search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் மிக்க இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றுள்ளது.
    இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் ஆட்டம் லீட்ஸ் ஹெட்டிங்லியில் நடைபெற்றது. இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி அந்த அணியின் கருணா ரத்னே, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இலங்கை அணிக்கு தொடக்கத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கருணா ரத்னே 1 ரன்னிலும், குசால் பெரேரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
     
    3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அவிஷ்கா பார்னாண்டோ, குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பெர்னாண்டே 49 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 46 ரன்னிலும் ஆட்டமிழந்து அரைசதத்தை தவற விட்டனர்.

    அடுத்து வந்த முன்னாள் கேப்டன் மேத்யூஸ் கடைசி வரை நின்று 85 ரன்கள் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் இலங்கையால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களே அடிக்க முடிந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஆர்சர் ஜாப்ரா, மார்க் வுட் தலா மூன்று விக்கெட்டுக்களும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஒவரிலேயே தொடக்க வீரர் பிரிட்டோ, மலிங்காவின் பந்து வீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக  82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இலங்கை தரப்பில் மலிங்கா 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.
    பத்து நல்ல நாட்களை விட்டுவிட்டு அவர்கள் வசதிக்காக ஒரு கெட்ட நாளை நினைவில் கொள்கிறார்கள் என விமர்சனத்திற்கு ரஷித் கான் பதிலடி கொடுத்துள்ளார்.
    உலகின் தலைசிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவராக ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் திகழ்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் பேசப்படுவதற்கு இவரது பந்து வீச்சும் முக்கிய காரணம்.

    இங்கிலாந்துக்கு எதிரான போட்டி இவருக்கு மிகவும் மோசமானதாக அமைந்துவிட்டது. 9 ஓவரில் விக்கெட் ஏதுமின்றி 110 ரன்கள் வாரி வழங்கினார். இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

    இந்நிலையில் மக்கள் பத்து நல்ல நாட்களை விட்டுவிட்டு அவர்கள் வசதிக்காக ஒரு கெட்ட நாளை நினைவில் கொள்கிறார்கள் என ரஷித் கான் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘இங்கிலாந்துக்கு எதிரான போட்டி குறித்து நான் பெரிய அளவில் சிந்திக்கவில்லை. மக்கள் பத்து நல்ல நாட்களை மறுந்து விடுகிறார்கள். அவர்களின் மனதில் நிற்கும் அளவிற்கான ஒரு குறிப்பிட்ட மோசமான நாளை வசதியாக எடுத்துக் கொள்கிறார்கள். ரஷித் கான் கடந்த 10 நாட்களில் என்ன செய்தார்? என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்க விரும்புவதில்லை.



    நான் செய்த தவறு மீது கவனம் செலுத்தி, அடுத்த போட்டியில் நடக்காதவாறு பார்த்துக் கொள்வேன். விமர்சனம் பற்றி சிந்திக்க ஏதுமில்லை. இதை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்வது எனக்கு அவசியமானது’’ என்றார்.

    மேலும் புதிய கேப்டனான குல்பதின் நயிப் உடனான தொடர்பு குறித்து கேட்கையில் ‘‘நான் குல்பதின் நயிப்பிற்காகவோ, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்காகவோ விளையாடவில்லை. ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுகிறேன்’’ என்றார்.
    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 9 ஓவரில் 84 ரன்கள் விட்டுக்கொடுத்த ஹசன் அலி, இந்தியாவுக்கு ஆதரவாக ட்விட் செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 9 ஓவர்கள் வீசி 84 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இரு அணிகளுக்கான உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    இதனால் ஹசன் அலிக்கு எதிராக பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு, இந்திய ரசிகை ஒருவர் வாழ்த்து தெரிவித்ததுடன், இந்தியாவிற்கு உலகக்கோப்பை என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.



