என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கிச்சன் கில்லாடிகள்
கிச்சன் கில்லாடிகள்
கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துகள் கடலை பருப்பில் உள்ளதால் இதை சாப்பிட்டு வரும் நபர்களுக்கு எலும்புகள் வலிமை பெறும்.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கப்,
துருவிய வெல்லம் - 1½ கப்,
பல்லு பல்லாகக் கீறிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உடைத்த முந்திரித்துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
வெறும் வாணலியில் கடலைப்பருப்பை லேசாக வறுக்கவும்.
வறுத்த கடலைப்பருப்பை குக்கரில் போட்டு தேவையான அளவு நீர் ஊற்றி ரொம்பவும் குழையாமலும் உதிர் உதிராக இல்லாமலும் வேக விட்டு எடுக்கவும்.
வெந்த பருப்பில் வெல்லத்தினைச் சேர்த்து கொதிக்க விடவும்.
வெல்லமும், பருப்பும் ஒன்றாகச் சேர்ந்ததும் வாணலியில் நெய் ஊற்றி தேங்காய், முந்திரியை வறுத்துக் கொதிக்கும் பாயாசத்தில் சேர்த்து ஏலப்பொடி தூவி இறக்கவும்.
இப்போது சூப்பரான கடலைப்பருப்பு பாயாசம் ரெடி.

வெஜிடபிள் சமோசாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த சமோசாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - 2 கப்பு
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தனியா - 1/2 ஸ்பூன்
சாட் மசாலா- 1 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
தண்ணீர், மைதா - 3 ஸ்பூன்
உருளை கிழங்கு- 4
பெரிய வெங்காயம் - 2
பட்டாணி- 1/4 கப்பு
இஞ்சி பேஸ்ட் - 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
செய்முறை :
2 டீஸ்பூன் மைதா மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பசை போல் கரைத்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மைதா மாவுடன் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, மிளகாய், பட்டாணி, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும்
பிறகு நறுக்கிய உருளைகிழங்கு, தனியா தூள், கரம் மசாலா, சீரக தூள், சாட் மசாலா,எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி வேக வைக்கவும்.
இந்த கலவை நன்றாக வெந்ததும், இறக்கி ஆறவைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பிசைந்து வைத்த மைதா மாவை சப்பாத்தி கல்லில் வட்டமாக தேய்த்து, இரண்டாக கட் செய்து, முக்கோண வடிவத்தில் சுருட்டி, உருண்டையாக செய்து வைத்த மசாலாவை அதில் வைத்து மடித்து, மைதா தண்ணீர் பசையை வைத்து ஓரங்களை ஒட்டவும்.
இறுதியில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மடித்து வைத்த சமோசாவை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது கடை ஸ்டைலில் வெஜிடபிள் சமோசா ரெடி !!!

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க சத்தான மற்றும் சுவையான ரெசிபி இந்த பொப்பட்லு. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 1 கப்
வெல்லம் - 1 கப்
கோதுமை மாவு - ¾ கப்
மைதா - ¾ கப்
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - ¼ தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 கப்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூரணம் தயாரிக்க:
முதலில் வெல்லத்தையும், ஏலக்காயையும் தனித்தனியாகப் பொடித்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். கடலை பருப்பை சுத்தம் செய்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு நன்றாக வேகவைத்து தண்ணீரை வடிகட்டி மசித்துக்கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். அதை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் வெல்லம் நன்றாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் மசித்து வைத்திருக்கும் கடலை பருப்பு, வெல்லப்பாகு, கால் மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும். கலவையில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை மிதமான சூட்டில் வதக்கவும். பூரணம் கெட்டியாகாமல் தளர்வாக இருக்கும்போதே அடுப்பை அணைக்கவும். பூரணத்தை அடுப்பின் வெப்பத்திலேயே வைத்திருக்கவும்.
மேல் மாவு தயாரிக்க:
அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவையும், மைதா மாவையும் சமஅளவு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் கால் மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு இந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தைவிட மிருதுவாக இருக்குமாறு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அதில் 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, மாவின் வெளிப்புறம் முழுவதும் தடவி சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும். அதன் பிறகு ஒரு பட்டர் பேப்பரில் எண்ணெய்யைத் தடவவும். அதில் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து உருண்டையாக உருட்டி, கைகளாலேயே பக்குவமாக சப்பாத்தி வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.
பின்னர் பூரணத்தை உருண்டையாக உருட்டி, தட்டிய மாவின் நடுவில் வைத்து, மாவை மடித்து மீண்டும் உருட்டிக் கொள்ளவும்.
இந்த உருண்டையை எண்ணெய்யில் தோய்த்து பட்டர் பேப்பரில் வைத்து மீண்டும் கைகளின் மூலம் சப்பாத்தி வடிவத்தில் பக்குவமாகத் தட்டவும். பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அது சூடானதும் மிதமான தீயில் தட்டி வைத்திருக்கும் மாவைப் போட்டு அதன் மேலே நெய்யை தடவவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு, மீண்டும் நெய்யை தடவி சுட்டு எடுக்கவும். இப்பொழுது சூடான மற்றும் இனிப்பான ‘பொப்பட்லு’ தயார்.

