search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெற்ற வெற்றி மீடியாக்கள், சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்களின் வாயை அடைக்கும் என பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவிதுள்ளார்.
    பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் சிறப்பான வகையில் ஆட்டத்தை தொடங்கவில்லை. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக படுதோல்வியடைந்தது. அதன்பின் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிராக தோல்வியடைந்தது. ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றின் மூலம் 3 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் அந்த அணி மீது கடும் விமர்சனம் எழும்பியது.

    இந்நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றி விமர்சனங்கள் செய்த வாயை அடைக்கும் என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘போட்டியின் தொடக்கத்தில் தோல்வியடைந்து அதன்பின் சிறப்பாக பாகிஸ்தான் விளையாடுகிறது என்பதை ஏற்க முடியாது. நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெறவே விரும்புகிறோம்.



    நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் இந்த கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காகத்தான் ஒவ்வொரு நாளும் கடுமையாக பயிற்சி எடுக்கிறோம்.

    கடந்த வாரம் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்கள். குறிப்பாக மீடியாக்கள், சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்களால் நம்பமுடியாத அளவிற்கு காயப்படுத்தப்பட்டார்கள். இந்த போட்டியின் மூலம் சரியான எதிர்வினை ஆற்றியுள்ளோம். இந்த வெற்றி அவர்களின் வாயை அடைக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் இடது கை சுழற்பந்து வீச்சாளர் முகமது அமிர் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். உலகக்கோப்பைக்கான முதற்கட்ட பாகிஸ்தான் அணியில் அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது விமர்சனம் எழுந்தது.

    இதனால் ஐசிசி-யின் காலக்கெடுவுக்கு முன் முகமது அமிர் அணியில் சேர்க்கப்பட்டார். பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட இங்கிலாந்தில் முகமது அமிர் சிறப்பாக பந்து வீசி அசத்தி வருகிறார்.

    இதுவரை பாகிஸ்தான் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் அமிர் 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் 6 போட்டிகளில் 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 6 போட்டிகளில் 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தி  3-வது இடத்தில் உள்ளார்.

    இந்திய அணியை பொறுத்தவரையில் சாஹல் 4 போட்டிகளில் 8 விக்கெட்டும், பும்ரா 7 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.



    ரன் குவிப்பில் வங்காள தேச வீரர் ஷாகிப் அல் ஹசன் 6 போட்டியில் 476 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 447 ரன்களுடன் 2-வது இடத்திலும், ஜோ ரூட் 424 ரன்களுடன் 3-வது இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 396 ரன்களுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.



    கேன் வில்லியம்சன் 373 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும், ரோகித் சர்மா 320 ரன்களுடனுன் 6-வது இடத்திலும் உள்ளனர்.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹரிஸ் சோஹைலின் ஆட்டம் பட்லரை போன்று இருந்தது என சர்பராஸ் அகமது புகழாரம் சூட்டியுள்ளார்.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 30 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹரிஸ் சோஹைல் களம் இறங்கினார். அவர் 59 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    போட்டி முடிந்த பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ஹரிஸ் சோஹைல் ஆட்டம் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார். இதகுறித்து சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி ஒரு அணியாக கூட்டு முயற்சிக்கு கிடைத்தது. தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். அதன்பின் ஹரிஸ் சோஹைல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் ஜோஸ் பட்லர் ஆட்டத்தை போன்று இருந்தது.



    தொடரின் தொடக்கத்தில் அணி காம்பினேசன் காரணமாக ஹரிஸ் சோஹைலுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. ஆனால், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற வேட்கையில் களம் இறங்கி அசத்தினார். அணியில் சோஹைல் முற்றிலும் மாறுபட்ட வீரர்’’ என்றார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் முகமது ஷமி சிறப்பாக பந்து வீசுவதற்கு சச்சின் தெண்டுல்கரின் பேச்சு உத்வேகமாக அமைந்துள்ளது.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. இவருக்கு தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைத்து. இக்கட்டான நிலையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில் சச்சின் தெண்டுல்கரின் பேச்சுதான் ஷமிக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும். அதில் எந்த தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது. ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்போது, சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.