    அந்த ரசிகையின் ட்விட்டிற்கு ஹசன் அலி ‘‘இந்தியா வெற்றி வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர். இதனால் ஹசன் அலி தனது ட்விட்டை உடனடியாக நீக்கிவிட்டார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு மாறிய போதிலும், ரசிகர்களிடையே வார்த்தை போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
    லீட்ஸ் ஹெட்டிங்லியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு 233 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை
    இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் ஆட்டம் லீட்ஸ் ஹெட்டிங்லியில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி அந்த அணியின் கருணா ரத்னே, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இலங்கை அணிக்கு தொடக்கத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கருணா ரத்னே 1 ரன்னிலும், குசால் பெரேரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அவிஷ்கா பார்னாண்டோ, குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பெர்னாண்டே 49 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 46 ரன்னிலும் ஆட்டமிழந்து அரைசதத்தை தவற விட்டனர்.



    அடுத்து வந்த முன்னாள் கேப்டன் மேத்யூஸ் கடைசி வரை நின்று 85 ரன்கள் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் இலங்கையால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களே அடிக்க முடிந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஆர்சர் ஜாப்ரா, மார்க் வுட் தலா மூன்று விக்கெட்டுக்களும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் 233 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
    இரண்டு முறை உலகக்கோப்பையை வென்று கொடுத்த க்ளைவ் லாய்டுக்கு, வெஸ்ட் இண்டீஸின் ‘போட்டி பிளான்’ ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியதன் மூலம் அனைவரது கவனைத்தையும் ஈர்த்தது வெஸ்ட் இண்டீஸ்.

    முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 105 ரன்னில் சுருட்டியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 288 ரன்னை சேஸிங் செய்யும்போது 273 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. நடுவரின் மோசமான முடிவுகளால்தான் தோற்றோம் என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குற்றம்சாட்டினர். இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியதால், அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக வெஸ்ட் இண்டீஸும் இருக்கலாம் என கணிக்கப்பட்டது.

    ஆனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிட்ட நிலையில், இங்கிலாந்து மற்றும் வங்காள தேச அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மோசமாக தோல்வியடைந்தது. இதனால் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது எனக்கூறலாம்.

    குறிப்பாக வங்காள தேசத்திற்கு எதிராக 321 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்தித்தது. வங்காள தேசம் 41.3 ஓவரிலேயே சேஸிங் செய்து அசத்தியது. காட்ரெல், ஹோல்டர், ரஸல், கேப்ரியல், தாமஸ் ஆகிய ஐந்த வேகப்பந்து வீச்சாளர்களும் ‘ஷார்ட் பிட்ச் பவுன்சர்’ யுக்தியை பயன்படுத்தினர். வங்காள தேச பேட்ஸ்மேன்கள் அதை சிறப்பாக எதிர்கொண்ட போதும், வெஸ்ட் இண்டீஸ் போட்டியின் திட்டத்தை மாற்றவில்லை.

    பவுன்சர் என்ற ஒரே திட்டத்துடன்தான் வெஸ்ட் இண்டீஸ் களம் விளையாடியது ஏமாற்றம் அளிக்கிறது என்று முன்னாள் ஜாம்பவான் க்ளைவ் லாய்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து க்ளைவ் லாய்டு கூறுகையில் ‘‘வங்காள தேசத்திற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் விளையாடிய விதம் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரே திட்டத்துடன் (Game Plan) சென்றது. அவர்களின் போட்டி திட்டத்தில் மாற்றுவகை இல்லை.



    பவுன்சர் மூலம் வங்காள தேச வீரர்களை வீழ்த்த நினைத்த அவர்கள், இங்கிலாந்தின் சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

    மழை பெய்த போதிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் எப்போதுமே பவுன்சரால் மிரட்ட இயலாது. ஆடுகளம் க்ரீன் போன்று தெரியலாம். ஆனால், முழுவதும் க்ரீனாக இல்லை. அவர்கள் ஷார்ட் பிட்ச் பந்தை எதிர்கொள்ள தயாராக வந்தனர். 321 ரன்னை சேஸிங் செய்தது மிகப்பெரிய விஷயம். அதேவேளையில் வெஸ்ட் இண்டீஸ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது’’ என்றார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை சவுத்தாம்ப்டனில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா. முகமது ஷமி களம் இறங்குகிறார்.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை சவுத்தாம்ப்டனில் நடக்கும் 28-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா நல்ல நிலையில் உள்ளனர்.