மாம்பழத்தைப் பயன்படுத்தி ஸ்மூத்தி, மில்க் ஷேக், அல்வா, ஐஸ்கிரீம், பர்பி என பலவகையான உணவுகள் தயாரிக்க முடியும். அந்த வரிசையில், இன்று சுவையான ‘மாம்பழ கேசரி’ எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கே காணலாம்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், சுவை மட்டுமில்லாமல் சத்துக்களும் கொண்டது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள், அன்றாட வாழ்க்கை முறையில் உடலில் சேரும் நச்சுக்களை நீக்குகின்றன. மாம்பழம் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள் நீங்கும். சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும். பார்வைத்திறன் மற்றும் இதயத்தின் செயல்பாடு மேம்படும்.
மாம்பழத்தைப் பயன்படுத்தி ஸ்மூத்தி, மில்க் ஷேக், அல்வா, ஐஸ்கிரீம், பர்பி என பலவகையான உணவுகள் தயாரிக்க முடியும். அந்த வரிசையில், எல்லோரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான ‘மாம்பழ கேசரி’ எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கே காணலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 250 கிராம்
நன்றாகப் பழுத்த மாம்பழம் - 1
சர்க்கரை - 75 கிராம்
நெய் - 150 மில்லி
ஏலக்காய் - 2
முந்திரி - தேவையான அளவு
தண்ணீர் - 750 மில்லி
செய்முறை:
மாம்பழத்தின் மேல் தோலை நீக்கி நன்றாக மசித்துக்கொள்ளவும்.
சிறிய பாத்திரத்தில் நெய் ஊற்றி உருகியதும், முந்திரியைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில் மேலும் சிறிது நெய் ஊற்றி சூடானதும், ரவையைக் கொட்டி பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
அடுத்து அதில் வறுத்த ரவையை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும்.
ரவை பாதி அளவு வெந்ததும், சர்க்கரை மற்றும் மாம்பழத்தைக் கலந்து கேசரி பதம் வரும் வரை கிளறவும்.
இப்போது அதில் மீதமிருக்கும் நெய்யை ஊற்றி நன்றாகக் கிளறவும்.
கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரியை கேசரியின் மேல் தூவி அலங்கரிக்கவும்.
சுவையான ‘மாம்பழ கேசரி’ தயார்.

கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தர்பூசணி சாறு - அரை கப்
ஓட்ஸ் - கால் கப்
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - தேவையான அளவு
முந்திரி பருப்பு, பாதாம் - சிறிதளவு
செய்முறை:
ஓட்ஸை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.
பாலை கொதிக்கவைத்து ஆறவிடவும்.
பின்னர் அகன்ற பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஓட்ஸ் மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும் நீரில் ஊற்றி கிளறிவிடவும்.
ஓட்ஸ் வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
பின்னர் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் தர்பூசணி சாறை ஊற்றி கிளறி இறக்கி விடவும்.
பாதாம், முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து பாயாசத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

காரசாரமாக சமைக்கப்படும் உணவுப் பொருளை ஆங்கிலத்தில் ‘டெவில் ரெசிபி’ என்று அழைப்பார்கள். இந்திய சுவையில் தயாரிக்கப்படும் ‘எக் டெவில்’ ரெசிபியின் செய்முறையை இங்கு காணலாம்.
காரசாரமாக சமைக்கப்படும் உணவுப் பொருளை ஆங்கிலத்தில் ‘டெவில் ரெசிபி’ என்று அழைப்பார்கள். 1700-களின் ஆரம்பத்திலேயே இந்த வகை உணவுகள் மக்களால் அதிகமாக விரும்பப்படும் பட்டியலில் இடம் பிடிக்கத் தொடங்கிவிட்டது. அந்த வகையில் இந்திய சுவையில் தயாரிக்கப்படும் ‘எக் டெவில்’ ரெசிபியின் செய்முறையை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
முட்டை - 5
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கறி மசாலா தூள் 1½ தேக்கரண்டி
மிளகுத்தூள் - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சோளமாவு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
ரொட்டித் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
3 முட்டையை தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.
தனியா, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் மிதமான தீயில் வறுத்து தூளாக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் மஞ்சள் தூள், தனியா கலவை, கறி மசாலா தூள், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித் தழை, உப்புச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு கலவையை சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வேறொரு சிறிய பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் சோளமாவு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
வேகவைத்த முட்டையை இரண்டு பாகமாக வெட்டி, அதன் மேல் மிளகுத்தூளை தடவவும். மிளகுத்தூள் தடவிய முட்டையைச் சுற்றிலும் உருளைக்கிழங்கு கலவையைக் கொண்டு முட்டை வடிவத்தில் மூடவும்.
பின்பு அதனை முட்டைக் கலவையில் நனைத்து, ரொட்டித் தூளில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பேரீச்சம்பழம் மலச்சிக்கலை போக்கிடும் தன்மை கொண்டது. பித்த சம்பந்தமான நோய் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
தேவையான பொருட்கள்:
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 20
பால் - 2½ கப்
முந்திரி மற்றும் பாதாம் - 10
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை :
பேரீச்சம் பழத்தை கழுவி ½ கப் பாலில் ஊற வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு பழத்தை ஊற வைத்த, பாலை விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
இதே நேரத்தில் 2 கப் பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி பாதியாக சுண்டும் அளவிற்கு காய்ச்சிக் கொள்ளவும்.
அரைத்த பேரிச்சை கலவையை காய்ச்சி பாலில் ஊற்றி லேசாக சிறிது நேரம் கொதிக்க விடவும்.
இதே நேரத்தில் 1 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பாதாம் அல்லது தேங்காய் சீவல்களை சிவக்க வறுத்து பாலில் சேர்க்கவும்.
தேவைப்படுபவர்கள் ஏலக்காய் அல்லது குங்குமப்பூவையும் கூட சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பாயசத்திற்கு சர்க்கரையோ வெல்லமோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
சூப்பரான பேரீச்சம்பழ பாயாசம் ரெடி.

மீனை சற்று வித்தியாசமாக கட்லெட் போல் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், மீன் பிடிக்காத குழந்தைகளும் அவற்றை சுவைத்து சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள் :
துண்டு மீன் - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 3
கேரட் - 1
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை - 2 டீஸ்பூன்
முட்டை - 2
பிரெட் தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
மீனை நன்கு கழுவி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, உதிர்த்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கையும் வேக வைத்து, தோலை நீக்கி உதிர்த்துக் கொள்ளவும்.
கேரட்டை துருவிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி, மீன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
வதங்கியதும், அதில் உருளைக்கிழங்கு, கேரட் போட்டு வதக்கவும்.
பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு பிரட்டி, இறக்கி விடவும்.
இந்த கலவையை அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை, பச்சை வாசனை போகும் வரை வதக்கினால் போதும்.
பின்னர் இதனை கட்லெட் போல் தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி, மிளகுத்தூள் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய வைக்க வேண்டும்.
எண்ணெயானது காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லேட்டை, முட்டை கலவையில் நனைத்து, பிரெட் தூளில் பிரட்டி உடனே எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான மீன் கட்லெட் ரெடி!!!

