search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
    • புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் பிர சித்தி பெற்ற மிகவும் பழமையான ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

    ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் தர்மகர்த்தா பூவை எம். ஞானம் தலைமையில் கும்பாபிஷேக விழா குழு அமைக்கப்பட்டு கோவில் முழுமையாக புதுப் பிக்கப் பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் விழா தொடங்கியது.

    2-ம் நாள் யாகசாலை பூஜையில் திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி , எந்திர பூஜைகள் நடைபெற்றன. 3-ம் நாள் பூஜையில் லட்சுமி சஹஸ்ரநாமம் பாராயணம், மந்திர வேள்வி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜை கள் நடைபெற்றன.

    நான்காம் நாள் நேற்று சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, கணபதி பூஜை, நான்கு கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து இன்று காலை சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டு கலசங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊத்துக்கோட்டு எல்லையம்மன் கோயில் கோபுர கலசத்தின் மீது ஊற்றி சிவாச்சாரியார் களால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபி ஷேகத்தை கண்டுகளித்து தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தாவும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான பூவை எம்.ஞானம், நிர்மலா ஞானம் மற்றும் குடும்பத் தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×