    காயம் காரணமாக தொடக்க வீரர் ஷிகர் தவான் விலகியது பின்னடையாக கருதப்பட்டாலும் அதை இந்திய வீரர்கள் சமாளித்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தவானுக்கு பதில் ரி‌ஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று அவர் பயிற்சியில் ஈடுபட்டார்.

    பயிற்சியின்போது ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் லேசான காயம் அடைந்தார். இதனால் அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடாவிட்டால் தினேஷ் கார்த்திக் அல்லது ரி‌ஷப் பந்த் இடம் பெறலாம். பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் உள்ளனர். காயத்தால் அவதிப்படும் புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக முகமது ‌ஷமி இடம் பெறுகிறார்.

    தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை இந்தியா வீழ்த்தியது. நியூசிலாந்து உடனான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. பேட்டிங், பந்து வீச்சில் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி வரும் இந்தியா நாளைய போட்டியில் ஆப்கானிஸ்தானை எளிதாக வெல்லும். அந்த அணிக்கு எதிராக அதிக ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது.



    குல்பதீன் தலைமையிலான ஆப்கானிஸ்தான் இதுவரை தான் விளையாடிய 5 ஆட்டத்திலும் தோல்வி அடைந்துள்ளது. ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி கணக்கை தொடங்க வேண்டும் என்று போராடி வருகிறது. ஆனால் பேட்டிங், பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் திணறி வருகிறது.

    கடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை இங்கிலாந்து நொறுக்கி 397 ரன் குவித்தது. நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 9 ஓவரில் 110 ரன் விட்டு கொடுத்து மோசமான சாதனை படைத்தார். பலம் வாய்ந்த இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவது கடினம்.
    லீட்ஸ் ஹெட்டிங்லியில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் ஆட்டம் லீட்ஸ் ஹெட்டிங்லியில் இன்று மதியம் 3 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
    நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ஆஸ்திரேலியா - வங்காள தேச அணிகள் இடையேயான உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன் எடுத்தது. அதிக பட்சமாக வார்னர் 166 ரன்னும், ஆரோன் பிஞ்ச் (53) கவாஜா (89) ரன்னும் எடுத்தனர். 

    பின்னர் 382 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும், சவுமியா சர்காரும் ஆடினர். சவுமியா சர்கார் 10 ரன் அடித்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெறியேறினார். 

    அடுத்து வந்த ஷகிப்  அல் ஹசன் 41 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதைத்தொடர்ந்து வந்த முஷ்பிகுர் ரஹிம் தமிம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர். தமிம் இக்பால் அரை சதம் அடித்த சிறிது நேரத்தில் அவுட் ஆனார். அவர் 62 ரன் எடுத்தார். அடுத்து வந்த லிட்டான் தாஸ் 20 ரன்னிலும், மக்முதுல்லா 69 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 333 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
    உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியது குறித்து தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், பிரதமர் மோடி அறுதல் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஷிகர் தவான் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். தனது கையில் ஏற்பட்ட காயம், அதனால் அணியில் இருந்து விலகியது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.



    காயத்தால் விலகியுள்ள தவானுக்கு பாரத பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் ஆறுதல் கூறியுள்ளார். மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘டியர் தவான், ஆடுகளம்தான் உங்களை மிஸ் செய்ய இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், முன்னதாகவே நீங்கள் குணம் அடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் நீங்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு திரும்பி, இந்தியாவின் வெற்றிக்கு பங்களிக்க முடியும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் வார்னர் 166 ரன்கள் விளாச வங்காள தேசத்திற்கு 382 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா
    ஆஸ்திரேலியா - வங்காள தேச அணிகள் இடையேயான உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்தார்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 320-க்கு மேலான ரன்களை வங்காள தேசம் சேஸிங் செய்ததால், ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்யும் என எதிர்பார்த்தனர். ஆனால் பிஞ்ச் தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாவிடிலும், ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் வரும் வகையில் விளையாடினர். இதனால் ஆஸ்திரேலியா 9.3 ஓவரில் 50 ரன்னையும், 16.3 ஓவரில் 100 ரன்னையும் கடந்தது.