    உங்களுடைய நேரம் வரும். அந்த நேரத்தை மிகவும் விரைவாக பெறுவீர்கள். புவி காயத்தை நான் விரும்பவில்லை. என்றாலும், உங்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது என்றேன்.

    புவனேஷ்வர் குமாரின் துரதிருஷ்டவசமான காயம், முகமது ஷமியை ஆடும் லெவன் அணியில் விளையாட அனுமதித்துள்ளது. ஷமி முதல் பந்தில் இருந்தே தொடர்ச்சியாக மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசினார்’’ என்றார்.
    நியூசிலாந்துக்கு எதிராக அதிரடியாக விளையாடி 101 ரன்கள் குவித்து அணியை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றதால் பிராத்வைட்டை பென் ஸ்டோக்ஸ் புகழ்ந்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் 164 ரன்கள் அடிப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து.

    கார்லோஸ் பிராத்வைட் அதிரடியாக விளையாடி 82 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 101 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி மூன்று ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை மேட் ஹென்ரி வீசினார். இந்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் விளாசிய அவர், 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

    இந்த ஓவரில் 25 ரன்கள் குவித்ததால் கடைசி இரண்டு ஓவரில் 8 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் நீசம் வீசிய 49-வது ஓவரில் துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இதனால் ஐந்து ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது.

    2016-ல் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்சர்கள் விளாசி அணியை வெற்றிபெற வைத்தார். இந்த போட்டியை வாழ்நாளில் பென் ஸ்டோக்ஸால் மற்ற முடியாது.



    நியூசிலாந்துக்கு எதிரான பிராத்வைட்டின் ஆட்டம் எனக்கு கொல்கத்தா போட்டியை ஞாபகப்படுத்தியது என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டரில் ‘‘முதலில் விராட் கோலி, தற்போது பிராத்வைட், நான் இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், நியூசிலாந்துக்கு எதிராக பிராத்வைட் விளையாடியது நம்பமுடியாத வகையில் இருந்தது. 2016-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டம் மீண்டும் நடைபெறுவது போன்று இருந்தது’’ என்று பதிவிட்டுள்ளார்.
    விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் அபாரதத்திற்கு உள்ளாகியுள்ளதால் அரையிறுதி போட்டியில் பங்கேற்க ஆபத்து வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்த்தும், நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்தும் விளையாடின.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அப்பீல் கேட்ட விவகாரத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு விவகாரத்தில் கடந்த 24 மாதங்களுக்குள் விராட் கோலி சிக்கியுள்ளார். இதனால் சஸ்பெண்ட் செய்வதற்கான இரண்டு தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றுள்ளார். வரும் போட்டிகளிலும் இதுபோன்ற செயல்களால் ஒருவேளை நான்கு அல்லது அதற்கு மேல் புள்ளிகள் பெற்றுவிட்டால் அது சஸ்பெண்ட் நடவடிக்கையாக மாறிவிடும்.

    நான்கு புள்ளிகளுக்கு மேல் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 இதில் எது முன்னதாக வருகிறதோ? அதில் விளையாட தடைவிதிக்கப்பட்டும். அந்த வகையில் இந்தியா இன்னும் நான்கு லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டியுள்ளது. ஒருவேளை மோசமான சம்பவத்தால் விராட் கோலி நான்கு புள்ளிகள் பெற்றுவிட்டால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடுவது கஷ்டமாகிவிடும்

    அதேபோல் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்கள் வீசி முடிக்கவில்லை என 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்னொரு போட்டியில் அபராதம் விதிக்கப்பட்டால் கேன் வில்லியம்சனும் தடைக்கு உள்ளாவார்.

    இப்படி நடந்தால் இரண்டு அணிகளும் பேராபத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை விராட் கோலி தடைபெற்றால், அதை இந்திய அணியால் ஜீரணிக்க முடியாது. அதேபோல் கேன் வில்லியம்சன் தடைபெற்றால், நியூசிலாந்தால் அதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
    ஆப்கானிஸ்தான் போட்டியில் டெத் ஓவர் பவுலர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது என இந்திய பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. விராட் கோலி (67), கேதர் ஜாதவ் (52) ஆகியோரின் அரைசதத்தால் 224 ரன்கள் சேர்த்தது. பின்னர் 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது.

    ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 45 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 30 பந்தில் 40 ரன்களே தேவைப்பட்டது. அப்போது முகமது நபி 35 ரன்களுடனும், ரஷித் கான் 10 ரன்களும் அடித்து நல்ல நிலையில் இருந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் வசம் மேட்ச் சென்றது.

    46-வது ஓவரில் சாஹல் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து ரஷித் கானை சாய்த்தார். 47-வது ஓவரில் பும்ரா 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 18 பந்தில் 24 ரன்கள் தேவைப்பட்டது. ஷமி 48-வது ஓவரில் 3 ரன்களும், பும்ரா 49-வது ஓவரில் 5 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஷமி கடைசி ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார்.

    இந்தியா வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், டெத் பவுலர்கள் மீது நம்பிக்கை இருந்தது என அரைசதம் அடித்த கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேஜர் ஜாதவ் கூறுகையில் ‘‘உண்மையிலேயே நாங்கள் எங்களுடைய டெத் ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளர்களை நம்பினோம். பும்ரா நம்பர் ஒன் பந்து வீச்சாளர். ஆப்கானிஸ்தானின் ஒரு பார்ட்னர்ஷிப்பை வீழ்த்திவிட்டால், அடுத்த வரும் பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

    அதனால் முக்கியமான கட்டத்தில் ஒரு விக்கெட் தேவை என்பதை புரிந்து வைத்திருந்தோம். ஆடுகளம் ஸ்லோவாக இருந்தது. அவர்கள் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினார்கள். பந்து டர்னிங் ஆகியதால், ஷாட்டுகள் ஆட கடினமாக இருந்தது.



    இதுபோன்ற ஆடுகளத்தில் எப்படிப்பட்ட ஷாட்டுகள் மூலம் ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை ஆராய வேண்டும். எங்களுடைய வழக்கமான திட்டம் 250 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்பதுதான். நாங்கள் 250 முதல் 260 வரையில் டார்கெட் நிர்ணயிக்க விரும்பினோம்.

    ஆனால், 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டனர். ஆகவே, பீல்டிங்கில் 20 முதல் 30 ரன்களை கட்டுப்படுத்த விரும்பினோம். உண்மையிலேயே, குறைந்த ஸ்கோருக்கும் எதிரணியை மடக்கிய பந்து வீச்சாளர்களுக்கே அனைத்து சிறப்புகளும்’’ என்றார்.
    லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு 309 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 30-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணியின் இமால் உல் ஹக், பஹர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்தில் ஆட்டமிழந்தனர். இமாம் உல் ஹக் 44 ரன்களும், பஹர் ஜமான் 44 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.5 ஓவரில் 81 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. நட்சத்திர வீரர் பாபர் ஆசம் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.



    பாபர் ஆசம் ஆட்டமிழக்கும்போது பாகிஸ்தான் 41.2 ஓவரில் 224 ரன்களே எடுத்திருந்தது. அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பாகிஸ்தான் 300 ரன்னைத் தாண்டியது. அவர் 59 பந்தில் 89 ரன்கள் குவித்து கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்துள்ளது.

    பின்னர் 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சர்பராஸ் அகமது கொட்டாவி விட்டது விமர்சனத்திற்குள்ளான நிலையில், அவர் ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணி மீது ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக போட்டியின்போது கொட்டாவி விட்ட பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுவை அதிக அளவில் கிண்டல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கொட்டாவி விடுவது இயல்பானதுதான் என பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘கொட்டாவி விடுவது இயல்பானதுதான். நான் அந்த விஷயத்தை சுற்றியே இருக்க விரும்பவில்லை. எனது கொட்டாவில் மக்களுக்கு பணம் கிடைக்கும் என்றால், அது நல்ல விஷயம்தான’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த எம்எஸ் டோனியின் அட்வைஸ் முக்கிய காரணமாக இருந்தது என ஷமி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் சேஸிங்கை தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

    ஆனால் கடைசி நான்கு ஓவர்களை பும்ரா மற்றும் முகமது ஷமி சிறப்பாக வீச இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் 46 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 24 பந்தில் 32 ரன்கள் தேவைப்பட்டது.