மீல்மேக்கரில் பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மீல்மேக்கரில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 1 கப்,
மீல்மேக்கர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
வெங்காயம் - 1,
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
பட்டை தூள், கிராம்புத் தூள், சோம்பு தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - சிறிது,
புதினா, கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
நெய் + எண்ணெய் - 2 டேபிஸ்பூன்.
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு, மீல்மேக்கர், அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி.
வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

சிக்கன் கபாப் என்றால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். கடையில் வாங்கி சாப்பிட்ட சிக்கன் கபாபை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ (துண்டுகளாக வெட்டியது)
தயிர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து முள் ஸ்பூனால் நன்றாக சிக்கனை நன்றாக குத்தி விடவும். அப்போது தான் மசாலா நன்றாக உள்ளே ஏறும்.
ஒரு பௌலில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், கேசரி பவுடர், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்
பின்னர் அதில் சிக்கனை போட்டு கலந்த வைத்த பேஸ்ட்டை தடவி, ஒரு மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஊறவைத்த சிக்கனை உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து, பிரட்டி வைக்க வேண்டும்.
அடுத்து, அந்த துண்டுகளை கிரில் மிஸினில் வைத்து, சிக்கன் துண்டுகளை நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
இறுதியில் அதன் மேல் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு, மீண்டும் ஒரு நிமிடம் கிரில் மிஸினில் வைத்து எடுத்து பரிமாற வேண்டும்.
இப்போது சுவையான சிக்கன் கபாப் ரெடி.

100 கிராம் சோயாவில் 52 கிராம் அளவிற்கு புரோட்டீன் இருக்கிறது. 13 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. சோயாவில்அதிக அளவு புரோட்டீன் இருப்பதால் சைவம் மட்டும் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக இருக்கிறது.
தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் - 200 கிராம்
சோள மாவு - 2 டீஸ்பூன்
மைதா மாவு - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்கவைக்கவும். பிறகு கொதிக்கும் அந்த தண்ணீரில் மீல்மேக்கர் போட்டு வேகவைத்து எடுக்கவும். பிறகு அதனை வேறு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் இல்லாமல் புழிந்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு அதனுடன் சோள மாவு, மைதா மாவு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த மீல்மேக்கரை போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான சோயா 65 தயார்.

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுக்க இந்த பிரெட் ரோல் ஏற்றது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - அரை கப்
பொடித்த வெல்லம் - முக்கால் கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி - தலா அரை டீஸ்பூன்
முழு பிரெட் - ஒன்று
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
கடலைப்பருப்பை அழுத்தும் பதத்தில் வேகவைத்து, ஆறியதும் மிக்ஸியில் விட்டுவிட்டு ஓடவிட்டு உதிர்த்து வைக்கவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு கேரட் துருவலை ஈரப்பதம் போக வதக்கி, தேங்காய்த் துருவலைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
இதனுடன் வெல்லம், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி சேர்த்து வெல்லம் இளகியதும் கடலைப்பருப்பைச் சேர்த்துக் கிளறி ஆறவைக்கவும்.
பிரெட்டை நீளவாக்கில் தேவையான எண்ணிக்கையில் ஸ்லைஸ் செய்து, ஓரம் நீக்கி தண்ணீரில் நனைத்து, துணியில் வைத்து அழுத்தி, தண்ணீர் நீக்கியதும் கடலைப்பருப்புக் கலவையை நடுவில் வைத்துச் சுருட்டவும். தோசைக்கல்லில் நெய்விட்டு டோஸ்ட் செய்யவும்.
இப்போது சுவையான பிரெட் ரோல் ரெடி.

×

X