    ஆரோன் பிஞ்ச்

    டேவிட் வார்னர் 55 பந்திலும், பிஞ்ச் 47 பந்திலும் அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 20.5 ஓவரில் 121 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஆரோன் பிஞ்ச் 51 பந்தில் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் வார்னர் உடன் உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார்.

    அரைசதம் அடித்த பின் கவாஜா உடன் இணைந்து வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. டேவிட் வார்னர் 110 பந்தில் சதம் அடித்தார். இந்த உலகக்கோப்பையில் வார்னரின் 2-வது சதம் இதுவாகும். மறுமுனையில் கவாஜா 50 பந்தில் அரைசதம் அடித்தார்.

    ஆஸ்திரேலியாவின் 44.2 ஓவரில் 313 ரன்களாக இருக்கும்போது வார்னர் 147 பந்தில் 14 பவுண்டரி, ஐந்து சிக்சர்களுடன் 166 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் ருத்ர தாண்டவம் ஆடினார். மேக்ஸ்வெல் அதிரடியை பார்க்கும்போது ஆஸ்திரேலியா எளிதாக 400 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.


    பந்தை பவுண்டரிக்கு விரட்டும் வார்னர்

    ஆனால், மேக்ஸ்வெல் 10 பந்தில் 32 ரன்கள் குவித்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். கவாஜா 72 பந்தில் 89 ரன்கள் எடுத்த நிலையில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    ஆஸ்திரேலியா 49 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கீட்டது. மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. கடைசி ஓவரில் 13 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா ஒட்டுமொத்தமாக 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்துள்ளது.

    பின்னர் 382 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் சேஸிங் செய்து வருகிறது.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள விஜய் சங்கருக்கு 2-வது முறையாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பை அணியில் நீடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பிடித்துள்ளார். உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் பயிற்சி ஆட்டத்திற்கு தயாராகும்போது, கலீல் அகமது வீசிய பவுன்சர் பந்து விஜய் சங்கரின் முழங்கையை பலமாக தாக்கியது. அதிர்ஷ்டவசமாக முறிவு ஏதும் ஏற்படாததால், காயத்தில் இருந்து உடனடியாக மீண்டார்.

    முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத விஜய் சங்கர், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பிடித்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். தவான் இல்லாததால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.

    இதனால் விஜய் சங்கர் வரும் போட்டிகளில் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. நாளைமறுநாள் ஆப்கானிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. சவுத்தாம்ப்டனில் நேற்று மழை பெய்த போதிலும் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    விஜய் சங்கர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது பும்ரா வீசிய யார்க்கர் பந்து, அவரின் கால் விரல்களை பலமாக தாக்கியது. இதனால் விஜய் சங்கர் வலியால் துடித்தார். இன்றைய பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டபோதிலும், அடிக்கடி பிசியோ எடுத்துக் கொண்டார். இதனால் தவானையடுத்து விஜய் சங்கரும் வெளியேறும் நிலை ஏற்படுமோ? என்று ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.



    விஜய் சங்கர் காயம் குறித்து இந்திய அணிக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து வந்த தகவலில் ‘‘விஜய் சங்கருக்கு காயத்தால் வலி இருந்தது உண்மைதான். ஆனால் நேற்று மாலை வலி குறைந்துவிட்டது. அவருடைய காயம் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பல்வேறு மிஸ்ஸிங்கால் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து லீக் சுற்றோடு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தென்ஆப்பிரிக்கா.
    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய தென்ஆப்பிரிக்காவுக்கு, இந்த உலகக்கோப்பை தொடர் சிறப்பானதாக அமையவில்லை.