    47-வது ஓவரை பும்ரா  வீசினார். முதல் இரண்டு பந்துகளில் ஒரு ரன் விட்டுக்கொடுத்த பும்ரா, 3-வது பந்தில் சிக்ஸ் விட்டுக்கொடுத்தார். ஷார்ட் பிட்ச் ஆக வீசப்பட்டதை முகமது நபி டீப் மிட்விக்கெட் திசையில் சிக்சருக்கு தூக்கினார்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் இந்திய பந்து வீச்சாளர்கள் யார்க்கர் யுக்தியை பயன்படுத்தினர். யார்க்கர் மூலம் எதிரணியை திணறடித்தனர். கடைசி 9 பந்துகளையும் பும்ரா யார்க்கராகவே வீசினார். முகமது ஷமியும் யார்க்க மட்டுமே வீச வேண்டும் என்ற நோக்கத்தில் கடைசி ஓவரை வீசினார். கடைசி ஓவரின் 3-வது மற்றும் 4-வது பந்தில் முகமது ஷமி அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தினார்.

    5-வது பந்தில் விக்கெட் வீழ்த்தினால் ஹாட்ரிக் சாதனைப் பெறலாம் என்ற நோக்கத்தில் ஷமி பந்து வீச இருந்தார். அந்த நேரத்தில் எம்எஸ் டோனி ஆலோசனை வழங்கினார். அதுதான் ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்த உதவியாக இருந்தது என்று ஷமி தெரிவித்துள்ளார்.

    ஷமி இதுகுறித்து கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி என்னிடம், உங்களுடைய திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்ய முயற்சிக்க வேண்டாம். ஹாட்ரிக் சாதனைப் படைக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிதானது என்றார். அதை நான் சரியாகச் செய்தேன். ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள திணறியது. லோகேஷ் ராகுல் 30 ரன்களும், விராட் கோலி 67 ரன்களும், விஜய் சங்கர் 29 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    விராட் கோலி ஆட்டமிழக்கும்போது இந்தியா 30.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் எம்எஸ் டோனியுடன் கேஜர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். எம்எஸ் டோனி 26.2 ஓவரிலேயே களம் இறங்கினார். கேதர் ஜாதவ் - எம்எஸ் டோனி ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 14 ஓவரில் 57 ரன்களே எடுத்தது.

    இதனால் இந்தியாவின் ஸ்கோர் மிகவும் மந்தமான நிலையில் உயர்ந்தது. இறுதியாக 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களே சேர்த்தது.

    எம்எஸ் டோனி (36 பந்தில் 24 ரன்) - கேதர் ஜாதவ் (48 பந்தில் 31 ரன்) ஜோடி 84 பந்தில் 57 ரன்கள் மட்டுமே எடுத்தது மகிழ்ச்சி அளிக்கவில்லை என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘இந்திய அணி விளையாடிய விதம் எனக்கு சற்று ஏமாற்றம் அளித்தது. இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். குறிப்பாக எம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை. மிகவும் மந்தமாக விளையாடினார்கள்.

    நாம் 34 சுழற்பந்து வீச்சு ஓவர்களை எதிர்கொண்டு 119 ரன்கள் மட்டுமே சேர்த்தோம். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நாம் வலிமையாக இல்லை. இந்த விஷயத்தில் நேர்மையான நோக்கம் ஏதும் இல்லை’’ என்றார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் எல்பிடபிள்யூ கொடுக்காததால் நடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய விராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்று சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெறும் நிலையில் இருந்தது. அந்த அணி 28 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. ஷாஹிதி 21 ரன்களுடனும், ரஹ்மத் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    29-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தை ரஹ்மத் எதிர்கொண்டார். பும்ரா வீசிய பந்து பேட்டில் படாமல் ரஹ்மத்தின் காலை தாக்கியது. பும்ரா உள்பட இந்திய அணி வீரர்கள் அப்பீல் கேட்டனர். ஆனால், நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார்.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் கத்தினார். இதுகுறித்து ஐசிசி போட்டி நடுவரிடம் புகார் அளிக்கப்பட்டது. விராட் கோலியும் தனது தவறை ஒத்துக் கொண்டார். இதனால் போட்டியின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    ×