற்றி
    ஓம் ஸ்தாணவே போற்றி
    ஓம் அஹிர் புதன்யாய போற்றி
    ஓம் திகம்பராய போற்றி
    ஓம் அஷ்டமூர்த்தயே போற்றி

    ஓம் அநேகாத்மநே போற்றி
    ஓம் ஸாத்விகாய போற்றி
    ஓம் சுத்த விக்ரஹாய போற்றி
    ஓம் சாச்வதாய போற்றி
    ஓம் கண்டபரசவே போற்றி

    ஓம் அஜாய போற்றி

    ஓம் பாசவிமோசகாய போற்றி
    ஓம் ம்ருடாய போற்றி
    ஓம் பசுபதயே போற்றி
    ஓம் தேவாய போற்றி
    ஓம் மஹாதேவாய போற்றி

    ஓம் அவ்யயாயே போற்றி
    ஓம் ஹரயே போற்றி
    ஓம் பூஷதந்தபிதே போற்றி
    ஓம் அவ்யக்ராய போற்றி
    ஓம் பகதேத்ரபிதே போற்றி
    ஓம் தக்ஷாத்வரஹராய போற்றி

    ஓம் ஹராய போற்றி
    ஓம் அவ்யக்தாய போற்றி
    ஓம் ஹஸஸ்ராக்ஷாய போற்றி
    ஓம் ஸஹஸ்ரபதே போற்றி
    ஓம் அபவர்க்கப்ரதாய போற்றி

    ஓம் அனந்தாய போற்றி
    ஓம் தாரகாய போற்றி
    ஓம் பரமேஸ்வராய போற்றி
    தொடர்ச்சியாக ஐந்து பஞ்சமிகளில் விரதம் இருந்து இந்த மந்திரத் சொல்லி வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரத்தை அள்ளித் தருவாள் வாராஹி.
    சப்த மாதர்களில் ஐந்தாவதாகத் தோன்றியவள் தான் வாராஹி. இவளே சேனாதிபதி. இவள் விஷ்ணு அம்சம். பாண்டவர்களின் கிருஷ்ண பரமாத்மா போன்று நம்மை துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யவும், எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்கவும் வாராஹி வழிபாடு சாலச் சிறந்தது.

    ஓம் ச்யாமளாயை விக்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வராஹி ப்ரசோதயாத்

    என்ற இந்த வராஹி மந்திரத்தை 108 முறை ஜெபித்து (இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்)

    நாயகி, நான்முகி…மாலினி ,வாராஹி, சூலினி மாதங்கி என்றாயகி யாதி உடையாள் சரணம்’ என்றும், ‘பயிரவி, பஞ்சமி…வாராஹி என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே’  என்றும் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் கொண்டாடிய அன்னையின் வாராஹி வழிபாடு நம்மை அனைத்து இன்னல்களில் இருந்தும் காப்பாற்றுகிறது.
    திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.
    விரித்த பல்கதிர்கொள் சூலம்
    வெடிபடு தமருகம்கை
    தரித்ததோர் கோலகால பைரவனாகி
    வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
    ஒண்திருமேனி வாய் விள்ளச்
    சிரித்தருள் செய்தார் சேறைச்
    செந்நெறிச் செல்வனாரே

    திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.
    ×