    மூன்று தோல்விகளுக்குப்பின் ஆப்கானிஸ்தானை மட்டுமே வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஐந்து போடடிகளில் 3 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், நேற்று நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் பல தவறுகள் மூலம் வெற்றி வாய்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    49 ஓவரில் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தென்ஆப்பிரிக்கா தனது பந்து வீச்சால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை சிறப்பாக கட்டுப்படுத்தியது. ஆனால், கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவருக்குத் துணையாக கொலின் டி கிராண்ட்ஹோம் 60 ரன்கள் சேர்த்தார்.

    நெருக்கடியான நேரத்தில் தென்ஆப்பிரிக்காவின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்ததால் தோல்வியை சந்தித்துள்ளது. 37-வது ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்சை டேவிட் மில்லர் பிடிக்க தவறினார். இதனால் 74 ரன்களில் அவுட்டாகுவதில் இருந்து கேன் வில்லியம்சன் தப்பினார்.

    இதே ஓவரின் கடைசி பந்தில் கேன் வில்லியம்சன் பந்தை அடிக்க முயற்சி செய்தார். பந்து பேட்டில் சரியாக படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. இம்ரான் தாஹிர் மட்டும் அப்பீல் கேட்டார். டி காக் ஏதும் கேட்கவில்லை. இதனால் டு பிளிசிஸ் டிஆர்எஸ் அப்பீல் கேட்கவில்லை. பின்னர் ரீபிளே-யில் பந்து பேட்டை உரசிச் சென்றது தெளிவாக இருந்தது. டிஆர்எஸ் கேட்டிருந்தால் வில்லியம்சன் அவுட்டாகியிருப்பார்.

    மேலும், ரபாடா வீசிய 41-வது ஓவரின் முதல் பந்தில் கேன் வில்லியம்சன் க்ரீஸ்-ஐ விட்டு நீண்ட தூரத்தில் இருக்கும்போது ரபாடா ஸ்டம்பை நோக்கி பந்தை வீசினார். அப்போது பந்து ஸ்டம்பில் படவில்லை. டேவிட் மில்லர் ஸ்டம்பிற்கு பின்னால் நின்று அவசரத்தில் பந்தை பிடித்து அடிக்க முயன்றார்.

    ஆனால் பந்து அவரது கையில் இருந்து நழுவிச் சென்றது. கையால் ஸ்டம்பை தாக்கினார். அத்துடன் தென்ஆப்பிரிக்காவின் வெற்றியும் கையில் இருந்து நழுவிச் சென்றது. 77 ரன்னில் இருந்து தப்பிய கேன் வில்லியம்சன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காம் அசத்தினார்.

    உலகக்கோப்பையில் எப்போதுமே தென்ஆப்பிரிக்காவுக்கு மழை சவாலாக இருந்து வருவது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நெருக்கடியான நிலையில் ஜாம்பவான்களின் கேட்ச் மிஸ், ரன்அவுட் மிஸ் ஆகியவற்றால் பரிதாபமாக தோல்வியை சந்தித்துள்ளது.



    1999 உலகக்கோப்பையின்போது ஸ்டீவ் வாக் அடித்த பந்தை கிப்ஸ் கேட்ச் பிடித்து, சந்தோசத்தை வெளிப்படுத்துவதற்கு வானத்தை நோக்கி பந்தை வீச முயன்றார். அப்போது பந்து அவரது கையில் இருந்து நழுவியது. இதனால் போட்டி டை ஆனது.

    2015 உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக முக்கியமான கட்டத்தில் டி வில்லியர்ஸ் அருமையான ரன்அவுட் வாய்ப்பை தவறவிட்டார். அத்துடன் வெற்றியையும் தவறவிட்டார்.

    இந்த உலகக்கோப்பையில் மில்லர் கேட்ச் மற்றும் ரன்அவுட்டை தவறவிட்டதால் லீக் சுற்றோடு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    ×